Saturday, October 13, 2007

ஞாயிறு அக்டோபர் 14, 2007 , நற்செய்தி , மறையுரை

ஞாயிறு அக்டோபர் 14, 2007 , நற்செய்தி , மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 17

11 இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். 12 ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, 13 ' ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும் ' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். 14 அவர் அவர்களைப் பார்த்து, ' நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள் ' என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று. 15 அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; 16 அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். 17 இயேசு, அவரைப் பார்த்து, ' பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? 18 கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே! ' என்றார். 19 பின்பு அவரிடம், ' எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது ' என்றார்.

thanks www.arulvakku.com

இன்றைய நற்செய்தியில், பத்து பேரில், ஒன்பது பேர் நன்றி கூற ஏன் வரவில்லை? அவர்கள் ஒன்பது பேரும், அவர்களின் குடும்பத்தினரிடமும், நன்பர்களிடமும் அவர்களுக்கு நிகழ்ந்த அதிசயத்தை கூற சென்றிருக்கலாம். இன்னும் கூட, அவர்கள் குடும்பத்தினரிடம், நாங்கள் முழுமையாக குணமாகிவிட்டோம், உங்களோடு கூட நாங்களும் சேர்ந்து வாழலாம் என்று நிரூபிக்க கூட சென்றிருக்கலாம். அல்லது, அவர்களின் வாழ்வின் தேவைக்கு அவர்கள் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ள பட்டிருக்கலாம், இனிமேல், அவர்களுக்கு தொழுநோயாளிகளுக்கு கிடைக்கும் இலவச பொருட்கள் கிடைக்காமல் போகலாம்.
இவையெல்லாம், மிகவும் சரியான மற்றும் செல்லுபடியாகும் காரனங்கள் ஆகும்.

யேசுவிடம் திரும்பி வந்த சமாரிய தொழு நோயாளிக்கு உள்ள வேற்றுமை என்ன? அது என்ன வென்றால், அவனது ஆவியில் தான் வேற்றுமை உள்ளது. அவன் யேசுவின் மீது வைத்த விசுவாசம் அவனது உடலையும், ஆவியையும் காப்பாற்றியது. அவனது குறைகள் குணப்படுத்தப்பட்டது. யார் குணப்படுத்தினாரோ அவரை பாராட்டினார், நன்றி கூறினார். அவருக்காக கடவுளிடம் வேண்டவில்லை. கடவுளுக்காக சென்றார். அவரிடமிருந்த சில்வற்றை யேசுவிடம் காண்பித்தார். அவருடைய பாராட்டுதல், போற்றுதல், மேலும் கடவுளுக்கு வணக்கம். இதயெல்லாம், அந்த சமாரியார் கடவுளுக்கு கொடுக்க விரும்பினார்.
நாம் திருப்பலிக்கு செல்லும்போது, நமக்காக செல்கிறோமோ? அல்லது கடவுளுக்காகவும் செல்கிறோமோ? நம் தேவைகளுக்காக இறைவனிடம் வேண்டும்போது, கடவுளுக்காக செய்கிறோமோ? நாம் நமது ஆன்ம வாழ்வில் முன்னேறினாலோ அல்லது ஓர் நல்ல விசயத்தை முடித்தாலோ, கடவுளுக்காக செய்கிறோமோ? கடவுளுக்கு அவராலே அவருக்கு கொடுக்க முடியாத ஒன்று நம் எல்லாரிடமும் இருக்கிறது: அவருக்கு வாழ்த்துக்களும், போற்றுதலும், வேண்டுதலும் நம்மிடமிருந்து வரவேன்டும். இந்த புகழையும், போற்றுதலையும் குறைந்து மதிப்பிடவேண்டாம்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:

அன்மையில் கடவுள் உங்கள் வேண்டுதலுக்கு கொடுத்த ப்ரேயர் என்ன? இன்று அவர் உங்களுக்கு என்ன செய்கிறார் என்று பார், உற்று கவனி. கடவுளின் காலடியில், முழந்தாளிட்டு, அவருக்கு நன்றி கூறியிருக்கிறாயா? அவர் உனக்கு உதவுவதற்கு முன்பே அவருக்கு போற்றுதலையும் நன்றியையும் கூறியிருக்கிறாயா?

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: