மார்ச் 1, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் முதல் ஞாயிறு
Genesis 9:8-15
Ps 25:4-9
1 Peter 3:18-22
Mark 1:12-15
http://www.usccb.org/nab/readings/030109.shtml
Audio:
http://ccc.usccb.org/cccradio/NABPodcasts/09_03_01.mp3
அதிகாரம் 1
12 உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.13 பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.14 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.15 ' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ' என்று அவர் கூறினார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், யேசு கிறிஸ்து, யோர்தான் ஆற்றில் ஞானஸ்நாணம் பெற்றவுடன், அவருக்கு நடந்த முதல் நிகழ்ச்சியை பற்றி கூறுகிறது. சோதனைகளுக்கு ஆட்படுத்தபட்டார்.
யேசு கிறிஸ்து தந்தையின் விருப்பத்திற்கு தன்னை முழுமையாக கையளித்ததை இந்த ஞானஸ்நாணம் குறிப்பிடுகிறது. அந்த தண்ணியிலிருந்து எழுந்து வரும்போது, அவரின் பழைய வாழ்க்கையை தொலைத்து, புதிய கடவுளின் சேவை வாழ்வை துவங்கினார்.
கடவுள் அவர் மேல் பெருமிதமடைந்தை அங்கே கூறுகிறார். மனிதனான கிறிஸ்துவை, பரிசுத்த ஆவியானவர், முழுமையாக ஆவியால் நிரப்புகிறார். யேசு கடவுளாக முழுமையான பரிசுத்த ஆவியை கொண்டிருப்பவர். (100 சதவீதம், முழுமையான ஆவியை கொண்டிருப்பவர், ஏனெனில் யேசுவும், பரிசுத்த ஆவியும் ஒரே கடவுள்), ஆனால், யேசு முழுமையான மனிதனாக இப்போது இருக்கும்பொழுது, பரிசுத்த ஆவியானவர் ஆவியால் யேசுவை முழுதும் நிரப்பினார். நாம் இந்த அனுபவத்தை யோர்தான் ஆற்றில் எப்படி நடந்திருக்கும் என்று கற்பனை பன்னி பார்த்தால், இந்த பரிசுத்த ஆவியின் கொடை எப்படி யேசுவை ஆவியால் அவரை இறைவனில் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றார் என்பது புரியும். அதற்கு அடுத்ததாக சாத்தானின் சோதனை நடக்கிறது.
இதே மாதிரியாகத்தான் நமக்கும் நடக்கிறது. புதிய விசுவாசத்தில் நாம் அதிகம் வளர்ப்பதற்கான ஆயத்தங்களில் இருக்கும்போதும், அல்லது, கடவுளின் விருப்பத்திற்கு இணங்க, அவர் இறையரசிற்காக, நமக்கு அழைப்பு விடுக்கப்படும்போது, நம்முடைய விசுவாசத்திர்கும், மனப்புர்வமான விருப்பத்திற்கும் சோதனை உண்டாகின்றது. எனினும், இப்படி ஒரு சோதனை வந்தால் தான், நம்முடைய விசுவாசம் தீவிர விசுவாசமானது என நமக்கு தெரியும். நமது ஆன்மீக வாழ்வு நல்ல முதிர்ச்சி அடைந்திருக்கிறது என்று எப்படி நமக்கு தெரியும்? நாம் எப்படி இறையரசிற்கு இறைசேவை செய்து மார்றத்தை உண்டாக்கலாம், அதற்கு நாம் தயாராய் இருக்கிறோம் என்பதை நாம் எப்படி அறிவோம்.
சில நேரங்களில், நம் உணர்வுக்கு தெரியாமலே, நமது புது விசுவாச வளர்ச்சி, போதுமானதாக இல்லை நாம் முடிவுக்கு வந்து விடுகிறோம். நமக்கு சோதனை வந்தால், நாம் சாத்தானிடம் தோற்றுவிடுவோம் என்று எண்ணி, நமது விசுவாச வளர்ப்பில் நாம் அப்படியே தேங்கி நிற்கிறோம். கிறிஸ்துவோடு சேர்ந்து இறையரசிற்காக நாம் உழைப்பதற்கு ஈடுபடுவதில்லை. நமது ஆன்மீக வாழ்வில் உயர்வதில்லை ?
மேலும் பல சோதனைகள்!
இந்த தவக்காலத்தில் தான், நமக்கு தினமும் வரும் சோதனைகள் என்ன என்று நாம் சிந்தனை செய்ய சரியான தருனம். விசுவாசத்தில் நாம் வளர தடையாக இருக்கும் சோதனைகள் யாவை என்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
நாம் ஒவ்வொரு முறையும் நமது பாவத்திற்காக ஆண்டவரிடம் மண்னிப்பு கேட்கும்பொழுது, நாம் இன்னும் வலிமை அடைகிறோம். மேலும் ஒரு அடி எடுத்து, பாவசங்கீர்த்தனம் செய்யும் போது, பங்கு தந்தை மூலம் ஆண்டவர் நமக்கு நிறைய அருளை பொழிந்து , அந்த கொடையால், உங்களுக்கு வரும் சோதனைகள் அனைத்தும் வலிமையிழந்து போகும்.
இந்த உலகில் சாத்தானை ஒழிக்க வேண்டும் என்ற கடவுளின் நோக்கத்திற்கு நாம் துனையாக இருக்க இப்படி நடந்து கொண்டால் முடியும்.
சோதனகள் எல்லாம் கடவுளின் ஆசிர்வாதமாக நினைத்துபார். உங்கள் வாழ்க்கையை புனிதபடுத்தி கொள்ள ஒரு வாய்ப்பாக பயனபடுத்திகொள். யேசுவை போல மாற இது உதவும். மேலும் விசுவாசத்தில் வளர உதவும்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment