ஜூலை 13, 2008
ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 15வது ஞாயிறு
Is 55:10-11
Ps 65:10-14 (with Luke 8:8)
Rom 8:18-23
Matt 13:1-23
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 13
1 அதே நாளில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். 2 மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர். 3 அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: ' விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். 4 அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. 5 வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; 6 ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின. 7 மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன. 8 ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. 9 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் ' என்றார். 10 சீடர்கள் அவரருகே வந்து, ' ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்? ' என்று கேட்டார்கள். 11 அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: ' விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. 12 உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். 13 அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். 14 இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: ' நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. 15 இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன். ' 16 உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. 17 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை. 18 ' எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: 19 வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்லுவான். 20 பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். 21 ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள். 22 முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள். 23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர். '
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின் நற்செய்தி, விதை விதைப்பதை பற்றி சொல்கிறது. இதில் முக்கியமான செய்தி என்ன வென்றால், விதைக்கும் விதை நல்ல முறையில் மாறவில்லையென்றால், எல்லா முயற்சிகளும், வீணாகிவிடும். ஒவ்வொரு விதையும், தன்னுடைய முழு உருவத்தை விட்டு விட வேண்டும். அந்த விதை சேற்றில் அழுகி புதிய முளைபாரியாக வெளி வரும். அதற்கு பிறகு தான் , முதல் செடி வரும், பிறகு பல பல செடிகளாக பல்கி பெருகி பலமானதாகவும், வலிமையான வேறுடனும் வளரும். ஆனால், அதனை ஒழுங்காக பராமரிக்கபடவேண்டும். நினைவில் கொள்க.
இந்த எல்லா நிலைகளிலும் வளர்ந்த பின்னால், அதன் விளைவு, மரமாகவோ, பெரிய செடியாகவோ மாறி, விதைக்கும், மரத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும். மேலும், வளர்ந்த பின்னால், மற்ற இயர்கை உயிரனங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
யேசு இந்த உவமையை சொல்கிறபோது, நாம் அதிக பழங்களை கொடுக்க கூடிய நல்ல விதையாக இருக்க விரும்புகிறோம் . ஆனால், வெறும் விருப்பம் மட்டும், நம்மை மாற்றி விடாது. எந்த முறைகள் நல்ல மண்ணாக மாறி நம் வாழ்வை முன்னேற்றும் மேலும், பல மடங்கு வளர்ச்சியையும், அதனால் பலருக்கு நன்மையையும் தரும்.?
இசையாவின் முதல் வாசகம், "யேசுவே நல்ல விளைச்சல் தரும் மண்ணாகும்" என்று கூறுகிறது. கடவுளும், அவரது வார்த்தைகளும், முழுமையாக கடவுள் என்ன விரும்புகிறார் என்று பறைசாற்றுகிறது. இரண்டாவது வாசகத்தில், புனித பவுல் அடிகளார், துன்பத்திற்கு ஆளாகுதல், படைப்பின் ஒரு அங்கமாகும். ஒவ்வொரு உருவாக்கத்திற்கும், (விதைகள் அழிந்து, புதிய செடியாக வேண்டும்) ஓர் அழிவு வேண்டும். மீண்டும் உயிர்த்தெழுதல் , துன்பத்திலுருந்தும், மரணத்திலிருந்தும் தான் வருகிறது.
நாம் நம்மையே கடவுளிடம் (மண்ணிடம்) முழுமையாக அர்ப்பணித்து, கடவுள் நம்மை முழுமையாக மாற்றி வளர்த்திட அனுமதித்தால் தான், நாம் முழுமையான கடவுளின் மக்களாவோம்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment