Friday, November 25, 2011

நவம்பர் 27 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 27 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்து பிறப்பின் முதல் ஞாயிறு
Isaiah 63:16b-17,19b;64:2-7
Ps 80:2-3,15-16,18-19 (with 4)
1 Cor 1:3-9
Mark 13:33-37
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 13


மானிடமகன் வரும் நாளும் வேளையும்
(மத் 24:36 - 44; லூக் 17:26 - 30, 34 - 36)
' ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.33 கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது.34நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.35 அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.36 அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது.37 நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்; விழிப்பாயிருங்கள். '
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறு கிறிஸ்து வருகையின் முதல் ஞாயிறாக நாம் தொடங்குகிறோம். உங்கள் வாழ்வில் உள்ள முக்கியமான ரொம்பவும் நெருங்கிய நபர்களுக்கு உங்கள் ப்ரியத்தை எப்படி கான்பிக்க போகிறோம் என்றவாறே , அவர்களுக்கு பிடத்தமான அன்பளிப்பை , அவர்களுக்கு எவ்வாறு உதவியாக இருக்கும் என்று இந்த கிறிஸ்துமஸ் காலத்தை தொடங்குங்கள். ஆனால் அவர்களது வாழ்க்கையில் நல்லதோரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?


இயேசு பிறந்த நாளை நாம் கிறிஸ்துமசாக கொண்டாடுவதால், அவருக்கும் ஒரு அன்பளிப்பு கொடுப்போம். மற்றவர்களை விட கடவுளுக்கு தான் நாம் அதிக அன்பளிப்பு கொடுக்க வேண்டும், ஏற்கனவே பல செல்வங்களை வைத்துள்ளவர்களுக்கு இன்னும் அன்பளிப்பு ஏன் கொடுக்கிறீர்கள்.? இயேசு என்ன அன்பளிப்பு கொடுத்தால், அது என்றென்றும் நிலைத்திருக்கும்? அதே அன்பளிப்பை வேறு யாரும் கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும். அவரிடம் இல்லாத அன்பளிப்பை உங்களால் கொடுக்க முடியுமா? இயேசுவிடம் கொடுக்க வேண்டியதை இன்னும் என்ன வைத்து கொண்டு இருக்கிறீர்கள்? என்ன திறமை அல்லது சேவை அல்லது உங்கள் வாழ்வில் மாற்றம் அவருக்கு பிடித்தமானதாக இருக்கும்?
இன்றைய ஞாயிறின் முதல் வாசகத்தில், கடவுள் நமது தந்தை என நினைவுறுத்துகிறது. பதிலுரை பாடல் கடவுளிடம் நம்மை திருப்ப வேண்டும் என ஜெபமாக சொல்கிறது. இரண்டாவது வாசகமோ கடவுள் நமக்கு செய்த எல்லாவற்றிர்கும் நன்றி சொல்கிறது. கடவுள் உங்களுக்கு கொடுத்த எல்லாவற்றிற்கும் நீங்கள் என்ன கைமாறு செய்ய போகிறீர்கள்?


இன்றைய நற்செய்தியில், நாம் தயாராக/ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று நமக்கு நினைவுறுத்தபடுகிறது. - கிறிஸ்துவின் வருகைக்காக , ஏதாவது ஒன்றை செய்து வித்தியாசத்தை காமிக்க வேண்டும் . இது ஒன்றும் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையை குறிப்பதல்ல. நாம் இறுதி மூச்சை விடும் நேரம் போன்றானது இந்த கிறிஸ்துமஸ். கிறிஸ்துவாக இந்த கிறிஸ்துமஸ்சில் உன்னிடம் வருவதற்கான வருகை இது. இப்பொழுதே , இன்றே உங்களிடம் கிறிஸ்து வருகிறார்.

உங்களிடமிருந்து புதிதாக ஒன்றை உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவர் அதனை உங்களிடம் கொடுக்கும்பொழுது, நிங்கள் சரியானதை செய்கிறீர்களா? (முதல் வாசகத்தில் கூறியிள்ளது போல) , அவரின் ஆன்மிக அன்பளிப்புகளை நீங்கள் உபயோகிப்பதை கிறிஸ்து கான்பாரா? (இரண்டாவது வாசகத்தில் கூறியுள்ளது போல) நீங்கள் எதற்கும் தயாரக இருக்கிறீர்களா? (நற்செய்தியில் உள்ளது போல ).


கிறிஸ்துவின் வருகை காலம் கிறிஸ்து நமக்கு கொடுத்த அன்பளிப்புகளை கொடைகளை நாம் நினைத்து பார்க்க ஒரு வாய்ப்பாக அமைகிறது. அதே போல, அவருக்கும் நாம் கொடுக்கும் அன்பளிப்பும் அவரிடத்தில் இல்லாத ஒன்றாக இருக்க நாம் இக்காலத்தை உபயோகிக்க வேண்டும். இது தான் என்றென்றும் வித்தியாசமாக இருக்கும், நமக்கும், அவருக்கும்.

© 2011 by Terry A. Modica

No comments: