Friday, February 25, 2011

பிப்ரவரி 27, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 27, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 8ம் ஞாயிறு
Is 49:14-15
Ps 62:2-3,6-9
1 Cor 4:1-5
Matt 6:24-34


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 6


கடவுளா? செல்வமா?
(லூக் 16:13)
24 ' எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.
கவலை வேண்டாம்
(லூக் 12:22 - 34)
25 ' ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? ' 26 வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!27 கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? 28 உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.29 ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.30 நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?31 ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்.32ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.33 ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். 34 ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும. அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.
(thanks to www.arulvakku.com)



இன்றைய நற்செய்தி, இயேசு மலைகள் மேல் கொடுத்த ப்ரசங்கத்தின் ஒரு பகுதியாகும். இது இயேசு வாழ்ந்தது போல், எப்படி பரிசுத்தமாகவும், முன் மாதிரியாகவும் வாழ்வேண்டும் என்று நமக்கு அறிவுறை சொல்கிறார். இதே அறிவுரை, இயேசு கூறிய "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே " ஜெபத்திலும் "எங்கள் அனுதின உணவை இன்று அளித்தருளும்" என்றும் இருக்கிறது. ஜெபத்திலும், ப்ரசங்கத்திலும், நமது அனுதின தேவைகளுக்கு நாம் கடவுளை நம்பி இருக்க வேண்டும் என்பது தான் இன்றைய நற்செய்தியின் நோக்கம்.


ஒவ்வொரு நாளும், நமது தேவைகளுக்கு, நாம் கடவுளை நம்பியிருக்க வேண்டும் அல்லது இவ்வுலக வழியில் நாமாக நமது முடிவை எடுக்க வேண்டும். நாம் இரண்டு பேருக்கும் பணியாளனாய் இருக்க முடியாது. நமது மதச்சடங்குகள் மூலம் நாம் ஒரு காலை மோட்சத்திற்கும், இன்னொரு காலை, இவ்வுலக வாழ்வின் முறைகளிலும் வைத்து கொண்டு நாம் நம்மையெ ஏமாற்றி கொள்ள கூடாது.


"செல்வம்" என்ற வார்த்தை அரமாயிக் வார்த்தையிலிருந்து வந்தது. அதன் அர்த்தம் என்னவென்றால், "செல்வம்" அல்லது "சொத்து" ஆகும். ஒரு காலத்தில் ஒரு கதை உண்டு, யாரோ ஒருவர், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்" என்று கடவுளிடம் வேண்டிகொண்டார்களாம் அதற்கு கடவுள், "உங்களிடம் ஏற்கணவே உங்கள் உணவு உள்ளது, மற்றவர்கள் உணவையும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்" என்று கூறினாராம். மற்றவர்களுக்கு தேவையானதை ஏன் நாம் சேமித்து வைத்திருக்கிறோம் ? நாம் நமது எதிர்காலத்திற்காக நாம் சேமித்து வைக்கிறோம். ஆனால் பலர், நம்மிடம் அதிகம் உள்ளதை தினமும் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். அவர்களிடம் அதை கொடுத்து விட்டால், நமக்கு பிற்காலத்தில் கிடைக்காமல் போய்விடுவோமா என்ற பயம் நம்மிடம் இருக்கிறது.

அப்படி ஒரு எண்ணம் நமக்கு இருந்தால், நாம் கடவுளை நம்பவில்லை என்று அர்த்தம். கடவுள் நம்மை கவனிக்கமாட்டார் என்ற கொள்கையுடன் இருக்கிறீர்கள். நாம் எப்படி மற்றவர்களிடம் தாரளமாக இருக்கிறோமோ, அப்படி ஒன்றும் கடவுள் இருக்கமாட்டார் என்று அனுமானித்து விடுகிறோம். அதனால் தான் இயேசு "நீங்கள் ரொம்பவே கவலைபடுகிறீர்கள்!, உங்களுக்கு தேவையானதை விட அதிகமாக வைத்து இருந்தால், கவலை படவேண்டாம்" என்று கூறுகிறார். நாம் நமது கவலையை விட கடவுள் எவ்வளவு நல்லவர் என்று நீங்கள் நினைக்க வேண்டும்.


"கடவுள் உங்களை அதிகமாக அன்பு செய்கிறார். அவர் உங்களை கவனித்து கொள்வார்! நீங்கள் இறையரசிற்காகவும், கடவுளின் வழியிலும் செல்ல முனைந்தால், உங்களுக்கு தேவையானது ஒவ்வொன்றும் கிடைக்கும், அதனால் கவலைபடுவதை நிறுந்துங்கள் " என்று இயேசு கூறுகிறார்.

கவலைபடுவது ஒரு பாவமாகும், இது நம்மை இயேசுவின் மீது உள்ள கண்களை விலக்கிவிடும். கவலை சாத்தானின் வேலையாகும், , இது நம்மை மற்றவர்களிடம் நாம் காட்ட வேண்டிய இயேசுவின் தாராள குணத்தையும், அன்பையும் பிரித்து விடும்.


(www.gnm.org)

Friday, February 18, 2011

பிப்ரவரி 20 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை

பிப்ரவரி 20 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 7ம் ஞாயிறு
Lev 19:1-2, 17-18
Ps 103:1-4,8,10,12-13
1 Cor 3:16-23
Matt 5:38-48


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 5


பழி வாங்குதல்
(லூக் 6:29 - 30)
38 ' ″ கண்ணுக்குக் கண் ″ , ″ பல்லுக்குப் பல் ″ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.40 ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள்.41 எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.42 உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள். '
பகைவரிடம் அன்பாயிருத்தல்
(லூக் 6:27 - 28, 32 - 36)
43 ' ″ உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக ″ , ″ பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக ″ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 45 ' இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?47 நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?48 ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

(thanks to www.arulvakku.com)

இரக்கம் தான் இந்த வார நற்செய்தியை புரிந்து கொள்வதற்கு நமக்கு உறுதுனையாகும். அன்பு தான் மற்றவர்களின் இதயத்திற்குள் நாம் நுழைய முதல் கதவு என்று யோசியுங்கள். அவர்கள் அந்த கதவை மூடினால் நீங்கள் இரக்கத்தின் மூலமாக பின் கதவு மூலமாக நீங்கள் செல்லுங்கள்.

முற்காலத்தில், யாராவது ஒருவர் ஒருவரின் கண்ணை நோண்டி எடுத்தால், அவர் அவரது குழுவினருடன் சேர்ந்து கொண்டு, நோடியவரின் உற்றார் உறவினரையும் திருப்பி அடிப்பார். அதனால், கடவுள் அவர்களெல்லாம் அன்பினால் ஒன்றாய் இருக்க வேண்டும் என்று கடவுள் அவர்களுக்கு இந்த சட்டத்தை கொடுத்தார். அதனால், உங்களின் கண்ணை யாராவது காயப்படுத்தினால், நீங்கள் அதற்கு மேல் அவர்களை ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும். அதுவே அன்பு இல்லாத செயல் தான், இருந்தாலும் அவர்களை எதுவும் செய்யாமல் இருப்பதே நல்லது.

இயேசு இந்த சட்டம் அமலில் இருக்கும்போது வந்தவர், "யாராவது உங்களை துன்ப்புறுத்தினால், அவர்களை அன்பு செய்" என்று கூறுகிறார்.

மற்றவர்கள் நம்மிடம் பாவம் செய்யும்பொழுது, அவர்கள் கடவுளுக்கும், அவரது அன்பிற்கும் அவர்களின் இதயத்தை மூடிவிட்டார்கள். ஆனால், நாம் அவர்களிடம் அன்பினை கொடுத்தால், நாம் அவர்களுக்கு பின் கதவு வழியாக கடவுளை கொடுக்கிறோம்.

இதன் மூலம், நாம் அப்படியே நமக்கு தீங்கு நடக்க வேண்டும் என்றே இருந்து விட வேன்டும் என்றில்லை. ஆனால், நாம் தொடர்ந்து அன்பு செய்து கொண்டே இருந்தால், நாம் கடவுளையும், அவரது குணப்படுத்தலையும் பெறுவோம்.

நியாயமற்ற முறையில், உங்களிடம் யாராவது பணத்தையோ அல்லது வேறு ஏதாவது எடுத்து கொண்டால், அவர்களின் பேராசையை நீங்கள் தடுக்க முடியாது, ஆனால், உங்களுக்கு எதிராக அவர்கள் செய்யும் பாவத்தை தடுக்க முடியும்: அவர்கள் கேட்பதை சந்தோசமாகவும், இலவசமாகவும் கொடுங்கள். தாராளமான அன்பினால், உங்களிடம் உள்ளதை அதிகமாகவே கொடுங்கள், அதை தான் இயேசு சொல்கிறார்.


உங்களை யாராவது நியாயம் அற்ற முறையில் ஏதாவது செய்ய சொன்னால், இந்த குரூரமான பாவத்தை தடுக்க, அந்த செயலை நீங்களாகவே, தானாகவே முன் வந்து ஏற்று செய்தால் நல்லது.

நமது அன்பை அன்பளிப்பாக அவர்களுக்கு இலவசமாக கொடுக்கிறோம் என்பதை, அவர்களுக்கு தெரியபடுத்த வேன்டும். நாம் அவர்களின் பாவத்திற்கு உட்பட்டவர் அல்ல என்பதனை அவர்களுக்கு தெரியபடுத்த வெண்டும். நாம் கடவுளின் அன்பை மற்றவர்களுக்கு கொடுப்பதில் முன் மாதிரியாக செய்யும்போது, அந்த அன்பு சாத்தானை வெற்றி கொள்ளும்.
இது தான் மிகச்சரியாக இருப்பதற்கு சமம். மிகச்சரியாக இருப்பதற்கு பைபிளில் இருக்கும் அர்த்தம் - முழுமையான அன்பு, பூரனமான, முழுமையான, நிரம்ப, எல்லையில்லாத அன்பும், இரக்கமுள்ள அன்பும் ஆகும்.



© 2011 by Terry A. Modica

Friday, February 4, 2011

பிப்ரவரி 6 , 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 6 , 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 5ம் ஞாயிறு

Is 58:7-10
Ps 112:4-9
1 Cor 2:1-5
Matt 5:13-16


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 5



உப்பும் ஒளியும்
(மாற் 9:50; லூக் 14:34 - 35)
13 ' நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.14 நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.15 எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.16இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.

(thanks to www.arulvakku.com)


"நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்" என்று இயேசு கூறுகிறார். உப்பாய் இருப்பதாக இருப்பது என்றால், அதற்கு என்ன அர்த்தம். உப்பு என்ன செய்யும் என்று யோசித்து பாருங்கள். சுவையில்லாத உணவிற்கு சுவையை கூட்டுகிறது. மேலும் உப்பு உவர்ப்பற்று போனால் என்ன ஆகும் என்று இயேசுவே ஒரு கேள்வியை கேட்கிறார். எப்படி மீண்டும் அந்த உவர்ப்பை எப்படி பெறுவது? அதற்கு பதில்: கடவுள் நம்மிடம் அதனை மீண்டும் சேர்க்க செய்ய அவரிடம் சரண்டைய வேண்டும்.

உங்கள் ஞானஸ்நானத்திலேயே, கடவுள் உங்களுக்கு எல்லா சுவைகளையும் வழங்கியிருக்கிறார். கடவுளின் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, இன்னும் பல உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பலன் கொடுக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும் கடவுளின் வாழ்வான, கடவுள் அன்பு, அமைதி, மகிழ்வு அனைத்திற்கும் இன்னும் சுவை கூட்டி அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு கொடுப்பவர்கள்.

ஆனால், எல்லாவற்றிற்கும் அதிகமான உழைப்பை கொடுத்தால் என்ன ஆகும் என்று நினைவில் கொள்ளுங்கள்!. உணவிற்கு அதிக உப்பு இருந்தால் என்ன ஆகும் என்றும் யோசியுங்கள். அதன் சுவை ஏற்று கொள்ள முடியாது. நாம் நல்ல எண்ணத்தில் அதிகமாக அந்த சுவையை கொடுத்தாலும், அது ஏற்று கொள்ளபடுவதில்லை, நல்லது செய்ய போய், அழிவை தான் கொடுப்போம்.

இயேசுவின் அன்பை நம்மிடமிருந்து பெறும் அனைவரும், இயேசுவை நோக்கி திரும்புவார்கள். இயேசுவின் அமைதியை நம்மிடமிருந்து பெறுபவர்கள், இயேசுவின் மகிழ்ச்சியையும் நம்மிடமிருந்து பெறுபவர்கள், இயேசுவின் வாழ்வை நாம் வாழ்ந்து காமிக்கும்பொழுது, பலர் இயேசுவிடம் திரும்புவார்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே, இயேசு அவர்களை அன்பு செய்கிறார் என்று அவர்களுக்கு தெரிய வேண்டும், ஆனால், இயேசு அவர்களை மனப்பூர்வமான தெய்வீக வாழ்வை துவங்க வேண்டும் என்று விரும்புகிறார், அப்போது தான், இயேசு அவர்களின் ப்ரச்னைகளையும், கஷ்டங்களையும், சோதனைகளையும் ஆசிர்வாதங்களாகவும், சந்தோசமாகவும் இயேசு மாற்றுவார்.

மேலும் இயேசு நம்மை ஒளியாய் இருக்க சொல்கிறார். அதற்கு மற்றவர்கள் உதவி செய்ய முடியாது ஆனால், அந்த ஒளியை நிச்சயம் திரும்பி பார்ப்பார்கள். ஆனால் குருடாக்கும் ஒளியை நாம் வீசக்கூடாது. நாம் இயேசுவின் ஒளியை நம்மில் ஒளிர விட வேண்டும். நம் ஒளியையும் கிறிஸ்துதான் ஒளியூட்ட வேண்டும். அதனால் மற்றவர்கள் அந்த ஒளியை நோக்குவார்கள்.

மேலும், இயேசு நம்மை மலை மேல் இருக்கும் நகர் போல இருக்க சொல்கிறார். நாம் ஒருவர் மட்டும் மணமாற்றுதல் செய்ய முடியாது. ஒரு "நகர்" என்பது கிறிஸ்தவர்களின் குழு : ஒரு பங்கு, ஒரு குடும்பம், பங்கு குழு, இன்னும் பல. கிறிஸ்தவர்களாக இருப்பது என்பது நாம் ஒரு குழுவில் இருக்கிறோம் என்பது ஆகும். நமது ஒளி மற்றவர்களின் ஒளியோடு சேரும்போது, எல்லாம் சேர்ந்த வெளிச்சம் கிறிஸ்துவை இவ்வுலகிற்க்கு காட்ட பலமான ஒளியாக இருக்கும். ஏன்? ஏனெனில், கிறிஸ்துவை நம்பாதவர்கள், நாம் எல்லாம் சேர்ந்து ஒருவரையொருவர் அன்பு செய்யும்பொழுது, கிறிஸ்துவின் அன்பு உண்மையானது என்று அவர்கள் நம்பி, கிறிஸ்துவின் அன்பை புரிந்து கொள்வார்கள். எவ்வித நிபந்தனையின்றி, தாராளமாகவும், பணி செய்யும் பன்பும் அவர்களிடம் கிறிஸ்துவின் அன்பை காமிக்கும். நாம் ஒருவொருக்கு ஒருவர் கிறிஸ்துவின் ஒளியாய் இருக்கிறோம். நாம் ஒருவர்க்கு ஒருவர் சுவையூட்டுகிறோம். மற்றவர்கள் இல்லையென்றால், நமது ஒளி மங்கிவிடும். நமது சுவை குறைந்து விடும், கடவுளரசிற்கு வேண்டாதவர் ஆகி விடுவோம்.

© 2011 by Terry A. Modica