Saturday, June 19, 2010

ஜூன் 20,2010 ஞாயிறு நற்செய்தி,மறையுரை

ஜூன் 20,2010 ஞாயிறு நற்செய்தி,மறையுரை
ஆண்டின் 12ம் ஞாயிறு

Zec 12:10-11; 13:1
Ps 63:2-6, 8-9
Gal 3:26-29
Luke 9:18-24

லூக்கா நற்செய்தி


அதிகாரம் 9

18 இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' என்று அவர் கேட்டார்.19 அவர்கள் மறுமொழியாக, ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர் ' என்றார்கள்.20 ' ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்? 'என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ' நீர் கடவுளின் மெசியா ' என்று உரைத்தார்.21 இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.22 மேலும் இயேசு, ' மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் ' என்று சொன்னார்.23 பின்பு அவர் அனைவரையும் நோக்கி, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.24ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.



(thanks to www.arulvakku.com)


"நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" இந்த கேள்வியை தான் இன்றைய நற்செய்தி மூலமாக நம் ஒவ்வொருவருக்கும் கேட்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கை , இந்த கேள்விக்கு சரியான பதிலை கொடுக்கிறதா? , உங்கள் வாழ்வின் மூலமாகவும், உங்கள் பேச்சின் மூலமாகவும், யேசு தான் உங்கள் கடவுள், உங்களை இரட்சிப்பவர், உங்கள் அன்பு , உங்கள் போதகர், வழிகாட்டி, மேலும், மிக்ச்சரியான வாழ்வு வாழ்வதற்கு எடுத்து காட்டாக யேசு தான் இருக்கிறார் என்பதனை ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் எடுத்து சொல்கிறீர்களா?

உங்கள் வாழ்வு நலமாக இருக்கும்போது, யேசுவால் தான் இத்தனை ஆசிர்வாதமும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்கிறீர்களா? நீங்கள் ப்ரச்சினைகளில் இருக்கும்போதும், நீங்கள் மற்றவர்களை மன்னித்து, யேசு உங்கள் வலியையும் வேதனையையும் , அவர்களின் பாவங்களையும் யேசு சிலுவைக்கு எடுத்து சென்று விட்டார் என உங்களால் சொல்ல முடிகிறதா? சரியான காரணத்திற்காக நீங்கள் கோபப்படும் பொழுது, மற்றவர்களுக்கு எரிச்சல் கொடுக்கும் பேச்சை நீங்கள் பேசுகிறீர்களா? அல்லது யேசுவிடம் வேண்டி, இருவருக்கும் நடுவே அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என்று கேட்கிறீர்களா?


நமது உதடுகள் யேசு தான் கடவுள் என்று சொல்லலாம் ஆனால், நமது வாழ்வோ அதற்கு எதிர்மாறாக இருக்கும். நமது நடவடிக்கைகள் மூலம், நாம் என்ன செய்தியை கொடுக்கிறோம் என்பதில் நாம் கன்னும் கருத்துமாக இருக்க வேண்டும். மிக கவனத்துடன் நமது வாழ்வை நடத்திட வேண்டும், நமது வார்த்தைக்கும், வாழவிற்கும் ஒற்றுமை இருக்க வேண்டும்.


நமது உள்ளத்திள் ஏற்படும் விளைவுகளாலும், வலியினாலும், பயத்தினாலும் நாம் பாவம் செய்கிறோம். நமது நடவடிக்கைகளில் என்ன மாறுதல் என்று நாம் கவனித்து கூர்ந்து பார்த்தால், யேசுதான் கடவுள் என்பதனை நாம் நினைவில் கொள்ளாமல் வைக்க என்ன நம்மிடம் இல்லை என்பது தெரியும். இதன் மூலம், நாம் யேசுவின் அன்பையும், அவரது குணப்படுத்தலையும் நாம் பெறுவோம்.

"எனது வாழ்வு யேசு தான் கடவுள் என்பதை ஆணித்தரமாக காட்டுகிறதா? , அவரின் உண்மையான ஆற்றலை , அன்பை காட்டுகிறதா? இந்த கேள்வியை நாம் ஒவ்வொரு நாளும் நமக்குள்ளே கேட்டு கொள்ள வேண்டும். இதற்குண்டான பதிலில்,நாம் எங்கே முன்னேற வேண்டும் என்பது நமக்கு தெரியும். அதன் மூலம் யேசு யார், அவர் எப்படிபட்டவர் என்பதும் நமக்கு தெரியும். இதன் மூலம், நம்மால் ஏன் மற்றவர்கள் மனதை மாற்ற முடியவில்லை என்பதும் தெரியும். நமது வாழ்க்கை வேறாக இருக்கும்பொழுது, நமது வார்த்தையை யாரும் நம்புவது இல்லை.


இயேசு யார்? அவருக்கு உன்னை நேரடியாகவும், உன் உள்ளத்தையும் அறிந்தவர். உனக்கு தகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் உன்னை முழுதும் அன்பு செய்பவர், உனக்கு எப்பொழுதும் உதவி செய்பவர், நீங்கள் அந்த அன்பையும், உதவியையும் கான முடியாவிட்டாலும் கூட. என்றுமே உன்னை நிராகரித்ததில்லை. இதனை நீங்கள் நம்பினால், அவரிடம் பாதுகாப்பை நீங்கள் உணர முடியும். உங்கள் வாழ்க்கையில் எந்த ப்ரஸ்ன்னை இருந்தாலும், அவரின் அன்பு உங்களை என்றுமே அவர் பக்கத்தில் இருக்க வைக்கும். உங்கள் தூய சிலுவையை எடுத்து கொண்டு, அவரின் பின் செல்லுங்கள்.

© 2010 by Terry A. Modica

No comments: