செப்டம்பர் 19, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 16
முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர்
1 இயேசு தம் சீடருக்குக் கூறியது: ' செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது.2 தலைவர் அவரைக் கூப்பிட்டு, ' உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது ' என்று அவரிடம் கூறினார்.3 அந்த வீட்டுப் பொறுப்பாளர், ' நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.4வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும் ' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.5 பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ' நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்? ' என்று கேட்டார்.6 அதற்கு அவர், ' நூறு குடம் எண்ணெய் ' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ' இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும் ' என்றார்.7 பின்பு அடுத்தவரிடம், 'நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு மூடை கோதுமை' என்றார். அவர், 'இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார். 8நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.9 ' ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.10 மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.11 நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?12 பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?13 ' எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது. '
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், எப்படி ஒருவன் செல்வத்துடனும், பரிசுத்தமாகவும் இருக்க முடியும் என்று கூறுகிறது. பணமும், பொருட்செல்வமும் நமது கடவுளாக இருந்தால், நாம் பரிசுத்தமானவர்களாக இருக்க முடியாது; நாம் கடவுளிடமிருந்து பிரிந்து விடுகிறோம். ஏனெனில் நமக்கு கிடைத்த பொருட்களை தாராளாமாக மற்றவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று பைபிள் குறிப்பிட்டு சொல்கிறது.
செல்வத்தை சேர்த்து கொள்வதில் நாம் அதிகம் ஆர்வம் காட்டி, அதற்கு முக்கியத்துவம் கொடுத்தும், அதனை மற்றவர்களிடம் பிரித்து கொடுப்பதில் முக்க்யத்துவம் கொடுக்காமல் இருந்தால், கடவுள் நமது தலைவராக இருக்க மாட்டார். இது பொருட்செல்வத்திற்கு மட்டும் இல்லை, நம்மிடம் உள்ள எல்லா நல்ல விசயங்களுக்கும் பொருந்தும்.
நமக்கு எல்லா வகையான திறமைகளும், ஆற்றலும், செல்வமும் கொடுக்கப்பட்டிருக்கிறது; இதனையெல்லாம் பகிர்ந்து கொள்வதற்கு நாம் எந்த அளவிற்கு தயாராக இருக்கிறோம்?
"நேர்மையற்ற முறையில் வந்த செல்வம்" எது என்றால், யேசு "மற்றவர்களுக்கு போய் சேரவேண்டியது" என்று சொல்கிறார். மற்றவர்களின் பணத்தை (கடன் ) நமது சொந்த உபயோகத்திற்காக வாங்கினாலும், கடவுளரசிற்கு அதனால், சிறிதளவேனும் பயன் இல்லையெனில் , நாம் நம்பிக்கையானவர்களாக கடவுளின் பணியாளனாக இல்லை
அதே போல, நமது நேரத்தை நமது சொந்த உபயோகத்திற்காக செலவழித்தாலோ, பரிசுத்தமற்ற விசயங்களில் செல்வழித்தாலோ, நாம் கடவுளரசிற்கு நம்ப தகுந்தவர்கள் இல்லை. இயேசு உங்கள் மூலமாக மற்றவர்களை ஆசிர்வதிக்க விரும்புகிறார். அவர்களுக்கு சேரவேண்டியதை உங்களிடம் வைத்து கொண்டிருக்கிறீர்கள், யேசு அதனை அவரின் அன்பளிப்பாக உங்கள் மூலம் கொடுக்க சொல்கிறார். நாம் இந்த கடமையை (கடவுளின் பொருளாதாரத்தில் முக்கிய கொள்கை ) ஒதுக்கி தள்ளினால், "உங்களுக்கு சேர வேண்டியதை யார் தருவார்?" என்று இயேசு கேட்கிறார்.
நாம் கடவுளின் நம்பிக்கைகுரிய பணியாளனாக இருந்தால், நமக்கு என்ன கிடைக்கும். நித்திய வாழ்விற்கு உரித்தான அத்தனை செல்வங்களும் நமக்கு உண்டு: ஆவியின் செல்வங்கள், கடவுளின் பாராட்டுதலும் , அவரின் முழு அன்பும், இன்னும் பல உங்களுக்கு கிடைக்கும்.
நமது செல்வங்களுடனும், பரிசுத்த வாழ்விலும் இருக்க வேண்டுமானால், நாம் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய அன்பை - கடவுளின் அன்பை- மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். நாம் இவ்வுலக செல்வங்களையும், நித்திய வாழ்வின் செல்வங்களையும்(விசுவாசம், ஞாணம், நம்பிக்கை, இன்னும் பல) , மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பதில் தான் நாம் கடவுளின் நம்பிக்கை உள்ள பணியாளனாக இருக்க முடியும்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நேற்றைய வாசகம் மனதைத் தொட்டது. எனினும் எனக்கு ஒரு கேள்வி உண்டு. நாம் பணத்தை ஒரு குறிக்கோளாக கொள்ளவில்லை ஆனால் பிறர் நம்மிடம் கடனாக பெற்றுக் கொள்ள விரும்பி அதற்கு வட்டியும் கொடுக்கும் பொழுது அதை கத்தோலிக்க கிறிஸ்துவனாக இருக்கும் ஒருவர் ஏர்றுக்கொள்ளலாமா?அதே போல நியாயமான வட்டிக்கு தன் பணத்தைக் கடனாக கொடுக்கலாமா? தயவு கூர்ந்து யாரேனும் பதிலளியுங்கள்
no. according to bible..
Post a Comment