பிப்ரவரி 14, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 6வது ஞாயிறு
Jer 17:5-8
Ps 1:1-4, 6 (with 40:5a)
1 Cor 15:12, 16-20
Luke 6:17, 20-26
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 6
17 இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். 20 இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: ' ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே.21 இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.22 மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்.23 அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.24 ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள்.25 இப்போது உண்டு கொழுந்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள்.26 மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், ஏழைகளிடத்திலே, கடவுள் பரிவும் அன்பும் கொண்டு, அவர்கள் பக்கம் தான் இருப்பார் என்று நமக்கு தெளிவாக சொல்கிறார். ஏழைகள் (இவ்வுலக செல்வம் இல்லாமல் இருக்கும் ஏழைகள் மற்றும், பரிசுத்த வாழ்விலும் வளம் இழந்தவர்கள்), பசியுற்றவர்கள், அழுபவர்கள், பலர் வெறுப்புக்கு ஆளானவர்கள், விலக்கி வைக்கப்பட்டவர்கள், அவமானப்படுத்தபட்டவர்கள், யேசுவின் மேல் கொண்ட விசுவாசத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் அனைவரிடமும், கடவுள் பரிவும் பாசமும் கொண்டு அவர்கள் பக்கம் நிற்கிறார்.
மற்றவர்களின் துக்கத்திற்கு நாமும் ஒரு காரணமாக எப்பொழுது இருந்தாலும், நாம் கடவுளுக்கு எதிராக இருக்கிறோம். எடுத்து காட்டாக, மற்றவகளை பற்றி தவறாக கிசு கிசு பேசும்பொழுது, அந்த கிசு கிசு உண்மையாக இருந்தாலும், கூட, நாம் யேசுவிற்கு எதிராக வேலை செய்கிறோம்.
இழிவான ஜோக்குகள், நீதியற்ற வழக்குகள் பதிவு செய்வது, நம்மால் உதவ முடியும் என்று தெரிந்தும், தேவையானவர்களுக்கு அவர்கள் தேவை அறிந்தும் செய்யாமலிருப்பது எல்லாமே யேசுவிற்கு எதிரானது தான். மற்றவர்களை பயமுறுத்துவது, , எப்பொழுதுமே தாமதமாக செய்வது, மற்றவர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பது போன்ற செயல்கள் அனைத்தும் கடவுளுக்கு எதிரானவையே.
இது மாதிரியாக, கடவுளை தொடர்ந்து ஒதுக்கியும், எதிராகவும் செய்பவர்களுக்கு என்ன ஆகும்? அவர்களுக்கு அழிவு தான்!, கடவுள் மேல் நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ஆவர். (இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிட்டுள்ளது உள்ளது போல), தம்மையே நம்பியவர்களுக்கு துக்கமும், துன்பமும் அனுபவிப்பது தவிர்க்க முடியாதது ஆகும்.
சுய நலக்காரர்கள், அவர்களுடைய சொத்து மூலம் அதிக பயனடையலாம், ஆனால், அது தற்காலிகமானது தான், அதை எடுத்து கொண்டு மோட்சத்திற்கு செல்ல முடியாது அல்லது அந்த சொத்தை வைத்து கொண்டு, மோட்சத்திற்கான வழியை வாங்க முடியாது. இதற்கினிடையே, கடவுள் இந்த சொத்தையெல்லாம் அனுபவிக்காத ஏழைகள் பக்கம் நிற்கிறார். ஏனெனில் அந்த சொத்துக்கள் / செல்வங்கள் அவர்களுக்கு பகிர்ந்து அளிக்க படவில்லை.
அதேபோல, அழுபவர்களை பார்த்து, சிரிப்பவர்கள், அதிக நாள் சிரிக்க மாட்டார்கள். அடுத்தவர்களின் துன்பத்தால், இன்பம் பெறுபவது தற்காலிகமானது, மேலும் அதனால் உண்மையான திருப்தி அடைய முடியாது.
புகழுடனும், பிரபலத்துடனும், எல்லோராலும் புகழப்படுபவர்கள் , அவர்கள் திரும்பி நடக்க ஆரம்பிக்கும்போதே, அவர்கள் எல்லாரும் குறை சொல்ல ஆரம்பிப்பார்கள்.
கீழே தள்ளப்படுபவர்கள் எல்லாரையும் யேசு மேலே தூக்குகிறார். தன்னை தானே தூக்கி கொள்பவர்கள், ரொம்ப நேரம் தூக்க முடியாமல் தவிப்பார்கள் , அந்த துயரத்தினிடையே புன்னகைப்பார்கள் .
http://catholicdr.com/ebooks/Lent.htm
© 2010 by Terry A. Modica
This work is NOT in Public Domain and may NOT be copied without permission.
You may print one copy for your own personal use.
For PERMISSION and info on how to copy this reflection for sharing, see:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment