ஜுன் 6, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
நற்கருணை திருவிழா
Gen 14:18-20
Ps 110:1-4
1 Cor 11:23-26
Luke 9:11b-17
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 9
11 அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.12 பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர்.13 இயேசு அவர்களிடம், ' நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார். அவர்கள், ' எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும் ' என்றார்கள்.14 ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, ' இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள் ' என்றார்.15 அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.16 அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார்.17 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
(thanks to www.arulvakku.com)
அன்பானது ஐந்து அப்பங்களும் ,இரண்டு மீனும் போன்றது, அதனை மற்றவர்களிடம் கொடுக்காதவரை அன்பு மிகவும் குறைவாகவே காணப்படும்." கலிலேயே கடற்கரையில் வடக்கு பக்கம் உள்ள கோவிலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தான், இயேசு இரண்டு மீனையும் , ஐந்து அப்பங்களையும் பல மடங்காக பெருக்கினார். அவரை பார்க்க வந்த அனைவருக்கும் உணவு வழங்கினார்.
அந்த கோவிலின் பீடத்தின் முன்னே மொசைக்கில் செய்யப்பட்ட மீனும், ரொட்டி துண்டுகளும் வைக்கப்பட்டுள்ளது. எந்த பாறையிலிருந்து யேசு அதனை பல மடங்காக பெருக்கினாரோ அதற்கு பக்கத்திலேயே உள்ளது. ஆனால் அங்கே 4 ரொட்டி துண்டுகள் தான் உள்ளது. ஏன்? ஐந்தாவது ரொட்டி துண்டானது, நமக்கு ஒவ்வொரு திருப்பலியிலும் திவ்ய நற்கருணையாக வழங்கப்படுகிறது.
இந்த கோவிலின் முகப்பை இந்த முகவரியில் நீங்கள் பார்க்கலாம். http://wordbytes.org/holyland/pilgrim049.htm
திவ்ய நற்கருணை கிறிஸ்துவின் உண்மையான ப்ரசன்னத்தை விட மேலானது. கிறிஸ்துவின் உடலுடன் இணைவதைவிட மேலானது, ஏனெனில், நாம் அனைவரும் திருச்சபயில் இணைகிறோம். இது ஒரு அற்புதமான தெய்வீக நிகழ்வாகும். பல மடஙக பெருகுகிறது. நமக்கு என்ன குறை இருந்தலும், யேசுவாக , பரிசுத்த ஆவி மூலம் நம்மில் வருகிறது. திருப்பலியில், நாம் திவ்ய நற்கருனையில் பங்கு கொள்ளும் பொழுது, நம்மிடம் இல்லாததை, பல மடங்காக பெருக்க வேண்டும் என நாம் யேசுவிடம் கேட்கலாம்.
இயேசு நமக்கு தேவையன அனைத்தையும் கொடுப்பார் என்று நாம் நம்பலாம், சரியான நேரத்தில், நம்மால் எவ்வளவு எடுத்து கொள்ள முடியுமோ அவ்வளவையும் தருவார். இருந்த போதிலும், இது ஒரு வளரும் செயலாகும்.
உங்கள் வாழ்க்கையில், உங்களுக்கு தேவையான அன்பு கிடைத்துள்ளதா? நம்மில் பலர் இல்லை என்று தான் சொல்வார்கள். ஏனெனில், கடவுளை தவிர மற்றவர்கள் யாராலும், நமக்கு தேவையான அன்பை கொடுக்க முடியாது. யாராலும், அவர்க்ள நம்மிடம் மிகவும் நெருக்காமாக இருந்தாலும், நம் நம்பிக்கைக்கு தகுந்தவர்களாக இருந்தாலும், கிறிஸ்துவோடு நெருக்கமாக இருந்தாலும், அவர்களால் நமக்கு தேவையான அன்பை கொடுக்க முடியாது.
திவ்ய நற்கருணை, கடவுளின் பரிசுத்த அன்பிற்கும், நமக்கும் இவ்வுலகில் இணைப்பை ஏற்படுத்துவது ஆகும். திவ்ய நற்கருணையோடு நம் இணைப்பை நாம் சரியாக புரிந்து கொள்ளாததால் தான், நாம் இன்னும் முழுமையான அன்பை உணரமுடியவில்லை. அந்த நற்கருணையின் முழுமையை , நம் வாழ்க்கையை மாற்றும், நற்கருணையை முழுமையாக பெற , நாம் நற்கருணையாக, முழு அன்புடன் இருக்க வேண்டும். மற்றவர்களின் நலனுக்காக , தியாகம் செய்த அன்பு தான் திவ்ய நற்கருணை. நீங்கள் உஙளுக்கு போதிய அளவு அன்பு கிடைக்கவில்ல என்றால், எவ்வளவு அன்பு நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ , அவ்வளவையும் கொடுங்கள். எல்லோருக்கும் திவ்ய நற்கருணையாக இருங்கள்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment