Friday, February 6, 2009

பிப்ரவரி 8, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 8, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 5 வது ஞாயிறு

Job 7:1-4, 6-7
Ps 147:1-6
1 Cor 9:16-19, 22-23
Mark 1:29-39

யோபு

அதிகாரம் 7
1 மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே?2 நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும்,3 வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன: இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின.4 படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்: விடியும்வரை புரண்டு உழல்வேன்,5 புழுவும் புழுதிப்படலமும் போர்த்தின என் உடலை: வெடித்தது என் தோல்: வடிந்தது சீழ்.6 என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன: அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன.7 என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூருவீர்: என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா.

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்

அதிகாரம் 9
16 நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!17 இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது.18 அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு: நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.19 நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.20 யூதரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர யூதருக்கு யூதரைப் போலானேன். நான் திருச்சட்டத்திற்கு உட்படாதவனாயிருந்தும், திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர அச்சட்டத்திற்கு உட்பட்டவர் போலானேன்.21 திருச்சட்டத்திற்கு உட்படாதவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர திருச்சட்டத்திற்கு உட்படாதவர் போலவும் ஆனேன். ஆனால் நானோ கடவுளின் சட்டத்திற்கு உட்படாதவனல்ல: ஏனெனில் நான் கிறிஸ்துவின் சட்டத்திற்கு உட்பட்டவன்.22 வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.23 நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.

மாற்கு நற்செய்தி
அதிகாரம் 1
29 பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.30 சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.31 இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.32 மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்.33 நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது.34 பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.35 இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.36 சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள்.37 அவரைக் கண்டதும், ' எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் ' என்றார்கள்.38 அதற்கு அவர், ' நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன் ' என்று சொன்னார்.39 பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.

(thanks to www.arulvakku.com)

http://www.gnm.org


இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், இரண்டாவது வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது நான் செய்யும் இறைசேவையை சுட்டி விளக்குவது போல் உள்ளது.

நான் நற்செய்தியை அறிவிப்பதால், பலருக்கு விளக்கி சொல்வதால், நான் அதனை பெரிதாக அலட்டி கொள்ள தேவையில்லை,
இதனை நாம் செய்துதான் ஆகவேண்டும், அந்த சேவையை செய்ய வேண்டும் என எனக்கு கட்டளையிடப்படவில்லை.
நான் நற்செய்தியை அறிவிக்கவில்லை என்றால், எனக்கு தான் மிகவும் வேதனையாகும்.
நான் மிகவும் விருப்பபட்டு செய்தால், எனக்கு ஒரு கைமாறு உண்டு.
நான் அதனை விருப்பமின்றி செய்தால், எனக்கு அது நிர்வாகத்தினால் ஒப்படைக்கப்பட்டது போல் ஆகும்.
எனக்கு என்ன கைம்மாறு?
நான் நற்செய்தியை அறிவிக்கும்போது, அதனை இலவசமாக செய்யும்போது அதன் மூலம் கிடைக்கும் மனநிறைவே!

அதனால் தான், நாம் இந்த இறைசேவை செய்ய அன்பளிப்புகளை எப்போதாவது தான் கேட்கிறேன். என்னுடைய இணையதளத்தில் கடைசி பகுதியில் அன்பளிப்பிற்கான இணைப்பை கொடுத்திருக்கிறேன். அதனை கவனித்து உள்ளீர்களா? இந்த இறைசேவை மையத்தின், பொருளாதார நிலை தொய்வு அடையும்போது தான், நாம் மற்றவர்களிடம் கேட்கிறேன். சில நேரங்களில்,எனது நண்பர்கள், இந்த மாதிரியான் நிதி வாங்கும் நிகழ்ச்சிகளை அடிக்கடி செய்ய சொல்வார்கள். இந்த கொரிந்தியார் வாசகத்தினால் தான், நான் அதிகமாக நிதி வசூல் செய்வதில்லை. இந்த நிறுவனத்திற்காக, நிதி வசுல், அதனுடைய திட்ட அறிக்கைக்காக இல்லாமல், பரிசுத்த ஆவியான எத்தனை பேரை இதற்கு நிதி கொடுக்க துண்டுகிறார் என்பதனை பொறுத்தது.

தூய பவுலானவர், கடவுளின் நற்செய்தியை அறிவிக்க, நிதி வசூல் செய்வதை தவறில்லை என்று கூறுகிறார். யேசுவே கூட, வேலை செய்பவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் (லூக்காஸ் 10:7) என்று கூறுகிறார். ஆனால், தூய பவுலுக்கு தெரியும், கடவுள் கொடுத்த எல்லா அன்பளிப்புகளாலும், அவருக்கு நல்ல ஊழியனாக இருப்பதே மிகவும் முக்கியமானது.

கிறிஸ்துவின் இறைசேவையை நாமெல்லாம், தொடர வேண்டும் என நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு நாம் கடமைபட்டிருக்கிறோம். இந்த நவநாகரிக உலகிற்கு நாம் செய்ய வேண்டும். ஒரு கிறிஸ்தவர், இந்த இறைசேவையில் ஈடுபடவில்லையென்றால், அவருடைய விசுவாசம் சோம்ப்லானது ஆகும். அந்த விசுவாசத்தில் ஓர் உயிர் இல்லை என்று அர்த்தம். உங்களுக்கு கிடைத்த அன்பளிப்புகளை, திறமைகளை, அறிவை, இரக்கத்தை, மற்றும் எல்லாவற்றையும், மற்றவர்களின் விசுவாசம் வளர உபயோகப்படுத்துங்கள். உங்களுக்கு அதனால் உடனே கிடைக்கும் கைம்மாறு, யேசுவோடு சேர்ந்து நாம் கடவுளரசிற்காக சேவை செய்கிறோம் என்று நினைக்கும்போதே பேரானந்தம் ஆகும்.

இன்றைய நற்செய்தியில், பீட்டர் அவர்களின் மாமியாரின், தாராள மனதை காட்டுகிறது. அவர் வீட்டிற்கு வந்த அனைவரையும், மனம் குளிர வரவேற்று அவர்களுக்கு தேவையானதை செய்தார். அது அவருக்கு கிடைத்த திறமை ஆகும், அதனை கிறிஸ்துவிற்காக செய்தார். மேலும், யேசு நற்செய்தியை எல்லா இடத்திலும் அறிவிக்க ஆவலாய் இருந்ததையும், தொய்வின்றி எந்த ஒரு கலைப்புமின்றி இருந்ததையும் காட்டுகிறது. இவை இரண்டுமே ஒரு உழியனுக்கு தேவையானது என எடுத்து காட்டுகிறது. எல்லா அன்பளிப்புகளும், நமக்கு கிடைக்கும் பண வரவும், கடவுளின் ஆசிர்வாதங்கள் , அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: