ஜூன் 27, 2010 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஆண்டின் 13ம் ஞாயிறு
1 Kings 19:16b, 19-21
Ps 16:1-2, 5, 7-11
Gal 5:1, 13-18
Luke 9:51-62
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 9
1 இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,52 தமக்கு
முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.53 அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.54 அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, ' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? ' என்று கேட்டார்கள்.55 அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.56 பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.
57 அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, ' நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் ' என்றார்.58 இயேசு அவரிடம், ' நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை ' என்றார்.59 இயேசு மற்றொருவரை நோக்கி, ' என்னைப் பின்பற்றிவாரும் ' என்றார். அவர், ' முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும் ' என்றார்.60 இயேசு அவரைப் பார்த்து, ' இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும் ' என்றார்.61 வேறொருவரும், ' ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும் ' என்றார்.62 இயேசு அவரை நோக்கி, ' கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
உங்களை யாரும் ஏற்று கொள்ளவில்லையெனில், அந்த நிலைமையை எப்படி சமாளிப்பீர்கள்? இன்றைய நற்செய்தியில் சீடர்கள் அந்த நிலைமையை எப்படி கையாண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. யேசுவுக்கு முன்னரே சாமரியரின் ஊருக்கு சென்றவர்கள், யேசு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னார்கள். ஏனெனில், சமாரியர்கள் ,யூதர்களுக்கு எதிரான தவறான எண்ணத்தில் இருந்தனர். யேசு சொல்வதை அவர்கள் கேட்க விரும்பவில்லை. யேசு என்ன சொல்ல விரும்பினாலும், அவர்கள் இதயத்தை மூடி விட்டார்கள். அதனால், உலகை இரட்சித்தவரோடு இனைந்து இருக்கும் அனுபவத்தை அவர்கள் தவற விட்டு விட்டனர்.
உங்களோடு நெருக்கமாக இருப்பவர்களிடம், யேசுவை கொன்டு செல்லும்பொழுது, அவர்கள் ஏற்று கொள்ளவில்லையெனில், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? நீங்கள் சொல்வதை ஒருவர் கேட்கவில்லையெனில், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? திருச்சபையின் போதனைகளை, நீங்கள் விளக்கி சொல்லும்பொழுது, அதனை புரிந்து கொள்ள கூட அவர்கள் முயற்சிக்காத பொழுது, நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
உங்களை விட, யேசுவின் சீடர்கள் அவர்கள் ஏற்று கொள்ளப்படாததை அதிகம் விரும்பவில்லை. யேசுவின் நெருங்கிய நன்பர்களான ஜானும், ஜேம்ஸும் , அவர்களை நெருப்பில் வைத்து எரிக்க வேண்டும் என விரும்பினர். "' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா?" என்று யேசுவிடம் கேட்டனர். இயேசு ஏற்கனவே யாரவது "உங்களை யாராவது நிராகரித்தால், உங்கள் கால் செருப்பில் உள்ள தூசியை தட்டிவிட்டு, அந்த இடத்தை விட்டு செல்லுங்கள் " என்று கூறியிருக்கிறார். தற்போது, அவர் என்ன போதனை கூறினாரோ, அதையே அவர் பின் பற்றினார். யேசு அவரின் நம்பிக்கைகளை , அந்த ஊர் மக்களுக்கு தினிக்க விரும்பவில்லை. அவரின் போதனைகளை அந்த ஊருக்கு தேவை என்று தெரிந்திருந்தும், அவர் அந்த போதனைகளை அங்கே கூறியிருக்க முடியும்.
நாம் இயேசுவை பின் செல்ல வேண்டும் என்றால், நாம் நமக்கு பிடித்த நிறைய விசயங்களை, கெட்ட எண்ணங்களை விட்டு அவர் பின் செல்ல வேண்டும். மற்றவர்கள் மேல் உள்ள பொறாமையும், அதிருப்தியும், விருப்பமின்மையும் நீங்கள் தூக்கி எறியவேண்டும். யாரும் உங்களை ஏற்று கொள்ள வில்லையெனிலும், அதனை ஏற்று கொண்டும் நாம் யேசுவின் பின் செல்ல வேண்டும். நமது எண்ணங்களை மற்றவர்கள் கட்டுபாட்டுக்குள் விட கூடாது. நமது காலணியில் உள்ள அழுக்கை துடைத்து எறிய வேண்டும் என்றால், நமது தீய எண்ணங்களை துடைத்து விட்டு, யேசுவின் சந்தோசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
இன்றைய நற்செய்தியின் முடிவில், யேசுவை பின் செல்வது, எப்போதுமே முன்னேறும் செயலாகும், என்று யேசு விளக்குகிறார். நாம் எப்போதுமே ஏதாவது ஒரு விசயத்தைவிட்டு வெளியே வருகிறோம். யாராவது நிராகரித்தால், அங்கிருந்து வெளியே வருகிறோம், அதிருப்தியான விசயத்தை விட்டு வெளியே வருகிறோம். இதயம் இல்லாதவர்களிடமிருந்தும் யேசுவை பின் செல்லாதவர்களிடமிருந்தும், நாம் வெளியே வருகிறோம்.
முன்னேறி செல்ல, பரிசுத்த ஆவிதான் , நம்மை தயார் பன்னி யேசுவை நாம் பெற்று கொள்ள உதவி செய்பவர். நாம் யாரையாவது, யேசுவிடம் அழைத்து வந்து, அந்த முயற்சி வெற்றி பெறவில்லயென்றால், நாம் உண்மையாக தோல்வி அடையவில்லை; நாம் அறுவடை செய்யாமல், விதை விதைக்கிறோம். பரிசுத்த ஆவி அந்த விதையை வளர்த்து, அறுவடை செய்வார். நாம் மற்ற வயல்களை பார்த்து செல்ல வேண்டும்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment