Friday, October 19, 2007

ஞாயிறு நற்செய்தி மறையுரை: அக்டோபர் 21 2007 (sunday reflection)

Exodus 17:8-13
Psalm 121:1-8
2 Tim 3:14 -- 4:2
Luke 18:1-8


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 18

1 அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். 2 ' ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. 3 அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ' என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும் ' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். 4 நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ' நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. 5 என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார் ' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். ' 6 பின் ஆண்டவர் அவர்களிடம், ' நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், 7 தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? 8 விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? ' என்றார்.

(http://www.arulvakku.com) thanks.


இன்றைய நற்செய்தியில், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்குவார் என்று யேசு உறுதி கூறுகிறார். நாம் மற்றவர்களால், நிந்திக்கபடும்போது, நிராகரிக்கப்படும்போது, அலட்சியபடுத்தபடும் போது, துஷ்பிரயோகம் நடத்தப்படும் போது, கடவுள் உங்களை காப்பாற்ற வருகிறார். மிகவும் விரைவாக உன்னிடம் கேட்கிறார். "எப்படி?" என்று. உனக்கு தொந்தரவு செய்பவர்களை எதிர்த்து நிற்கவில்லையா? அவர் உனக்கு கொடுத்த உறுதியை காப்பாற்றவில்லையா?

கடவுள் மிகவும் மெதுவாக நமக்கு உதவுவது போல் தெரிந்தாலும், அது மாதங்களானாலும், ஒரு வருடமானாலும்(பல நேரங்களில்), அந்த ப்ரச்னைகள், தீர்க்கப்படுவதற்கு முன், யேசு உனது அருகில் தான் இருக்கிறார், நீ அவரிடம் வேண்டிய உடன், சாத்தானிடமிருந்து உன்னை மீட்டு, உனக்காக காத்திருக்கிறார்.

உன்மையான கேள்வி என்னவென்றால்: "யேசு எங்கே?", "ஏன் அவர், என்னை சீக்கிரமே உதவி செய்யவில்லை?", அதற்கான பதில், இன்றைய நற்செய்தியின், கடைசி வரிகளில் உள்ளது: யேசு நமக்கு உதவ வரும்போது, நாம் நம்பிக்கையோடு அவரை எதிர்கொள்கிறோமோ? அல்லது பயத்தோடு , அசுவிசுவாசத்தோடு இருக்கிறோமோ?

உனது ப்ரச்னைகளை மேலும் இழுக்க பல வழிகள் உள்ளன. நீ கடவுளிடம் வேண்டி, இன்னும் உனது ப்ரச்னை இன்னும் போக வில்லையென்றால், சுற்றிபார், யேசு உனக்கு அருகில் தான் நிற்கிறார். உன்னை , நீ நினைக்கும் பாதையில் செல்லாமல், வேறு பாதையில் செல், உனது ப்ரச்னை சுலபமாக விலகும் என்று வேண்டி கூறுகிறார்.நமது கண்கள், யேசுவின் மேல் இல்லாமல், நமக்கு ப்ரச்னை செய்பவர்கள் மேல் இருந்தால், அவர் செய்யும் உதவியை நாம் இழந்து விடுவோம்.

யேசு உணமையின் கூர்முனையால், உனக்கு எதிராக சதி செய்யும் தீய ஆவியினை எதிர்த்து வாள் வீசுகிறார். யேசு தீய ஆவிகளை ஓட ஓட விரட்டுகிறார். ஆனால், அவர் கூறும் உண்மைகள நமக்கு பிடிக்காமல் போகும்போது, நாம் சாத்தானின் சோதனையில் விழுந்து விடுகிறோம்.

யேசு நம்மிடம் இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டுகிரார். நமது எதிரியின் மேல் உள்ள அன்பினால், கடவுளின் கருணையும், அவரின் காத்திருக்கும் நேரமும், அவர்களுக்கு கொடுத்தால், அதன் மூலம், யேசு, அவர்கள் வீழ்ந்து கிடக்கும் தீய செயலகளிலிருந்து அவர்களை காப்பாற்ற உதவும். இந்த காத்திருக்கும் வேளையில், கடவுளின் அமைதியையும், பொருமையையும், தாங்கும் ஆற்றலையும், நாம் அனுபவிக்கிறோம்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
எந்த மாதிரியான அநீதிகள், உங்களை இன்று பயமுறுத்துகிறது. என்ன தீமை உங்களுக்கு எதிராக நடந்தது? உண்மையான விசுவாசத்துடன், யேசுவை பின் செல்ல இன்று நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள். கடவுள் மேல் உங்கள் நம்பிக்கையை வைக்க என்ன மாதிரியான செயலை செய்ய போகிறீர்கள்.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: