Friday, February 5, 2010

பிப்ரவரி 7, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 7, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 5ம் ஞாயிறு
Is 6:1-2a, 3-8
Ps 138:1-5, 7-8
1 Cor 15:1-11
Luke 5:1-11



லூக்கா நற்செய்தி


அதிகாரம் 5

1 ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்.2 அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.3 அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.4 அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ' ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் ' என்றார்.5 சீமோன் மறுமொழியாக, ' ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் ' என்றார்.6 அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே,7 மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.8 இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ' ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் ' என்றார்.9 அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.10 சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, ' அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய் ' என்று சொன்னார்.11 அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

(thanks to www.arulvakku.com)

பல நேரங்களில், அடிக்கடியும் கூட, நாம் கேட்காமலே, கடவுள் நமக்கெல்லாம் பல உதவிகள் செய்து வருகிறார். அப்படி சீமோனுக்கு செய்ததை, நாம் இன்று பார்க்கிறோம். அவர்கள் அளவிற்கு அதிகமான மீன்களை பிடிப்பதற்கு உதவினார்.

அவருடைய நோக்கம் என்ன? அந்த மீனவர்கள் யேசுவிற்கு படகை கொடுத்ததினால், அவர் அவர்களுக்கு உதவி செய்தாரா? நீங்கள் செய்த உதவிக்கு , அவர் நன்றியாக மேலும் பல உதவி செய்வார் என்று நினைக்கிறீர்களா? இல்லை, இது அவரின் பரிசு அல்ல, அதனையும் தான்டி , அவரின் உதவிகளுக்கு பின் பெரிய விசயம் இருக்கிறது.

இன்றைய நற்செய்தியில், கிறிஸ்து எப்படி நம்மிடம் நெருங்கினார், மற்றும் எப்படி தொடர்பு கொண்டார் என்பதை பார்ப்போம்.
1 -- முதலில், மீனவர்களுக்கு, யேசுவை ஏற்கனவே தெரியும்; அவர்களெல்லாம், அவரை "மாஸ்டர்" என்று அழைப்பார்கள், ஏனெனில், அவர்களெல்லாம், கிறிஸ்துவின் மானவர்கள் ஆவர்.
2 -- இரண்டாவதாக, யேசு அவர்கள் எதிர்பார்க்காமலே அவர்களுக்கு உதவி செய்தார்.
3 -- மூன்றாவது, யேசு அந்த அன்பளிப்பை, அழைத்தலாக மாற்றினார்.
4 -- நான்காவது, சீடர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு, அவரின் அழைத்தலை ஏற்றார்கள்

.
கடவுள் நமது வாழ்வில் தலையிடும்பொழுது, நமது நன்மைக்காகவும், மற்றவர்களின் நன்மைக்காகவும் செய்கிறார். நாம் இந்த சமூகத்தில் ஒரு அங்கமாக உள்ளோம், கடவுளின் குடும்பத்தில் ஒரு அங்கமாக உள்ளோம். நாம் தனியாக ஒன்றும், கடவுளோடு உறவாடவில்லை. கடவுளோடு , நமது ஜெபத்திலும், திவ்ய நற்கருணையிலும், அவரின் வேண்டுதலிலும் , மற்றவர்களோடு நாமும் இனைந்து, அவர்களின் கவலைகளுக்கு, நாமும் அக்கறை கொன்டு, அவர்களின் வாழ்வில் நாமும் இனைகிறோம்.
நாம் உதவி கேட்டு செய்யும் ஜெபங்களுக்கு, நம் ஒருவரின் பலனுக்காக, நமக்கு கொடுக்கபடுவதில்லை. மாறாக, அதனால், பலர் பயனடையவே கடவுள் கொடுக்கிறார். நமக்கு கிடைக்கும் உதவியினால், பலர் பாதிக்கப்படுகிறார்களா? என்று கடவுள் எப்பொழுமே பார்க்கிறார், அவர்களின் மேலும் அக்கறை கொள்கிறார். கடவுள் உங்கள் வேண்டுதலுக்கு பதில் கொடுக்காமல் இருப்பது போல தோனலாம், ஆனால், அவர் எப்பொழுதுமே எல்லா சூழ்நிலையையும் பார்த்து தான் செய்வார். கடவுள் உங்கள் வேன்டுதலுக்கு , உதவி செய்தால், அது எத்தனை பேருக்கு பலனாகும் என்று பார்த்து கொண்டே இருக்கிறார்.

உங்களுடைய தனிப்பட்ட தேவைகளையும், ஆசைகளையும் கடவுள் மிகவும் அக்கறையுடன் பார்த்து கொள்கிறார். ஆனால், அந்த உதவிகளையெல்லாம், அழைத்தலாக மாற்றுகிறார்,அந்த அழைத்தல், உங்களால், முடிந்த செயல்கள், இறைசேவையாக, மக்கள் சேவையாக செய்ய அழைக்கப்படுகிறீர்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் எப்பொழுது கடவுளிடம் உதவி கேட்க ஆரம்பித்தீர்களோ, உங்களுக்கு கிடைக்கும் உதவி, மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும், என்று கடவுள் உங்களை அழைக்கிறார்.


நமது ப்ரச்னைகள் முடிவுக்கு வர, நாம் காத்திருக்கும் பொழுது, நாம் நம்மை தான்டி மற்றவர்களுக்காக அக்கறை படும் பொழுது, நாம் அமைதியையும், நம்பிக்கையையும் பெறுகிறோம். நமது கடின உழைப்பு இதனை கொடுக்கும். இது தான் நாம் அன்றாடம் செய்யும் அழைத்தலாகும்.


http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

No comments: