Friday, February 13, 2009

பிப்ரவரி 15, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 15, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 6வது ஞாயிறு

Lev 13:1-2, 44-46
Ps 32:7, 1-2, 5, 11
1 Cor 10:31--11:1
Mark 1:40-45

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்

அதிகாரம் 10
31 அதற்கு நான் சொல்வது: நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள்.32 யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள்.

மாற்கு நற்செய்தி
40 ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ' நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் ' என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார்.41 இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், ' நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! ' என்றார்.42 உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.43 பிறகு அவரிடம், ' இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும்.44 நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் ' என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.45 ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.

(thanks to www.arulvakku.com)



இன்றைய இரண்டாவது வாசகத்தில், மிக பெரிய நீதி மொழியை கூறுகிறது. அதனை உங்கள் கண்ணாடி முன் ஒட்டி வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் கண் விழிக்கும் ஒவ்வொரு கணமும் நீங்கள் அதனை பார்க்க வேண்டும்: " எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள்"

எல்லா செயல்களையும்! கடவுளின் மகிமைக்காகவே செய்யுங்கள். பல் துலக்கும் போது கூட கடவுளின் மாட்சிமைக்காக செய்யுங்கள்!. உங்கள் குடும்பத்தினருக்கு , கடவுளின் மகிமைக்காக முத்தம் கொடுங்கள். (என்னவென்றால், உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று பார்ப்பதை விட), உங்கள் வேலைகளை கடவுளின் மாட்சிக்காக செய்யுங்கள். கார் ஓட்டும்போது, அமைதியாக, மெதுவாகவும், கடவுளின் மாட்சிக்காக ஓட்டுங்கள். பொருட்கள் வாங்கும்போது, உணவு அருந்தும் போதும், மற்றவர்களை நோக்கி நேசத்துடன் பழகும்போதும், கடவுளின் மகிமைக்காக, அவரது புகழுக்காகவும் செய்யுங்கள். நமது பங்கின், திருச்சபையின் தேவைக்காக , ஆம் என்று சொல்லி கடவுளின் மாட்சிமைக்காக செய்யுங்கள். கடவுள் உங்களுக்கு கொடுத்த எல்லா திறமைகளையும், அன்பளிப்புகளையும் (சம்பாதிக்கும் பணம, உங்கள் வேண்டுதல்களுக்கு கிடைத்த கொடைகள், நல்ல நேரங்கள்) அனைத்தையும் கடவுளின் மாட்சிமைக்காக செய்யுங்கள்.


இந்த ஜெபத்தை, தினமும் ஜெபியுங்கள்: "பரிசுத்த ஆவியே, இன்று செய்யும் எல்லா செயல்களும், கடவுளின் மாட்சிமைக்காக செய்ய உதவி செய்தருளும்! ஆமென்!"

இதனை நீங்கள் தினமும் செய்வதால், உங்கள் நற்குணமாக்கும். நாம் நமது தின நடவடிக்கைகளை ஒரு கன்னாடி முன் அமர்ந்து பார்த்தால், "நீங்கள் எதனை செய்தாலும், கடவுளின் மாட்சிமைக்காக செய்யுங்கள்" என்ற போதனை உங்களுக்கு நினைவுறுத்தும். நாம் பாவங்களை உதறி தள்ளுவதில் இன்னும் உறுதியடைவோம். ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு கனமும் சுத்தமாகும். ஒவ்வொரு கனமும் ஆசிர்வதிக்கபடும்.

சமய நடவடிக்கைகளை, நாம் எப்போதுமே பிரித்தே பார்க்கிறோம். நமது தின நடவடிக்கைகளில், சில நேரம் ஒதுக்கி நாம் கோவிலுக்கு செல்கிறோம். நாம் ஜெபம் செய்யும்போது, மற்ற வேலைகளை நிறுத்தி விடுகிறோம். ஒருவர் ரொம்பவும் பக்தியாக இருக்கும்போது, அவரை பக்தி வெறி கொண்டவர் என்று நினைக்கிறோம். ஏன்?

திருப்பலியில் பங்கு கொள்ளுதல், சமய சடங்குகளில் கலந்து கொள்ளுதல், ஜெபங்கள், கோவில் பணிகளில் பங்கு கொள்வது மட்டும் தான், பரிசுத்தமானது என்றும், கடவுளின் மாட்சிமைக்காக செய்கிறோம் என்று நாம் நினைத்து கொள்கிறோம். நாம் ஒவ்வொரு கனத்தையும், நாம் புனிதமாக்கி கொள்ள முடியும். எப்படியெனில், நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும், கடவுளை மகிமைபடுத்தவதற்காக செய்தால். !

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: