Friday, August 8, 2008

ஆகஸ்டு 10, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 10, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஆண்டின் 19வது ஞாயிறு
1 Kgs 19:9a, 11-13a
Ps 85:8-14
Rom 9:1-5
Matt 14:22-33

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 14

22 இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார். 23 மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். 24 அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது. 25 இரவின் நான்காம் காவல்வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். 26 அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, ' ஐயோ, பேய் ' என அச்சத்தினால் அலறினர். 27 உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ' துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள் ' என்றார். 28 பேதுரு அவருக்கு மறுமொழியாக, ' ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் ' என்றார். 29 அவர், ' வா ' என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். 30 அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, ' ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும் ' என்று கத்தினார். 31 இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, ' நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்? ' என்றார். 32 அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. 33 படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, ' உண்மையாகவே நீர் இறைமகன் ' என்றனர்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், யேசு ரொட்டி துண்டுகளையும், இரண்டு மீன்களையும், பல மடங்காக பெருக்கி, ஆயிரக்கணக்கானோர் உணவு கொடுத்த புதுமையை முடித்து விட்டு, சீடர்களை தனியே அனுப்பி விட்டு, தந்தையிடம் தனியே ஜெபிக்க ஒதுங்கி மலை மேல் சென்றார். கடவுளோடு சில நேரங்கள் செலவிட்டு, பிறகு தண்ணீரின் மேல் நடந்து, சீடர்களை நோக்கி வருகிறார்.

யேசு அடிக்கடி ஜெபம் செய்வதில், அதிக நேரம் செலவிட்டார். நற்செய்தியில் கூறப்பட்டுள்ளதை விட, அவர் அதிகமாகவே ஜெபங்களில் ஈடுபட்டார். ஏன் இதனை இங்கே குறிப்பிடுகிறேன் என்று நினைக்கிறீர்கள்? எப்படி, ஆக்கபூர்வமான விசுவாசத்தை அடைவது என்பதனை மத்தேயு நமக்கு காட்டுகிறார்.

நமக்கும், அடிக்கடி ஜெபம் செய்ய, தனிமையான இடம் தேவைபடுகிறது. அந்த ஜெபங்களின் மூலம், நம்முடைய ஆற்றலையும், யேசு நம் குடும்பங்களில் நம் மூலம் நம் குடும்பங்களில் என்ன செய்ய சொல்கிறார் என்பதனை நாம் புதுப்பித்து கொள்கிறோம். நமது ஆற்றலுக்கு புத்துணர்வு கொடுக்கிறோம். நமது வேலையிடத்தில், பொழ்து போக்கும் இடங்களிலும், பங்கு கோவிலிலும், நமது ஆற்றலை அதிகம் செலவிட ஜெபங்களின் மூலம் நாம் புத்துணர்வு பெறுகிறோம். பல ப்ரச்னைகளில் மீண்டு வரும் ஆற்றல் அனைத்தும் ஜெபங்களின் மூலம் கிடைக்கும். நாம் மற்றவர்களுக்காக நமது நேரத்தை,நமது பொருட்களை செலவிட்டு விடுகிறோம். நம்மிடம் மற்றவர்களுக்காக செலவானது எல்லாம், ஜெபங்களின் மூலம் கடவுள் மீண்டும் நிரப்புகிறார்.

நாம் ஜெபங்களின் மூலம், நமது வழிகளில் என்ன நேர்ந்தாலும் அதனை எதிர் நோக்கும் திறமையை, ஆற்றலையும் பெற்று, நம்மையே தயார்படுத்திகொள்ளவேண்டும்., நாம் கடவுளோடு தனியே சென்று அவரோடு ஜெபம் செய்யும் நேரங்களில், நாம் பெறும் அன்பளிப்பு, நமக்கு தேவையானதாகவும், நாம் மற்றவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதற்கு ஏற்றார்போல நமக்கு அளிக்கப்படுகிறது. இந்த ஜெபங்கள் நமது விசுவாசத்தை உறுதியாக்குகிறது. தண்ணீறில் எப்படி நடப்பது என்று நமக்கு கற்று கொடுக்கிறது. கடவுளின் உதவி தேவைபடும் மக்களிடம் நம்மை அழைத்து செல்கிறது. கடவுள் அவர்களுக்கு நம் மூலமாக சேவை செய்ய விரும்புகிறார். நீங்கள் அதற்கு தயாரா?

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: