ஆகஸ்டு 3, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஆண்டின் 18வது ஞாயிறு
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 14
13 இதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர். 14 இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார். 15 மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர். 16 இயேசு அவர்களிடம், ' அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார். 17 ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, ' எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை ' என்றார்கள். 18 அவர், ' அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள் ' என்றார். 19 மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். 20 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். 21 பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலான உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின் நற்செய்தி எனக்கு அதிக பசியையும், தாகத்தையும் தூண்டுகிறது! நாம் எல்லோரும் திருப்பலி முடிந்தவுடன், உணவருந்த செல்லலாமா?
இன்றைய பதிலுரையில் நாம் சொல்வது போல, "எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன: தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். 16 நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்", இருந்தும், இந்த உண்மையை தெரிந்தும், நாம் நமக்கு தேவையான எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம் என நாம் ஒரு போதும் நினைப்பதில்ல்லை. நம்மில் இருப்பவற்றில் நாம் திருப்தி அடைந்து விடுவதில்லை.
மேலும், நம்மில் எல்லா விசயங்களும், செயல்களும், நல்ல முறையில் அமைந்தால் கூட, நாம் முழு திருப்தியுடன் இருப்பதில்லை. நமக்கு இன்னும் தேவை அதிகமாகிறது. நாம் இன்னும் அதிகம் நேசிக்கப்படவேண்டும் என விரும்புகிறோம், இன்னும் அதிகம் நாம் கவணிக்கப்படவேண்டும் என கெஞ்சுகிறோம். நமக்கு தேவையான அங்கீகரிப்பும், உதவியும், நாம் எதிர்பார்ப்போரிடமிருந்து வரவில்லையெனில், நாம் அதிருப்திக்கு உள்ளாகிறோம். நமது துணிவு, தைரியம், எல்லாம், உடைந்து போகின்றன.
நமது வாழ்க்கையில் இணைந்துள்ள ஒவ்வொரு மனிதருக்கும், கடவுளின் அன்பை நமக்கு பகிர்ந்தளிக்கவும், நம் மேல் அக்கறையோடு இருக்கவும், பனிக்கபட்டுள்ளனர். ஆனால், யாரும் நம்மை முழுமையாக அன்பு செய்வதில்லை. மேலும், சிலர் இந்த பணியை, முழுதும் புறக்கணிக்கின்றனர். இதனால் தான், நாம் செயல்குழைந்து, அல்லது கோபத்துடன், அல்லது நம்மையே தனிமைபடுத்திகொண்டு, இருக்கிறோம். எனவே, நாம் எல்லாவற்றிர்காகவும் பசியோடு காத்திருக்கிறோம், ஏங்குகிறோம்.
குறையுள்ள மனிதர்களை நாம் மன்னித்து, யேசுவை நோக்கி வேண்டினால், அவர் மிகவும் சிறியதையும், பல மடங்காக பெருக்கி கொடுப்பார்.
அதிருப்தியுடன் இருப்பது, யேசு நமக்கு கொடுக்கும், ஒரு சைகை மூலம் காட்டும் அடையாளம் போல, அந்த அடையாளத்தின் மூலம், நாம் யேசுவை நோக்கி செல்லவேண்டும் எனபதே அதன் அர்த்தம். அந்த அடையாளம்: யேசு என்னவோடு நம்க்கு கொடுக்க விரும்புகிறார். அது என்ன? ஆனால், நாம் அதனை வாங்கிகொள்ள நாம் இன்னும் தயாராக இல்லை. மேலும், அதனை யேசு எப்படி நமக்கு கொடுக்க போகிறார். நாம் அவரை நேரடியாக பார்க்கவில்லை, அவர் நம்மை தொடுகின்ற உணர்வு இல்லை என்ற கேள்வியோடு இருக்கின்றோம்.
நமக்கு கண்களுக்கு தெரியாத கடவுளோடு, எப்படி திருப்தி அடைவது என்றால், நாம் அவரோடு சேர்ந்து இருக்க முயற்சி செய்ய வேண்டும். ஜெபத்தில் அதிகம் ஈடுபடவேண்டும். கடவுள் நம்க்கு கொடுத்துள்ள கிறிஸ்துவ சமூக குழுவோடு இணைந்து செயல்படவேண்டும். கடவுள் என்ன செய்கிறார், அவர் யார் மூலம அதனை செய்ய முற்படுகிறார் என தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் முயற்சிக்க வேண்டும். இதன் அர்த்தம் என்ன வென்றால், மேலும், மேலும் இதில் நாம் ஈடுபடவேண்டும், மற்றும், எதிர்பார்க்க முடியாத விசயத்தை எதிர்பார்த்து இருத்தல் வேண்டும்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment