Friday, September 7, 2007

செப் 9 2007, ஞாயிறு நற்செய்தி , மறையுரை:

செப் 9 2007, ஞாயிறு நற்செய்தி , மறையுரை:

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 14

25 பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: 26 ' என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. 27 தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது. 28 ' உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? 29 இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, 30 ' இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை ' என்பார்களே! 31 ' வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? 32 எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா? 33 அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.

http://www.arulvakku.com

கடவுளின் உறவை விட உங்கள் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்த்தது எது? அதனை தான் யேசு இன்றைய நற்செய்தியில் பார்க்கச்சொல்லி குறிப்பிடுகிறார். எந்த மாதிரியான வேலைகள்? , என்ன சோதனைகள்? , சொத்துக்கள்?, வாழ்க்கயின் நோக்கங்கள்? மற்றும் எந்த மாதிரியான செயல்கள்? உங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. எந்த மாதிரியான சிலுவைகளை நீங்கள் அகற்றப்பட வேண்டும் என நினைக்கிறீர்கள்? நீங்கள் அதிலிருந்து வெளியேறினால், அது கிறிஸ்துவை அவரின் சிலுவையிலிருந்து கைவிடுகிறீர்கள் என்று அர்த்தமாகாதா?

உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது. அப்படி செய்யாதவர் எவரும், மற்ற செயல்கள் செய்ய தயாராய் இல்லாதவர் ஆவர். நாம் நல்ல நோக்கத்திற்காக, நம்மை தயார்படுத்தி, அதனை நோக்கி முன்னேறி செல்லலாம். ஆனால், சரியான முடிவை அடைய முடியாமல் இருக்கிறோம். ஏனெனில், உலக உடைமைகளாலும், பாவங்களாலும் தடுமாறுகிறோம். நாம் இந்த சோதனைகளில் தாக்குதலுக்கு உட்பட்டு தோல்வியடைந்தவர்களாகிறோம், வெற்றியாளராக இல்லாமல். நாம் பெறும் எல்லா நன்மைகளும், தற்காலிகமானவை, ஏனெனில், இந்த நன்மைகள், கடவுளரசின் தரத்தில் சிறிது குறைந்தது. மேலும் கடவுளரசின் மதிப்பிற்கு சரிசம்மானது அல்ல.

ஒரு சீடர் என்பவர் ஒரு மானவன் ஆவார். யேசுவிடமிருந்து, மற்றவர்களை எப்படி அன்பு செய்ய வேண்டும் என்று கற்றுகொள்கிறோம். மேலும், நமது பரிசுத்த வாழ்விற்கு குறுக்கே வரும் எவரையும் அனை போட அவரிடமிருந்து கற்றுகொள்கிறோம். இவைகள் தான் நமது சிலுவைகள். நாம் தினமும், நம் முன் வரும் சோதனைகளையும், கஷ்டங்களையும் வெற்றி கொண்டு, நமது பரிசுத்த வாழ்வை, நிபந்தனையற்ற, எப்போதுமே மன்னிக்க கூடிய அன்புடன் வாழ்வை தொடரவில்லையெனில், நாம் சிலுவையின் எடையினால், தடுமாறி விழுந்துவிடுவோம். ஆனால், நாம் அந்த சிலுவைகளை அரவணைத்து, நமது சொந்த பரிசுத்த வாழ்வில் அதனை நமக்கு கிடைத்த ஆசிர்வாதமாக நினைத்து, நாம் யேசுவை போல், மற்றவர்களுக்கு தியாகம் செய்தால், நாம் மேலும், யேசுவை முழுவதுமாக அனைத்து, அவரோடு இணைவோம். இது மற்ற ஜெபம் மற்றும் அவரிடம் வேண்டுவதால் கிடைக்கும் நெருக்கத்தை விட, அதிக முக்கியத்துவத்தை தரும்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
யேசுவிடம் ஜெபிப்பது, நற்செய்தி படிப்பது, மற்ற விசுவாச நடவடிக்கைகள் இவை எல்லாவற்றை விட நீ அதிகம் எதை முக்கியபடுத்துகிறாய். உனக்கு முக்கியமானவைகள் எவை? உன்னுடைய தின நடவடிக்கைகள் இந்த முக்கிய பட்டியலோடு ஒத்து வருகிறதா?


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: