Friday, November 4, 2011

நவம்பர் 6, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 6, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 32ம் ஞாயிறு
Wisdom 6:12-16
Ps 63:2-8
1 Thes 4:13-18
Matt. 25:1-13

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 25

பத்து தோழியர் உவமை
1 ' அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.2 அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள்.3 அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.4 முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.5 மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.6 நள்ளிரவில், ' இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள் ' என்ற உரத்த குரல் ஒலித்தது.7 மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.8 அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ' எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள் ' என்றார்கள்.9 முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, ' உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது ' என்றார்கள்.10 அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.11 பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ' ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும் ' என்றார்கள்.12 ' அவர் மறுமொழியாக, ' உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது ' என்றார்.13 எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், நாம் படித்தோமானால், இது பெரிய முட்டாள் தனமாக தெரியும். நாம் கிறிஸ்துவை நம்புகிறோம் - ஜெபம் செய்கிறோம்!, நமது விசுவாசத்தை வளர்க்க நேரம் செலவிடுகிறோம், விசுவாசத்திற்கான புதிய வாய்ப்புகளில் நாம் பங்கு கொள்கிறோம். இவையெல்லாம் புத்திசாலித்தனமானது. நாம் கடவுளை நம்புகிறோம் என்று சொல்கிறோம்!

ஆனால், நாம் கேட்கும் வரங்களை கேட்ட உடன் கடவுள் கொடுக்கவில்லையென்றால்? சாத்தானிடமிருந்து, கிறிஸ்து நம்மை காத்து அரவணைத்து கொள்ள வேண்டும் என்று நாம் ஆசைபடும்பொழுது, அது கிடைக்க வில்லை என்றால், இயேசு கிறிஸ்து எங்கே?
எப்பொழுதுமே, கடவுள் நாம் நினைக்கின்ற நேரத்தில், அவர் வருவதில்லை. சரியான நேரத்தில் தான் அவர் வருவார். கடவுள் எவ்வளவு சீக்கிரம் நம் ப்ரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அந்த நேரம் தான் சரியான நேரம் என்று நாம் நினைக்கலாம். ? ஆனால், கடவுள் அவர் எண்ணங்களின் வழி, அது சரியான நேரமாக இருக்காது!. (பிறகு ஏன் நாம் கடவுளிடம் நமது ப்ரச்னையை அவரிடத்தில் கொண்டு செல்கிறோம்? )
நாம் கேட்டது கிடைக்காத பொழுது, அதனால் நாம் நம்பிக்கை இழக்கும் பொழுது, கடவுளின் சரியான காலத்திற்கு நாம் தயாராகமல், நாம் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கவில்லை என்று நாம் மணம் நொந்து போகிறோம். அறிவிலிகளான மணமகள்கள், அவர்களது எண்ணெய் தீருவதற்குள் மணமகன் வந்து விடுவார் என நினைத்தனர். அவர்களுக்கு அங்கு என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து விட்டனர். நாமும் அப்படிதான் இருக்கிறோமோ?
மேலும், கடவுளின் திட்டம் நமக்கு முரண்பாடாக இருந்தால், நாம் அதனை நம்புவதில்லை. பிறகும், நாமே நம் ப்ரச்னையை கையாள ஆரம்பிக்கிறோம்.

நாமே நமக்கு பொருத்தமான திட்டத்தை நம்ப வேண்டியதில்லை. நம்முடைய புரிதலை, நாமாக ஒன்றை நினைத்து கொள்வதும் தேவையில்லை. எவ்வளவு சீக்கிரம் கடவுளின் வழிக்கு நாம் உடன்படுகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் கடவுளின் வழிகள் நாம் நினைத்தை விட மேலானது, அற்புதமானது என்று புரியும்.!
நமது கற்பனைக்கு எட்டாத வழியாக அது இருக்கும்.!
© 2011 by Terry A. Modica

No comments: