Friday, September 24, 2010

செப்டெம்பர் 26, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டெம்பர் 26, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு
Amos 6:1a, 4-7
Ps 146:(1b) 7-10
1 Timothy 6:11-16
Luke 16:19-31

செல்வரும் இலாசரும்
19 ' செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.20 இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.21 அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.23 அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.24 அவர், ' தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன் ' என்று உரக்கக் கூறினார்.25 அதற்கு ஆபிரகாம், ' மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது ' என்றார்.27 ' அவர், ' அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.28 எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே ' என்றார்.29 அதற்கு ஆபிரகாம், ' மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும் ' என்றார்.30 அவர், ' அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள் ' என்றார்.31 ஆபிரகாம், ' அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள் ' என்றார். '

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் உள்ள பணக்காரனின் பாவம் என்ன? அவன் இறந்த பிறகு எதனால் அவனுக்கு அந்த சித்திரவதை கிடைத்தது.? செல்வத்துடன் இருப்பது ஒன்றும் பாவமில்லை; அவனுடைய ஆண்மாவை துன்புறுத்தியது எது என்றால், அவருடைய செல்வத்தை பிறருக்கு பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை, லாசருடனும் அவன் பகிரிந்து கொள்ளவில்லை, அவனுக்கு வாய்ப்பு இருந்தும் அந்த பணக்காரன் பயன்படுத்தி கொள்ளவில்லை.

மரணம் ஒன்றும் வாழ்வின் முடிவல்ல; நமது ஆண்மா, நமது மரணத்தில் தான் முழுதுமாக திறந்து கடவுளின் அன்பில் வாழ்வோம். மரணத்தின் மூலம்தான், நாம் கடவுளையும் அவர் நமக்கு கொடுத்த அன்பளிப்புகளையும், ஆற்றலையும் முழுது அறிந்து கொள்ள முடியும். மேலும், அந்த ஆற்றலை நாம் சரியாக பயன்படுத்த வில்லை என்றும் நாம் அறிவோம்.

நாம் நமது திறமைகளை, கடவுளின் அன்பளிப்புகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால், நாம் கடவுளரசில் முதலீடு செய்கிறோம். கடவுளின் பொருளாதாரத்தில், நமது முதலீடு பல மடங்கு பெருகும். நாம் கொடுப்பதை விட பல மடங்காக நமக்கு கிடைக்கும் அதனையும் நாம் பலரோடு பகிர்ந்து கொள்ளலாம்.

அதற்கு மாறாக, நாம் நமது செல்வத்தை நமக்காக மட்டும் வைத்திருந்தால், இருட்டறையில் இருக்கும் பூவை போல வாடிவிடும். இருட்டறையில் பூச்செடியினால் வளர முடியாது. எதையெல்லாம் காப்பாற்றி வைக்க ஆசைபடுகிறீர்களோ , அது உபயோகமில்லாமல் போகும், மேலும் விசாமாக கூட போகலாம்; பரிசுத்த வாழ்விலும் , சொந்த வாழ்விலும் தேங்கி நிற்கிறோம். நமக்கு கிடைத்த அன்பளிப்புகள் வீணாகி விடும். நமது சுய ஆசைகளுக்காக நாம் கடவுளோடு நமக்கு உள்ள இணைப்பை நாமே அழித்து கொள்கிறோம். அந்த கடவுள் தான் தாராள மனத்தின் அரசராவார்.

ஒவ்வொரு நாளும், நாம் நம்மளுடையதை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கடவுளின் ஆசிர்வாதங்களையும் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். லாசரை அந்த பணக்காரன் ஒதுக்கியதற்கு காரணம், லாசருக்கு உள்ள நோய் தான். அவன் தொழு நோயாளி என்பதை நீங்கள் அனுமானிக்கலாம்.

அடுத்து இது ஒரு கேள்வியை எழுப்புகிறது: நாம் கொடுத்து உதவ வேண்டியவர்களை பார்க்கும் போது அருவருப்பாக இருப்பதினால், நாம் கொஞ்சமாக கொடுக்கிறோமோ? அல்லது அவர்கள் மேல் மனக்கசப்பும் , மன்னிக்க முடியாத கோபமும் இருக்கிறதா? கடவுளோடு இனைந்திருக்க வேன்டுமானால், இதே மாதிரி நிலையில் நாம் இருக்க முடியாது. அன்பின் மூலம் நாம் நம்மையே உறசாகபடுத்தி கொண்டு, தாராள மனதை வளர்ப்போம்.

இன்றைய இரண்டாவது வாசகத்தில், "விசுவாசத்திற்காக போராடு" யாரோடு போட்டி போடுகிறோம்.? நம்மோடு!, நேற்றையை விட இன்று இன்னும் பரிசுத்த மாக இருக்கிறீர்களா? இன்னும் தாராள மனதை கொண்டு இருக்கிரீர்களா? இன்னும் பழைய நிலையிலே மந்தமாக இருக்கிறீர்களா? அல்லது இன்னும் பரிசுத்தமாகவும், உங்கள் பாவங்களை கண்டு கொண்டு மணம் மாறி கடவுளோடு இணைந்து இருக்கிறீர்களா?

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

No comments: