Saturday, November 6, 2010

7 நவம்பர் 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

7 நவம்பர் 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 32ம் ஞாயிறு
2 Macc 7:1-2, 9-14
Ps 17:1, 5-6, 8, 15
2 Thess 2:16–3:5
Luke 20:27-38
லூக்கா நற்செய்தி

அதிகாரம் 20


உயிர்த்தெழுதலைப் பற்றிய கேள்வி
(மத் 22:23 - 33; மாற் 12:18 - 27)
27 உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி,28 ' போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார்.29 இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார்.30 இரண்டாம்,31 மூன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்;32 கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.33 அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே? ' என்று கேட்டனர்.34 அதற்கு இயேசு அவர்களிடம், ' இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.35 ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை.36 இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.37 இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ' ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் ' என்று கூறியிருக்கிறார்.38 அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே ' என்றார்.39 மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, ' போதகரே, நன்றாகச் சொன்னீர் ' என்றனர்.40 அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

(thanks to www.arulvakku.com)


உயிர்த்தெழுதலை நீங்கள் நம்புகிறீர்களா? இன்றைய நற்செய்தியில், இந்த கேள்வியை தான், யேசுவிடம் சதுசேயர்களிடமிருந்து வேறு மாதிரியான கேள்வியாக கேட்கப்பட்டது.
கிறிஸ்தவர்களாக, நாம் அனைவரும் ஒரு நாள் கிறிஸ்துவை போல் உயிர்த்தெழுவோம் என்று நம்புகிறோம். இவ்வுலக வாழ்வைவிட்டு கடவுளோடு இனைவோம். யேசுவை பின் செல்பவர்கள் அனைவரும் வான தூதர்கள் போல் வாழ்வோம். இதனால் தான் கத்தோலிக்க திருச்சபையில் , மரண சடங்குகளில், திருப்பலியில் குருவானவர்கள் வெள்ளை உடை அணிந்து ,அதனை மறு பிறப்பு திருப்பலியாக, உயிர்த்தெழும் திருப்பலியாக ஜெபிக்கிறோம்.
ஆனால், நீங்கள் மீண்டும் பிறக்கும் அன்பினை நம்புகிறீர்களா? யேசு உயிர்த்தெழுதலை, திருமணத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார். கடவுளின் அன்பை இவ்வுலக மக்கள் பிரதிபலிக்க ஒரு வாய்ப்ப்பாக திருமணத்தை நாம் சொல்ல வேண்டும். கடவுளிடமிருந்து வரும் என்றும் மிளிரும் அன்பினால் ஆனும் பெண்ணும் திருமணத்தில் இணைந்திருக்க வேண்டும்; அதன் மூலம் கடவுளின் விசுவாசத்திற்கும், பொறுப்பிற்கும் , அக்கறைக்கும் சாட்சியாக விளங்கவேண்டும்.

பிறகு ஏன், யேசு திருமணம், இறந்தவர்களின் மறு பிறப்பில் இல்லை என்று கூறினார். ஏன் இன்றைய திருமணம், அதே ஒற்றுமையோடு மோட்சத்திலும் சேர்ந்தே அவர்களின் இறப்பிற்கு பிறகும் இருந்தால் என்ன?
இவ்வுலகில், அன்பை நாம் மிக சரியாக கொடுப்பதுமில்லை, சரியாகவும் பகிர்ந்து கொள்வதில்லை. அதனால் இவ்வுலக அன்பு தொடர்ந்து மரித்தும், மீண்டும் உயிர்த்தெழுகிறது. எல்லா கணவன் மனைவியுமே பல நேரங்களில் அன்பின் குறையால், மனந்திரும்பியும் மன்னிப்பையும் பெறுகின்றனர்.(நண்பர்களிடத்திலும் அது உள்ளது).
மிக சரியான அன்பு என்பது கடவுள் தான். கடவுள் எல்லோரையும் அன்பு செய்வது போல், நாம் நமது சகோதரரையும், சகோதரிகளையும் அன்பு செய்தால், நாம் கடவுளின் உண்மையான குழைந்தைகள் ஆவோம். திருமணம் மோட்சத்தில் இல்லை, ஏனெனில், அதில் முழுமையான, பரிசுத்தமான அன்பு இல்லை. நாம் நமது துணைவரை மற்றவர்களை விட அதிகமாக அன்பு செய்கிறோம். மோட்சத்தில், நமது துணைவரை நிச்சயமாக அன்பு செய்வோம், முழுமையாகவும் அன்பு செய்வோம். மேலும் மற்றவர்களையும் அதே அளவிற்கு அன்பு செய்வோம். நம்மை நல்ல முறையில் அன்பு செய்யாதவர்கள் கூட மோட்சத்தில் நமது துணைவரை விட அதிகமாக அன்பு செய்வார்கள்.

திருமணம் என்பது மோட்சத்தில் ஒருவொருக்கு ஒருவர் எப்படி அன்பு செய்கிறார்களோ அதனை இவ்வுலகில் ப்ரதிபலிப்பதாகும்.
© 2010 by Terry A. Modica

No comments: