ஜூலை 22 2007
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 10
38 அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. 39 அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். 40 ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ' ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும் ' என்றார். 41 ஆண்டவர் அவரைப் பார்த்து, ' மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். 42 ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது ' என்றார்.
(http://www.arulvakku.com)
மறையுரை
இன்றைய நற்செய்தியில், யேசு நம் மன கவலைகளையும், மற்றும் வேதனைகளையும் பற்றி பேசுகிறார். இதனால், நாம் தடுமாறுவோம். கவனத்தை திசை திருப்பும். அந்த கவலைகள் உங்களை பாதிக்கும், ஏனெனில், அந்த கவலைகள் எல்லாம், நாம் கடவுள் மேல் எப்போதுமே வைக்க வேண்டிய கண்களை, அவரையே சார்ந்திருக்கும் நமது வாழ்வை திசை திருப்பி, நம் கவலைகளால் ஏதாவது தவறாகிவிடுமோ, நமது நிலை இன்னும் கீழ் நிலைக்கு தள்ளப்படுமோ? என்கிற எண்ணமே நம்மில் இருக்கும். அண்ணை மரியாள், "நல்ல விசயத்தை/முடிவை" தெரிவு செய்தாள். அவளுடை வாழ்வின் மிக முக்கியமான விசயம் என்னவென்றால், அவள் எப்போதுமே யேசுவிடமிருந்து கற்றுகொண்டிருந்தாள். நாம் நம்முடைய சுறுசுறுப்பான வாழ்க்கையை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, யேசுவிடமிருந்து கற்றுகொள்வோம். நாம் நம் கவலைகள் நிஜமாகவே கவலைக்குறியது அல்ல என்று யேசுவிடம் கற்றுகொள்வோம். நாம் யேசுவின் காலடியில் அமைதியாக உட்கார்ந்து அவரிடம் கேட்டால் தான், நாம் நம்பிக்கை பெறுவோம். அந்த நம்பிக்கை மன சஞ்சலத்தை போக்கும், மன கவலைகளை போக்கிவிடும். யேசுவின் மூலம் பெறும் ஞானத்தால், இந்த சோதனைகளிலிருந்து மீண்டு வருவோம். மார்த்தாள் படும் கவலை போல், மிக சிறிய கவலைகூட, நம் கண்களை யேசுவிடமிருந்து எடுத்து சென்று விடும். இது மாதிரி சிறு கவலை கூட பாவமாகும். யேசுவிடமிருந்து நம்மை திசை திருப்பும் எதுவும் பாவமாகும்.
நாம் ஏசுவை கவனித்து, அவரிடமிருந்து எப்படி பரிசுத்தத்துடன் இருப்பது என்று கற்றுகொண்டால்தான், நாம் பரிசத்துடனும், புனிதத்துடனும் வளர முடியும். அவர் அன்பு செய்வது போல் நம்மால் அன்பு செய்ய முடியாது. நாம் மற்ற்வர்களிடமிருந்து அன்பை பெற முடியாது. நாம் அமைதியான முறையில் யேசுவோடு அமர்ந்து, அவரோடு அரவணைப்பில் சிறிது நேரம் செலவிட்டால் தான் நாம் அவரை போல் அன்பு செய்ய முடியும், யேசுவை போல வாழ முடியும். கார் ஓட்டும் போது, அல்லது மர்றவர்களிடம் பேசும்போதும் ஜெபம் செய்வதும், அல்லது ஞாயிறு அன்று பிரசங்கம் கேட்பதும் போதுமானது அல்ல.
மனக்கவலைகள், குழப்பங்கள் எல்லாம் பயத்திலிருந்து வருபவை. பயம்தான் நம்மை யேசுவை நம் காட்சியிலிருந்து தொந்தரவு செய்கிறது. நாம் பயத்தை புரிந்து கொண்டு, அது மாதிரி நேரங்களில், யேசுவிடம் சென்று, அவரோடு அமர்ந்து, உங்கள் ப்ரச்னையை யேசுவிடம் பேசுங்கள். அவரிடம் அதற்கு பதில் இருக்கும். அவரிடமிருந்து உஙக்கு தேவையான உற்சாகமும், உறுதியும் கிடைக்கும்.
சுய பரிசோதனிக்கான கேள்வி:
உங்களிடம் எந்த கவலை அதிகம் கவலை கொள்ள செய்கிறது. எது உன்னை அதிகம் ஆர்வத்தை, எந்த ப்ரச்னை உன்னை பயமுறுத்துகிறது. அதையெல்லாம், ஒரு காகிதத்தில் எழுதுங்கள். அதனை யேசுவிடம் எடுத்து செல்லுங்கள். பரிசுத்த ஆவியிடம் வேண்டுங்கள். யேசு உனக்கு கற்று கொடுக்கும் பாடத்தை கற்றுகொள்ள பரிசுத்த ஆவி உங்களுக்கு உதவுவார். பைபிளை தேடுங்கள், உங்க்ளுக்கு உற்சாகமான செய்தி கிடைக்கும்.
© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Saturday, July 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment