Friday, November 25, 2011

நவம்பர் 27 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 27 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்து பிறப்பின் முதல் ஞாயிறு
Isaiah 63:16b-17,19b;64:2-7
Ps 80:2-3,15-16,18-19 (with 4)
1 Cor 1:3-9
Mark 13:33-37
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 13


மானிடமகன் வரும் நாளும் வேளையும்
(மத் 24:36 - 44; லூக் 17:26 - 30, 34 - 36)
' ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.33 கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது.34நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.35 அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.36 அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது.37 நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்; விழிப்பாயிருங்கள். '
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறு கிறிஸ்து வருகையின் முதல் ஞாயிறாக நாம் தொடங்குகிறோம். உங்கள் வாழ்வில் உள்ள முக்கியமான ரொம்பவும் நெருங்கிய நபர்களுக்கு உங்கள் ப்ரியத்தை எப்படி கான்பிக்க போகிறோம் என்றவாறே , அவர்களுக்கு பிடத்தமான அன்பளிப்பை , அவர்களுக்கு எவ்வாறு உதவியாக இருக்கும் என்று இந்த கிறிஸ்துமஸ் காலத்தை தொடங்குங்கள். ஆனால் அவர்களது வாழ்க்கையில் நல்லதோரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?


இயேசு பிறந்த நாளை நாம் கிறிஸ்துமசாக கொண்டாடுவதால், அவருக்கும் ஒரு அன்பளிப்பு கொடுப்போம். மற்றவர்களை விட கடவுளுக்கு தான் நாம் அதிக அன்பளிப்பு கொடுக்க வேண்டும், ஏற்கனவே பல செல்வங்களை வைத்துள்ளவர்களுக்கு இன்னும் அன்பளிப்பு ஏன் கொடுக்கிறீர்கள்.? இயேசு என்ன அன்பளிப்பு கொடுத்தால், அது என்றென்றும் நிலைத்திருக்கும்? அதே அன்பளிப்பை வேறு யாரும் கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும். அவரிடம் இல்லாத அன்பளிப்பை உங்களால் கொடுக்க முடியுமா? இயேசுவிடம் கொடுக்க வேண்டியதை இன்னும் என்ன வைத்து கொண்டு இருக்கிறீர்கள்? என்ன திறமை அல்லது சேவை அல்லது உங்கள் வாழ்வில் மாற்றம் அவருக்கு பிடித்தமானதாக இருக்கும்?
இன்றைய ஞாயிறின் முதல் வாசகத்தில், கடவுள் நமது தந்தை என நினைவுறுத்துகிறது. பதிலுரை பாடல் கடவுளிடம் நம்மை திருப்ப வேண்டும் என ஜெபமாக சொல்கிறது. இரண்டாவது வாசகமோ கடவுள் நமக்கு செய்த எல்லாவற்றிர்கும் நன்றி சொல்கிறது. கடவுள் உங்களுக்கு கொடுத்த எல்லாவற்றிற்கும் நீங்கள் என்ன கைமாறு செய்ய போகிறீர்கள்?


இன்றைய நற்செய்தியில், நாம் தயாராக/ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று நமக்கு நினைவுறுத்தபடுகிறது. - கிறிஸ்துவின் வருகைக்காக , ஏதாவது ஒன்றை செய்து வித்தியாசத்தை காமிக்க வேண்டும் . இது ஒன்றும் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையை குறிப்பதல்ல. நாம் இறுதி மூச்சை விடும் நேரம் போன்றானது இந்த கிறிஸ்துமஸ். கிறிஸ்துவாக இந்த கிறிஸ்துமஸ்சில் உன்னிடம் வருவதற்கான வருகை இது. இப்பொழுதே , இன்றே உங்களிடம் கிறிஸ்து வருகிறார்.

உங்களிடமிருந்து புதிதாக ஒன்றை உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவர் அதனை உங்களிடம் கொடுக்கும்பொழுது, நிங்கள் சரியானதை செய்கிறீர்களா? (முதல் வாசகத்தில் கூறியிள்ளது போல) , அவரின் ஆன்மிக அன்பளிப்புகளை நீங்கள் உபயோகிப்பதை கிறிஸ்து கான்பாரா? (இரண்டாவது வாசகத்தில் கூறியுள்ளது போல) நீங்கள் எதற்கும் தயாரக இருக்கிறீர்களா? (நற்செய்தியில் உள்ளது போல ).


கிறிஸ்துவின் வருகை காலம் கிறிஸ்து நமக்கு கொடுத்த அன்பளிப்புகளை கொடைகளை நாம் நினைத்து பார்க்க ஒரு வாய்ப்பாக அமைகிறது. அதே போல, அவருக்கும் நாம் கொடுக்கும் அன்பளிப்பும் அவரிடத்தில் இல்லாத ஒன்றாக இருக்க நாம் இக்காலத்தை உபயோகிக்க வேண்டும். இது தான் என்றென்றும் வித்தியாசமாக இருக்கும், நமக்கும், அவருக்கும்.

© 2011 by Terry A. Modica

Friday, November 18, 2011

நவம்பர் 20, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 20, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்து அரசர்
Ezek 34:11-12, 15-17
Ps 23:1-3, 5-6
1 Cor 15:20-26, 28
Matt 25:31-46


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 25
மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு
31 ' வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.32 எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.33 ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.34 பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.35 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;36 நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் ' என்பார்.37 அதற்கு நேர்மையாளர்கள் ' ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்?38 எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?39 எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்? ' என்று கேட்பார்கள்.40 அதற்கு அரசர், ' மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் ' எனப் பதிலளிப்பார்.41 பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.42 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.43 நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை ' என்பார்.44 அதற்கு அவர்கள், ' ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்? ' எனக் கேட்பார்கள்.45 அப்பொழுது அவர், ' மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' எனப் பதிலளிப்பார்.46 இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள். '
(thanks to www.arulvakku.com)
நாம் ஆயர்களை என்றுமே அரசர்களாக மன்னர்களாக நினைப்பதில்லை. ஆனால் இன்றைய நற்செய்தியோ, நமது நல்லாயன் இயேசுவின் ஆற்றலை, சக்தியை இங்கே விளைக்கி சொல்கிறது. மன்னர்கள் தனது படை பலத்தினால், தனது ராஜ்ஜியத்தை பெரிதாக்கி, தனது ஆட்சியை நல் வழியில் நடத்துவார்கள். அதனால் தான் இயேசு சொல்கிறார். "சிறியோர்களுக்கு நீங்கள் செய்த அனைத்தும் எனக்காக செய்தீர்கள்".

எடுத்து காட்டாக, நமது நல்லாயனும், மன்னருமாகிய இயேசு பசியாய் இருப்போருக்கு உணவளிக்க விரும்பினால், அவர் இறையரசிடமிருந்து எப்படி கொடுப்பது? நம்மில் சிலருக்கு அதிகமான உணவை கொடுத்து , யாருக்கு தேவையோ அவர்களுக்கு கொடுக்க சொல்கிறார்.


அரசரின் கட்டளைகளை நாம் செய்யா விட்டால் என்ன ஆகும்? பசியாய் இருப்போர் , கடவுள் தயாள குணமுடையவர் என்று நினைப்பார்களா? கடவுள் என்ன செய்ய சொன்னாரோ, அதனை நாம் செய்யும் பொழுது தான், அவர்கள் கடவுள் இரக்கமுள்ளவர் என்று நினைப்பார்கள்.
உங்களை சுற்றி இருப்பவர்களை நினைத்து பாருங்கள். ஒவ்வொருவரும், நமக்கு கடவுள் நல்லவர் என்று கான்பிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளனர்.

உங்களுக்கு அதிகம் பிடிக்காதவர்கள் யார்? அவர் உங்களை கோபப்படுத்தியிருக்கலாம் அல்லது பயமுறுத்தியிருக்கலாம், அல்லது காய்ப்படுத்தியிருக்கலாம். அதெல்லாம் இருக்கட்டும்: அவர் எதனை அடைய ஆசைப்பட்டார்? உங்களுக்கு பதில் கிடைக்காவிட்டால் பரிசுத்த ஆவியை கேளுங்கள் , அந்த நபரை நன்றாக கவனித்து, அவர் அடிமனதில் என்ன வலியோடும், பயத்தோடும் இருக்கிறார் என்று அறிய முற்படுங்கள்.


அவருக்கு கொடுப்பது மாதிரி , உங்களிடத்தில் கடவுள் அளவிற்கு அதிகமாக எதனை கொடுத்திருக்கிறார் , மேலும் கிறிஸ்து அரசரிடமிருந்து நீங்கள் பெற்று அவரிடம் நமது அரசர் எவ்வளவு தாராள குணமுள்ளவர் என்று நீங்கள் கான்பிக்க வேண்டாமா?
நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை , நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள நாம் மறுக்கும் பொழுது, ஆயனிடமிருந்து தனியாக பிரிந்து செல்லும் ஆட்டினை போல் ஆகிறோம். மாறாக நாம் கடவுளின் பணிக்கு ஆம் என்று சொல்லி அதில் ஈடுபடும்பொழுது கடவுள் அரசரின் நல்ல விசயங்கள் எல்லா இடமும் பரவும், மேலும் நாம் எல்லோரும் ஆசிர்வதிக்கபடுவோம்.

© 2011 by Terry A. Modica

Friday, November 11, 2011

நவம்பர் 13, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 13, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு
Proverbs 31:10-13, 19-20, 30-31
Ps 128:1-5
1 Thes 5:1-6
Matt 25:14-30
தாலந்து உவமை
(லூக் 19:11 - 27)
14 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார்.15 அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். 16 ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார்.17 அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார்.18 ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.19நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.20 ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ' ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன் ' என்றார்.21 அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ' நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே qபெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும் ' என்றார்.22 இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ' ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன் ' என்றார்.23அவருடைய தலைவர் அவரிடம், ' நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும் ' என்றார்.24 ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, ' ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன்.25 உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது ' என்றார்.26 அதற்கு அவருடைய தலைவர், ' சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா?27அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன் ' என்று கூறினார்.28 ' எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்.29ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்.30 பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ' என்று அவர் கூறினார்

இன்றைய நற்செய்தியில், நமக்கு கடவுள் கொடுத்த திறமைகளை, அன்பளிப்புகளை, புதைத்துவிட வேண்டாம் என்று நமக்கு அறிவுறுத்துகிறது. அப்படி செய்தால், "பொல்லாதவர்களாகவும், சோம்பேறியாகவும்" நாம் இருப்போம்.

நாம் எல்லோருமே, சில புதைக்கப்பட்ட திறமைகளை கொண்டுள்ளோம். இறையரசிற்காக இன்னும் நிறைய நாம் செய்யலாம், ஆனால், நாமோ "என்னால் முடியாது, எனக்கு போதுமான திறமைகள் இல்லை" அல்லது "வேறு யாராவது என்னை விட நன்றாக செய்ய முடியும்" அல்லது "கடவுள் எனக்கு இதனை செய் என்று சொல்ல முடியாது " அல்லது " எனக்கு நேரமில்லை, பணமில்லை, எப்படி செய்வது என்று தெரியாது, உடல் நலமில்லை" அல்லது " நாம் ரிடையர் ஆகிவிட்டேன், என்னுடைய சுய தேவைகளை செய்து கொள்ள வேண்டும்" என்றும் நாம் சொல்கிறோம்.
கடவுள் கொடுத்த எதையும் வீனாக்க நாம் எந்த ஒரு சாக்கு போக்கையும் சொல்ல முடியாது, ஆனால், இது அடிக்கடி நடக்கிறது, ஏனெனில், நமது திறமைகள் இறையர்சிற்காக, திருச்சபைக்காகவும், கிறிஸ்துவை இவ்வுலகிற்கு கொண்டு செல்லவும் என்பதை நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை.
உங்கள் அன்பளிப்புகளும், திறமகளும் உங்களை எங்கே இட்டு செல்கிறது? இறையரசிற்கு உங்கள் திறமைகள் உபயோகபடாமல் இருக்க எது உங்களை தடுக்கிறது? இது தான் சரியான தருணம்/சமயம், உங்கள் திறமைகளை கடவுளின் திட்டத்திற்காக நாம் களமிறக்க வேண்டும்.
இறையர்சிற்காக நாம் செய்ய வேண்டிய அளவிற்கு, நமக்கு திறமைகள் உள்ளன. ஏனெனில், அந்த திறமைகள் கடவுளிடமிருந்து வருகிறது. நாமெல்லாம் அவருடைய சேவகர்கள், கடவுள் தான் நம்மால் என்ன செய்ய முடியும் என்று நிர்ணயிப்பவர். படுத்த படுக்கையாக இருப்பவர்கள் கூட கடவுளுக்காக செய்ய வேண்டிய வேளைகள், அதனை, அவர்கள் வேதனைகளோடு, க்ஷ்டட்தோடு செய்ய முடியும். அடிக்கடி, இவைகள் தான் மிகவும் சக்தி வாய்ந்த ஜெபமாகவும், இவ்வுலகில் நாம் பெறும், ஞானமாகவும் அமையும்.

"கடவுள் நன்மை செய்பவராக இருந்தால், ஏன் அவர் சாத்தானை , கெட்ட செயல்களை இவ்வுலகில் அனுமதிக்கிறார்? " என்ற கேள்வியை சிலர் நம்மிடம் கேட்டிருக்கலாம். அதற்கு பதில்: "கடவுள் இதனை அனுமதிக்கவில்லை, நாம் தான் அனுமதிக்கிறோம்!, நாம் கிறிஸ்து உடலின் ஒரு அங்கமாக இவ்வுலகில் இருக்கிறோம். அவருடைய கைகள், கால்களாக, குரலாக இருக்கிறோம். இயேசு உண்மையிலே இவ்வுலகை மோட்சமாக இருக்க வேண்டும் என விரும்புகிறார், ஆனால் நம்மில் பலர், நமது திறமைகளை புதைத்து விட்டு, எந்த வித்தியாசத்தை இவ்வுலகில் காட்ட வேண்டுமோ, அதை விட்டு விட்டு, நாம் சோம்பேறிகளாக இருக்கிறோம்.


© 2011 by Terry A. Modica

Friday, November 4, 2011

நவம்பர் 6, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 6, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 32ம் ஞாயிறு
Wisdom 6:12-16
Ps 63:2-8
1 Thes 4:13-18
Matt. 25:1-13

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 25

பத்து தோழியர் உவமை
1 ' அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.2 அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள்.3 அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.4 முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.5 மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.6 நள்ளிரவில், ' இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள் ' என்ற உரத்த குரல் ஒலித்தது.7 மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.8 அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ' எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள் ' என்றார்கள்.9 முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, ' உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது ' என்றார்கள்.10 அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.11 பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ' ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும் ' என்றார்கள்.12 ' அவர் மறுமொழியாக, ' உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது ' என்றார்.13 எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், நாம் படித்தோமானால், இது பெரிய முட்டாள் தனமாக தெரியும். நாம் கிறிஸ்துவை நம்புகிறோம் - ஜெபம் செய்கிறோம்!, நமது விசுவாசத்தை வளர்க்க நேரம் செலவிடுகிறோம், விசுவாசத்திற்கான புதிய வாய்ப்புகளில் நாம் பங்கு கொள்கிறோம். இவையெல்லாம் புத்திசாலித்தனமானது. நாம் கடவுளை நம்புகிறோம் என்று சொல்கிறோம்!

ஆனால், நாம் கேட்கும் வரங்களை கேட்ட உடன் கடவுள் கொடுக்கவில்லையென்றால்? சாத்தானிடமிருந்து, கிறிஸ்து நம்மை காத்து அரவணைத்து கொள்ள வேண்டும் என்று நாம் ஆசைபடும்பொழுது, அது கிடைக்க வில்லை என்றால், இயேசு கிறிஸ்து எங்கே?
எப்பொழுதுமே, கடவுள் நாம் நினைக்கின்ற நேரத்தில், அவர் வருவதில்லை. சரியான நேரத்தில் தான் அவர் வருவார். கடவுள் எவ்வளவு சீக்கிரம் நம் ப்ரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அந்த நேரம் தான் சரியான நேரம் என்று நாம் நினைக்கலாம். ? ஆனால், கடவுள் அவர் எண்ணங்களின் வழி, அது சரியான நேரமாக இருக்காது!. (பிறகு ஏன் நாம் கடவுளிடம் நமது ப்ரச்னையை அவரிடத்தில் கொண்டு செல்கிறோம்? )
நாம் கேட்டது கிடைக்காத பொழுது, அதனால் நாம் நம்பிக்கை இழக்கும் பொழுது, கடவுளின் சரியான காலத்திற்கு நாம் தயாராகமல், நாம் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கவில்லை என்று நாம் மணம் நொந்து போகிறோம். அறிவிலிகளான மணமகள்கள், அவர்களது எண்ணெய் தீருவதற்குள் மணமகன் வந்து விடுவார் என நினைத்தனர். அவர்களுக்கு அங்கு என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து விட்டனர். நாமும் அப்படிதான் இருக்கிறோமோ?
மேலும், கடவுளின் திட்டம் நமக்கு முரண்பாடாக இருந்தால், நாம் அதனை நம்புவதில்லை. பிறகும், நாமே நம் ப்ரச்னையை கையாள ஆரம்பிக்கிறோம்.

நாமே நமக்கு பொருத்தமான திட்டத்தை நம்ப வேண்டியதில்லை. நம்முடைய புரிதலை, நாமாக ஒன்றை நினைத்து கொள்வதும் தேவையில்லை. எவ்வளவு சீக்கிரம் கடவுளின் வழிக்கு நாம் உடன்படுகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் கடவுளின் வழிகள் நாம் நினைத்தை விட மேலானது, அற்புதமானது என்று புரியும்.!
நமது கற்பனைக்கு எட்டாத வழியாக அது இருக்கும்.!
© 2011 by Terry A. Modica