Friday, July 25, 2008

ஜுலை 27 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை:

ஜுலை 27 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஆண்டின் 17வது ஞாயிறு


1 Kings 3:5, 7-12
Ps 119:57, 72, 76-77, 127-130
Rom 8:28-30
Matt 13:44-52

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 13

44 ' ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். 45 ' வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். 46 விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும். 47 ' விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். 48 வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். 49 இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; 50 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். ' 51 ' இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா? ' என்று இயேசு கேட்க, அவர்கள், ' ஆம் ' என்றார்கள். 52 பின்பு அவர், ' ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவு+லத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர் ' என்று அவர்களிடம் கூறினார்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், யேசு வின்னக அரசு மறைந்திருக்கும் புதையலையும், விலையுயர்ந்த முத்தையும், வலை நிறைந்த மீன்களில், நல்லதை எடுத்து கொண்டு, கெட்டவற்றை வெளியே எறியப்படுவதை போல பல உதாரணங்களில் காட்டுகிறார்.

வேறு வார்த்தைகளில் சொல்வதனால், நமது கிறிஸ்துவ வாழ்வு விலை உயர்ந்த அதிக மதிப்பு மிக்க பொருட்களோடு சேர்ந்து உள்ளது. அதில் சிலபொருட்கள் மதிப்பில்லாதது, தூக்கி எறியபடவேண்டியது. சில பொருட்கள் தற்காலிகமானது, இந்த உலகோடு சம்பத்தப்பட்டது. இவையெல்லாமே கடவுளரசிற்கு உபயோகப்படவில்லையெனில், அவையெல்லாமே வீனான பொருட்களாகும்.

இன்றைய வாசகத்தில், உரோமையர் எழுதிய திருமுகத்தில், அனைத்துமே கடவுளை அன்பு செய்பவர்களுக்காக ஒன்றினைந்து செயல்படுகிறது என்கிறார். நமது வாழ்க்கையில் உள்ள தீமைகளை ஒழித்து, இறந்த மீன்களை தூக்கி எறிந்தால், நாம் கடவுளை போல மாறுகிறோம். நாம் இரட்சிக்கபட்டுவிட்டோம். நாம் கடவுளரசிற்கு உபயோகமாக உள்ளோம். நமக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால் கூட, எல்லாவற்றையும் படைத்த, எல்லாம் வல்ல இறைவனின் மேற்பார்வையில், அவரது அரசின் கீழ், நாம் அதனை நல்ல விசயத்திற்கு உபயோகித்தால், அது முத்தை போல ப்ரகாசமாகும்.


இன்றைய முதல் வாசகத்தில், சாலமன், இறைவனிடம் அதிக சொத்துக்களை கேட்டிருக்கலாம், கடவுள் அவருக்கு கொடுத்திருப்பார். ஆனால், புரிந்து கொள்ளக்கூடிய மனதையும், அதன் மூலம் அவர் ஞானம் பெற்று, நாட்டினை அவர் நல்ல முறையில் ஆட்சி செய்யலாம் என்று கேட்டார். அதன் பிறகு, அவர் சில தவறுகள் அவரது ஆட்சியில் செய்து இருந்தாலும், அகில உலகமும், அவர் நல்ல அறிவாளியான அரசர் என்று போற்றியது, அதன் மூலம், பல செல்வஙகளை சேர்த்தார்.


இந்த கதையின் மூலம், நமக்கு என்ன சொல்லபடுகிறது என்றால், நாம் எப்போதுமே, முதலில் கடவுளின் செல்வங்களை பெறுதல் வேண்டும், பிறகு, இந்த உலகின் செல்வங்களை நாம் உபயோகிக்கலாம். ஏனெனில், கடவுளின் ஞானம் நாம் இந்த உலக செல்வங்களை மற்றவர்களின் பயனுள்ளதாக எப்படி உபயோகிக்கலாம் என வழிகாட்டும். நாம் எவ்வளவு அதிகமாக கிறிஸ்துவை அன்பு செய்து, அவர் வழியில் செல்கிறோமோ, அப்போதுதான், நமக்கு உண்மையான செல்வம் எது என நம்மால் கண்டுபிடிக்க முடியும், எது வீனான செல்வங்கள், கடவுளுக்கு தேவையில்லாத செல்வம் எது என்று அறிந்து அதனை தூக்கி எறிய முடியும். மேலும் நம்மிடம் உள்ள எல்லா செல்வங்களையும், கடவுளின் உபயோகத்திற்காக, அவரது பயன்பாட்டிற்காக செலவிட முடியும்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: