செப்டம்பர் 30 , 2007
ஞாயிறு நற்செய்தி மறையுரை:
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 16
19 ' செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். 20 இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். 21 அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். 22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். 23 அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். 24 அவர், ' தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன் ' என்று உரக்கக் கூறினார். 25 அதற்கு ஆபிரகாம், ' மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். 26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது ' என்றார். 27 ' அவர், ' அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். 28 எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே ' என்றார். 29 அதற்கு ஆபிரகாம், ' மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும் ' என்றார். 30 அவர், ' அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள் ' என்றார். 31 ஆபிரகாம், ' அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள் ' என்றார். '
thanks to www.arulvakku.com
இன்றைய நற்செய்தியில், செல்வந்தரின் பாவம் என்ன? அவர் இறந்த பிறகு, ஏன் கடுமையான சித்திரவதைக்கானார்.? செல்வந்தராக இருந்தது தான் பாவமாம்? அவர் செய்த பாவம் என்னவென்றால், அவரின் செல்வத்தை, உணவை லாசரோடு, பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இருந்தும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.
மரணம் வாழ்க்கையின் முடிவல்ல; அது முழு உணர்வுடன், மனத்துடனும், முழுமையாக உண்மையில் வாழ்வது ஆகும். மரணம் தான் கடவுளின் முழு உண்மையில் நம்மை எழுப்புகிறது. இதன் மூலம் தான் கடவுள் யார், நமக்கு கிடைத்த அவருடைய அன்பளிப்புகள், மேலும், நாம் எப்படி அவரின் அன்பளிப்பை, எப்படி வீணக்கினோம் என்பது தெரியும்.
நாம், கடவுளின் அன்பளிப்பை, நமக்கு கிடைத்த திறனை, மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால், நாம் கடவுளரசில் முதலீடு செய்கிறோம். கடவுளின், பொருளாதாரத்தில், நம் முதலீடுக்கு பல மடங்காக திரும்ப வரும். நாம் கொடுப்பதை விட அதிகமாகவே திரும்ப கிடைக்கும், அதை கொண்டும் மேலும், நாம் பகிர்ந்து கொள்ளலாம்.
மாறாக, நமக்கு உள்ளதை, நம்மிடையே வைத்து கொண்டால், பெட்டிக்குள் அடைக்கப்பட்டு, கசங்கிய மலர் போல், அந்த திறமைகள், செல்வங்கள் அழிந்து போகும். பெட்டிக்குள் உள்ள பூக்கள் மங்கி போகும், அது போல், நம்மில் அடைத்து வைக்கபட்டிருக்கும் நம் பொருட்களும், செல்வங்களும், உபயோகமில்லாமல் போகும். ஆன்மிகத்திலும், நமது சுய உணர்வுகளுடனும் தேங்கி நிற்போம். அவரின் அன்பளிப்பு அழுகிபோகும். தாராள மனசின் தலைவராய் உள்ள, கடவுளோடு சேரும் இணைப்பை, நமது சுய நலம் அழித்து விடும்.
ஒவ்வொரு நாளும், நாம் பகிர்ந்து கொள்ள நமக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். கடவுளின் ஆசிர்வாதங்களும் நாம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு உண்டு. நற்செய்தியில் வரும் செல்வந்தர், ஏன் லாசரை ஒதுக்கினார். ஏனெனில், லாசருக்கு தொழு நோய் இருந்தது, அருவருக்கதக்க உருவில் இருந்தான்.
இது ஒர் கேள்வியை எழுப்புகிறது: நாம் மிகவும் குறைவாக பகிர்ந்து கொள்கிறோமோ? நாம் மற்றவர்கள் மேல் குறைவான மதிப்பையே வைத்திருக்கிறோமோ? அவர்களை கண்டு நாம் ஒதுங்குகிறோமோ? நமது கோபத்தால், நாம் ஒதுங்கியே இருக்கிறோமோ? இப்படி ஒர் நிலையில் இருந்தால், நாம் கடவுளோடு இணைய முடியாது. நமது அன்பு நம்மை உற்சாகபடுத்தி, இன்னும் தாராளமாக இருக்க உதவ வேண்டும்.
இன்றைய இரண்டாவது வாசகத்தில், "விசுவாசத்திற்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும்" என்று கூறுகிறது. யாரோடு போட்டி போடுகிறோம்? நம்மோடு நம் விசுவாசத்திற்காக. நீ நேற்றைய விட, இன்று பரிசுத்தமாகவும், அதிகம் தாராளமாகவும் இருக்கிறாயா? நீ தேங்கிய நிலையில், அழுகிய நிலையில் இருக்கிறாயா? அல்லது, பரிசுத்த வாழ்வில், வலிமையோடு உங்கள் பாவங்களிலிருந்து மாற முயற்சி செய்கிறீர்கள?
© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment