Friday, November 27, 2009

29 நவம்பர் 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

29 நவம்பர் 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால முதல் ஞாயிறு
Jeremiah 33:14-16
Ps 25:4-5, 8-10, 14
1 Thes 3:12-4:2
Luke 21:25-28, 34-36
லூக்கா நற்செய்தி

அதிகாரம் 21
25 ' மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள்.26 உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும்.27 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள்.28 இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. ' ' 34 மேலும் இயேசு, ' உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்.35 மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும்.36 ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள் ' என்றார்.


(thanks to www.arulvakku.com)
உங்கள் சந்தோசத்தை, இன்பத்தை எது எடுத்து கொண்டு போகிறது? இந்த திருவருகை காலத்தில், நமது சந்தோசத்தை, இன்பத்தை திருப்பி கிடைக்க யேசுவிடம் வேண்டுவோம். தற்போதைய உலகத்தில், இந்த பொருளாதார தடுமாற்றம் உள்ள காலத்தில், கிறிஸ்துவை நாம் பின் செல்வது, நமக்கு நம்பிக்கை தருகிறது. இந்த கஷ்டமான காலங்களில் கூட, நாம் சந்தோசமாக இருக்க முடிகிறது.

இன்றைய உலக நிலையில், கத்தோலிக்கர்கள் அனைவரும் திருப்பலிக்கு செல்வது நல்லது என்று நாம் அனைவர்களும் நம்புகிறோம். கிறிஸ்துவின் ப்ரசன்னத்தில், திருப்பலியிலும், கோவிலிலும் கண்டு நாம் மாறுகிறோமா? அப்படி மாறினால், நீங்கள் கோவிலை விட்டு வெளியே வந்த பின்பு, சந்தோசத்திலும், அன்பிலும் நிறைந்து இருக்கிறீர்களா? சரிதானே? மற்றவர்கள் உங்கள் சந்தோசத்தை உங்களில் பார்க்கிறார்களா? சரிதானே?
நமது விசுவாசத்தின் உண்மையை தெரிந்து வைத்திருப்பதற்கும், அதனை அப்படியே நம் வாழ்வில் கடைபிடித்து வாழ்வதற்கும் வேறுபாடு உள்ளது. அந்த போலியற்ற நம்பதக்க வாழ்வை தான் நம்மிடமிருந்து மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நீங்கள் யேசுவிடம் வேண்டி இன்னும் அவரிடமிருந்து எந்த வேண்டுதலுக்கு அவரின் ஆசியையும், கொடையையும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறீர்கள் ? திருப்பலியில் அந்த வேண்டுதலை அவரிடம் வைக்கும்போது, நம்பிக்கையுடன் கேட்கிறீர்களா? அந்த நம்பிக்கையை நாம் அனுபவிக்கவில்லை என்றால், நமக்குள் சந்தோசம் வராது.

திவ்ய நற்கருணையை குருவானவர் புனிதப்படுத்தும் பொழுது, குரு யேசுவிடம் நமது மனக்கவலைகளிலுருந்து நம்மை விடுவிக்க வேண்டுகிறார். நமது கவலைகள் , யேசு நம்மிடம் திவ்ய நற்கருணை மூலமாக வருகிறார் என்பதனை நாம் அறிய முடியாமல் தடுத்து விடுகின்றன. அதனால் நாம் நம்பிக்கை இழந்து விடுகிறோம்.

இன்றைய நற்செய்தியில், யேசு அவரின் இரண்டாவது வருகையை பற்றி கூறுகிறார். ஆனால் இதனை நம் தின வாழ்விலும் இனைத்து ஆய்வு செய்யலாம். நம் வாழ்வில் புதிதாக தோன்றியுள்ள தொந்தரவுகள் ப்ரஸ்னைகள் நமக்கு இன்னும் புரியாமலிருக்கலாம், அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று நமக்கு தெரியாமல் இருக்கலாம். யேசு இதனை எதிர்கொள்ள உங்களுக்கு உதவி செய்ய ஆசைபடுகிறார். எனினும், நமது கவனமெல்லாம், நமக்கு ஏற்பட்டுள்ள ப்ரச்சினையில் தான் இருக்கிறது, மாறாக, கிறிஸ்துவின் மேல் இல்லை. நம்மை நமது மனக்கவலைகளும், சஞ்சலங்க்களும் தான் ஆட்சி செய்கிறாது, கண்டிப்பாக கிறிஸ்துவின் மேல் உள்ள நம்பிக்கையுமில்லை, அதனால் நமக்கு மகிழ்ச்சியும் இல்லை.
நமது இதயம் இறைவனின் பால் இருக்க சோம்பலாய் இருக்கும்போது, யேசுவின் மத்தியில் நாம் இருக்க மறந்து விடுகிறோம். பரிசுத்த ஆவியின் அறிவுறுத்தலை, நாம் கேட்க நிராகரிக்கிறோம். ஆனால், நமது மகிழ்ச்சியை நமக்கு மீண்டும் கிடைக்க யேசுவிடம் வேண்டினால், நாம் விழிப்புடனும், எதிர்பார்ப்புகளுடனும், எல்லாம் அறியும் நிலையில் இருக்க முடியும், நாம் யேசுவை நம்பி இருந்தால் தான், நாம் சக்தியுடனும், தைரியத்துடனும், நம் வழியில் வரும் எந்த ஒரு ப்ரச்சினையும் நாம் எதிர்கொள்ள முடியும்.

இந்த உலகம் பல கவலைகளால், பயத்துடன் வாழ்கிறது -- ஆனால் கிறிஸ்தவர்களோ - யேசுவை நம்புவதால், நமக்கு மகிழ்ச்சியும், சந்தோசமும் வருகிறது. அவரை நம்பி, மகிழ்ச்சியாக இருப்பது, அவ்வளவு ஒன்றும் சுலபமில்லை. தொடர்ந்து முயற்சியுடனும் யேசுவை நம்ப நாம் அவரை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் இதில் சோம்பலாய் இருந்தால், நமது வாழ்வு மிக மோசமாகவே இருக்கும்.

© 2009 by Terry A. Modica
This work is NOT in Public Domain, and should NOT be copied without permission. For PERMISSION and info on how to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: