டிசம்பர் 13, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால மூன்றாம் ஞாயிறு
Zeph 3:14-18a
Isaiah 12:2-6
Phil 4:4-7
Luke 3:10-18
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 3
10 அப்போது, ' நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர்.11 அதற்கு அவர் மறுமொழியாக, ' இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும் ' என்றார்.12 வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, ' போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்? ' என்று அவரிடம் கேட்டனர்.13 அவர், ' உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள் ' என்றார்.14 படைவீரரும் அவரை நோக்கி, ' நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டனர். அவர், ' நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள் ' என்றார்.15 அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.16 யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, ' நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.17 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார் ' என்றார்.18 மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.
(thanks to www.arulvakku.com)
திருவருகை ஞாயிறின் மூன்றாம் வாரத்தில், நாம் ஆவியின் மகிழ்ச்சியை நோக்கி, அதனை கருத்தில் கொண்டு இந்த வாரத்தை கொண்டாடுகிறோம். எல்லா வாசகங்களும், முழுமையான மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் காட்டுகிறது. மேலும் சந்தோசமான எதிர்பார்ப்பையும் கூட்டுகிறது. நற்செய்தியில், யோவான் நற்செய்தியை மக்களுக்கு கூறுகிறார். மக்கள் எல்லோரும், சந்தோசமான எதிர்பார்ப்புடன், கடவுள் என்ன செய்ய போகிறாரோ என்று எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
சந்தோசாமாக இருப்பது, மகிழ்ச்சியுடன் நமது செயல்கள் செய்வதுமே இறைசேவையாகும். நீங்கள் அனைவரும் இதனை செய்ய அழைக்கப்பட்டுள்ளீர்கள். எங்கெல்லாம், நம்பிக்கையின்மையும், சந்தோசமின்மையும், கலக்கமும் உண்டாகிறதோ , அங்கெல்லாம், நீங்கள் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுக்க அழைக்கப்பட்டுள்ளீர்கள்.
யோவான் இந்த இறைசேவையை (மகிழ்ச்சியை பகிரும்) எப்படி செய்தார் என்பதை பார்ப்போம். அவர் சாதாரான ஒட்டக தோலை உடுத்தி, எல்லாரும் மனத்திரும்புங்கள் என்று பயமுறுத்தும், மனிதராக நாம் பார்க்கலாம். ஆனால், கொஞ்சம் உற்று நோக்குங்கள், மக்களை யேசுவின் வருகையை எதிர்பார்த்து அவரை வரவழைக்க தயார்படுத்தினார்.
நீங்களும் நானும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு பொறுப்பானவர்கள் இல்லை. நாம் அவர்களை மகிழ்ச்சிபடுத்தும் இறைசேவையை செய்தாலும், அவர்கள் அதனால் சந்தோசப்படவில்லை என்றால், நாம் நம் இறைசேவையில் தோற்று போவதில்லை. அவர்கள் சந்தோசத்தை அடையவில்லை என்றால், அவர்கள் இன்னும் யேசுவை ஏற்று கொள்ளவில்லை என்று அர்த்தம்.
சந்தோசத்தின் ஊற்று யேசு தான். நாம் அவரோடு இனைந்தால், கடவுளின் அன்பில் நாம் திளைத்து, நாம் மிகவும் கடினமான ப்ரஸ்னையில் இருந்தாலும், அவரின் அனுக்கமான அன்பினால் நாம் அமைதியுடனும், சந்தோசத்துடனும் இருக்க முடியும். இந்த இனைப்பை கடவுளோடு மற்றவர்கள் அடைய வேண்டும் என்ற உண்மையை, அவர்களுக்கு உணர்த்தினால், நம் மகிழ்சிசியின் இறைசேவை அவர்களை சென்றடையும். யேசுவின் சந்தோசம் , அவரின் மகிழ்ச்சியின் பக்கத்தை, மற்றவர்கள் தெரிந்து கொள்ள நாம் கடமைபட்டுள்ளோம். மேலும், அவரின் எல்லா போதனைகளிலும் உள்ள மகிழ்ச்சியை நாம் அவர்களுக்கு தெரியபடுத்த வேண்டும். அதன் பலனை அவர்கள் தெரியவேண்டும்.
நாம் நமது எதிரியையும் அன்பு செய்ய வேண்டும் என்று யேசு நம்மை கேட்டு கொள்கிறார். நமக்கு தொந்தரவு செய்கிறவர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறு செய்வது நமக்கு ஒன்றும் சந்தோசமில்லை.நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், பரிசுத்த வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்று நாம் கண்டறிந்து, அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலம், யேசுவின் சந்தோசமான அன்பினை அவர்களோடும், நம்மோடும் இனைத்து கொண்டு, அவரின் போதனையை நாம் பின்பற்றுவது ஆகும். இதற்காக நாம் மிகவும் துன்பப்பட்டாலும், இந்த இறைசேவையின் விளைவு, மிகவும் மகிழ்ச்சியான சந்தோசத்தை கொடுக்கும்.
யேசு நாம் எப்படி பரிசுத்த மாக வாழ்வது என்று சொல்வதோடு, பரிசுத்த மாக இருக்க நமக்கு ஆற்றலையும் தருகிறார். அவரின் பரிசுத்த ஆவியை நமக்கு தருகிறார். யோவான் சொல்வது போல, நாம் மனத்திரும்ப வேண்டும் என்று பயப்பட வேண்டியதில்லை. கிறிஸ்துவுடன் இனையும் மகிழ்ச்சியை, நாம் மற்றவர்களுக்கு காட்டி, பரிசுத்த ஆவி நம்மில் செய்யும் செயலை மற்றவர்கள் அறிந்து கொள்ள செய்ய வேண்டும். மேலும் யேசு தான் நமது மகிழ்ச்சிக்கு சந்தோசம் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள செய்ய வேண்டும்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2009 by Terry A. Modica
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment