Friday, August 29, 2008

31 ஆகஸ்டு 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

31 ஆகஸ்டு 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 22வது ஞாயிறு

Jer 20:7-9
Ps 63:2-6, 8-9
Rom 12:1-2
Matt 16:21-27

எரேமியா

அதிகாரம் 20

7 ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்: நீர் என்னைவிட வல்லமையுடையவர்: என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்: நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். 8 நான் பேசும்போதெல்லாம் வன்முறை அழிவு என்றே கத்த வேண்டியுள்ளது: ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது. 9 அவர் பெயரைச் சொல்லமாட்டேன்: அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன் என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்: இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.

உரோமையருக்கு எழுதிய திருமுகம்

அதிகாரம் 12

1 சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. 2 இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 16

21 இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார். 22 பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, ' ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது ' என்றார். 23 ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, ' என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் ' என்றார். 24 பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். 25 ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். 26 மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? 27 மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியின் முதல் வாசகம், எனக்கு மிகவும் பிடித்தமான வாசகம் ஆகும். நானும், எரேமியா என்ன நினைத்தாரோ அதையே பல தடவை நினைத்துள்ளேன். நானும் கடவுளை பல முரை கோபமாக கூச்சலிட்டுள்ளேன். "ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்", நான் மீண்டும் மீண்டும் இந்த ஏமாற்றுதலை அனுமதிக்கிறேன், நீங்களும் இதே போல் நினைத்தது உண்டா?


ஏன் நாம் இப்படி செய்கிறோம்? கடவுள் நம்மை கடினமான் வாழ்க்கைக்கு இட்டு சென்றாலும், ஏன் நாம் அவரை நம்பிகொண்டிருக்கிறோம். இந்த கடினமான வாழ்க்கையில், உதவியும் அன்பும் மற்றவர்களுக்கு கொடுக்கும்போது, அது ஆறுதலாக இருக்காது, மேலும், மிகவும் வலியுடையது.

இறைவனுக்கு சேவை செய்வது என்பது ஒரு துணிகரமான, சாகச செயலாகும். நாம் எதிர்பாராததை எதிர்பார்க்கலாம். மேலும், அடிக்கடி இது வேதனையை , துன்பத்தை கொடுக்கும். நாம் நம்மையே துறக்க வேண்டும். சிலுவையை சுமந்து, யேசுவை கல்வாரி வரை அவரை பின் சென்று, உயிர்ப்பு வரைக்கும் செல்வதாகும்.


இரண்டாவது வாசகத்தில் குறிப்பிட்டுள்ளது போல, கடவுள் மேல் நம் வைத்த அன்பால், நாம் நம்மையே அவருக்காக தியாகம் செய்கிறோம். இதுதான் மிகவும் உயர்ந்த கடவுள் வழிபாடு/வணக்கமாகும். இது ஆவியோடு சேரும் சேவையாகும், நாம் திருப்பலிக்கு கூட இந்த அனுபவத்தை அறிய செல்லவேண்டியதில்லை. யேசுவோடு சேர்ந்து, நாமும் திவ்ய நற்கருணை ஆகிறோம்.

எரேமையா முதல் வாசகத்தில் செய்வது போல, நாம் கடவுளிடம் குற்றம் சொல்லலாம். நாம் எந்த தண்டனையும் இல்லாமல், நாம் அவரிடம் குறை சொல்லலாம். நாம் அவருக்காக எந்த இறைசேவையும் செய்ய மாட்டேன் என்று சொல்லலாம். ஆனால் அவரை பற்றி மற்றவர்களிடம் கூறுவது, என்பது பாவமாகும். இது வம்பளப்பது போன்றது ஆகும். தவறான எண்ணத்தை உண்டு பன்னகூடியது ஆகும். மேலும் கடவுளை தவறான பிம்பத்தில் பார்க்க தூண்டும்.

மற்றவர்களை நமக்காக வேண்டிக்க சொல்வது, மிகவும் முக்கியமானதாகும். இதனை நாமும் தொடர்ந்து செய்ய வேண்டும். மற்றவர்களிடம் குறை கூறுவது என்பது, நாம் கடவுளை மிகவும் குறைவாக விசுவசிக்கிறோம் என்பதாகும். நம்முடைய தியாகத்தால், பின் வரும் நாட்களில், நல்லதையே பார்ப்போம், நமக்கு நல்லதே நடக்கும். இதை தான், நாம் மற்றவர்களிடம் எடுத்து சொல்லவேண்டும்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: