Saturday, October 27, 2007

ஞாயிறு 28 அக்டோபர் 2007 : நற்செய்தி மறையுரை:

ஞாயிறு 28 அக்டோபர் 2007 : நற்செய்தி மறையுரை:


Sirach 35:12-14,16-18
Ps 34:2-3, 17-19, 23 (with 7a)
2 Tim 4:6-8, 16-18
Luke 18:9-14


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 18

9 தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: 10 ' இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். 11 பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ' கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; 12 வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன். ' 13 ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ' கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும் ' என்றார். ' 14 இயேசு, ' பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.


thanks to www.arulvakku.com

இன்றைய நற்செய்தியில், நம்முடைய எல்லா செயல்களுமே, நம்து சுய லாபத்திற்காகவும், சுய நலத்தினால் தான் நடக்கின்றன, அன்பினால் அல்ல என்பதையும் பார்க்கிறோம். "தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் ". இதனை எல்லோரும் புரிந்து கொள்கிறார்களோ, சீக்கிரமோ அல்லாது மெதுவாகவோ, தன்னை தானே உயர்த்தி கொள்பவர்கள், கண்டிப்பாக தாழ்த்தப்பெறுவர். இது மாதிரி தன்னை தானே உயர்த்தி கொள்பவர்களை, தினமும் பார்க்கும் மக்கள், அவர்களை மிகவும் உயர்வாக நினைக்க மாட்டார்கள். மேலும் உறுதியாக கடவுளும் அவர்களை உயர்வாக நினைப்பதில்லை.

மாற்றாக, மற்றவர்கள் மேல் நாம் அன்பு செலுத்தினால், நாம் தாழ்த்தபடுவோம். அன்பில்லாத, நமது நோக்கங்களில், நாம் செய்வது தான் சரியென்று, நமக்கு தோனும், நமக்கு நாமெ கடவுள் என்று சாத்தான் போல் நினைத்து, கடவுள் போல் இல்லாமல் இருக்கிறோம். நாம் மற்றவர்களுக்கு நல்லதை செய்யும் போது, நாம் உண்மையாகவே அவர்கள் மேல் அக்கறை கொள்கிறோம். தாம் செய்வது தான் சரியென்று நினைக்கும், நமது சுய கொளரவம், உங்கள் தாழ்ச்சியினால் சரி செய்யப்படும்.
நாம் மற்றவர்கள மேல் கொண்டுள்ள அன்பினால், நாம் சரியாக்கப்படுவோம். சுய கட்டுப்பாடும், நாம் சுயமாகவும், சரியாகவும் இருந்தால், மற்றவர்களுக்கு நல்லது செய்ய நம்மை தூண்டி விடும். நாம் யாரையாவது நிந்தனை செய்தால், இழிவு படுத்தினால், யாரையாவது, நம்மை விட தாழ்ந்தவர்கள், என்று நினைத்தீர்கள் ஆனால், இன்றைய நற்செய்தில் வரும் பரிசேயரும் நாமும் ஒன்றானவர்கள்.

இதற்கெல்லாம், தீர்வு என்னவென்றால், கடவுளின் அக்கறையுடன், நாம் அன்பு செய்ய கஷ்டப்படும் அன்பர்கள் மீது நாம் தொடர்பு கொன்டு அவர்களோடு, கடவுள் அவர்கள் மேல் வைத்த அன்போடு இணைய வேண்டும். இதனால். நாம் அவர்கள் மேல் அக்கறை கொள்ள ஆரம்பிப்ப்போம். இதனை செயல்படுத்துவதற்கு சரியான மற்றும் வெற்றி வழி, நற்கருணை வழிபாடுதான். அதுதான் நமது தீமைகளை முழுதும், எடுத்து கொண்டு, கடவுளின் சிறந்த அருளை கொடுத்து, தெய்வீக அன்பை நமக்கு கொடுக்கும்.



© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: