Friday, September 21, 2007

ஞாயிறு 23 செப்டெம்பர் 2007 , நற்செய்தி , மறையுரை:

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 16

1 இயேசு தம் சீடருக்குக் கூறியது: ' செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. 2 தலைவர் அவரைக் கூப்பிட்டு, ' உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது ' என்று அவரிடம் கூறினார். 3 அந்த வீட்டுப் பொறுப்பாளர், ' நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. 4 வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும் ' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். 5 பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ' நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்? ' என்று கேட்டார். 6 அதற்கு அவர், ' நூறு குடம் எண்ணெய் ' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ' இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும் ' என்றார். 7 பின்பு அடுத்தவரிடம், ' நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்? ' என்று கேட்டார். அதற்கு அவர், ' நூறு மூடை கோதுமை ' என்றார். அவர், ' இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும் ' என்றார். 8 நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள். 9 ' ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள். 10 மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். 11 நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? 12 பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? 13 ' எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது. '


thanks to www.arulvakku.com


ஞாயிறு 23 செப்டெம்பர் 2007 , நற்செய்தி , மறையுரை:

இன்றைய நற்செய்தியில் எப்படி ஒருவர், ஒரே நேரத்தில் செல்வந்தராகவும், பரிசுத்தமாகவும் இருக்க முடியும் என்பதை விளக்குகிறது. பணமும் , சொத்துக்களும் தான் நமது கடவுளாக இருந்தால், நாம் பரிசுத்தமானவர்கள் இல்லை. நாம் கடவுளிடம் இருந்து பிரக்கப்பட்டிருக்கிறோம். ஏனெனில், நம்மிடம் உள்ள சொத்துக்களையும், பணத்தையும், மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதை கடவுளின் வார்த்தைகள் முக்கியபபடுத்துகிறது.

நம்மிடம் உள்ளதை பகிர்ந்து கொள்வதை விட, சொத்துக்கள சேர்ப்பது, நம்முடைய குறிக்கோளாக இருந்தால், கடவுள் நமது தலைவர் அல்ல. இந்த உண்மை, நம்மிடம் உள்ள சொத்துக்களுக்கும் மட்டுமல்ல, நம்மிடம் உள்ள மற்ற திறமைகளையும் சேர்த்து தான் குறிப்பிடபடுகிறது.

நாம் எல்லாரும், ஏதாவது ஓர் திறமையோடு, ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். நாம் அந்த திறமைகளை எப்படி மற்றவர்களுக்காக உபயோகிக்க போகிறோம்?

"நேர்மையற்ற செல்வங்கள்" என்று யேசு குறிப்பிடுவது யாதெனில், "மற்றவர்களுக்கு உரியதையும்" சேர்ந்தே ஆகும். எடுத்து காட்டாக மற்றவர்கள் பணத்தை உபயோகிக்கும்போது (வங்கி கடன்), நம்முடைய பயன்களுக்காக மட்டும் உபயோகித்தல், அது நேர்மையற்ற செல்வங்களாகிவிடும். கடவுளரசிற்கு உபயோகமில்லாமல், நாம் ஊழியம் செய்தால், நாம் நம்பிக்கயுள்ள ஊழியனாக இருக்க முடியாது.

அதே போல, மற்றவர்களுக்காக ஒதுக்க வேண்டிய நேரத்தை, தவறாக உபயோகப்படுத்தினால், நாம் கடவுளரசிற்காக அவர் கொடுத்த அந்த நேரத்தை உபயோகிக்கவில்லை. இதன் மூலம் நாம் கடவுளரசிற்கு வேலை செய்யாமல் இருக்கிறோம். நமது பணியில் நமக்கு கொடுக்கபட்ட பணிகளை செய்யாமல் இருந்தால், நாம் நமது முதலாளியின் பணத்தை திருடுகிறோம் என்று அர்க்தம். நமது சுய தேவைகளுக்காக, நம குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையோ, நன்பர்களின் தேவைகளையோ, ஏழைகளின் தேவைகளையோ புறக்கனித்தால், ஒதுக்கினால், "உனக்கு தேவையானதை யார் கொடுப்பார்கள்" என்று யேசு கேட்கிறார்.

நம்முடையது எது? நாம் நம்பிக்கையான உன்மையான ஊழியனாய் இருந்தால், அது தான் உண்மையான சொத்தா? அது என்ன வென்றால், பணக்காரர்கள், நம்முடனே நித்தியத்திற்கும் இருப்பார்கள். நம்மோடு எப்போதும் இருப்பது, ஆவ்யின் செல்வங்கள், கடவுள் நம்மை புகழ்வதும், அவர் நாம் ஊழியத்தை ஏற்பதும், முழு அன்புமாகும். இவையாவும் நமக்கு கிடைக்கும் சொத்துக்கள்.

பரிசுத்தத்துடனும், செல்வங்களுடனும் எப்படி இருப்பது? , முதலில், நாம் மற்றவர்களுக்கு உரிய அன்பை நம்பிக்கையோடு அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அந்த அன்பு கடவுள் மற்றவர்கள் மேல் வைத்துள்ளது. நிரந்தரமற்ற இவ்வுலக பொருள்களையும், நித்திய மோட்சத்திற்குரிய விசுவாசம், ,ஞானம், நம்பிக்கை அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, நமது நம்பகத்தன்மை உறுதிபடுத்த படுகிறது.

சுய பரிசோதனைக்கான் கேள்வி:
நீ எதை பகிர்ந்து கொள்ள விருப்பமில்லாமல் இருக்கிறாய்? அந்த பொருளை கடவுளுக்கு அர்ப்பனித்தால் அதை அவர் பனிக்காக உபயோகித்தால், என்ன ஆகும் என்று எதனால் பயப்படுகிறாய்? இந்த் பயத்தை போக்க நீ என்ன செய்ய்வேண்டும் என நினைக்கிறாய், அது போன பின், நீ உன்மையான கடவுளின் மதிப்பிற்கு உரிய ஊழிய்னாய் இருப்பாய்.

thanks to www.gnm.org


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: