Friday, December 2, 2011

டிசம்பர் 4, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

டிசம்பர் 4, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்து வருகை கால இரண்டாம் ஞாயிறு
Isaiah 40:1-5, 9-11
Ps 85:9-14
2 Peter 3:8-14
Mark 1:1-8
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 1

1. முன்னுரை
திருமுழுக்கு யோவானின் உரை
(மத் 3:1 - 12; லூக் 3:1 - 9, 15 - 17; யோவா 1:19 - 28)
1 கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: 2 ' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.3 பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.4இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5 யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6 யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.7 அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி வாசகங்கள், கடவுளுக்கு ஆயத்தமாகுங்கள் என்று சொல்கிறது -- அவர் நமக்கு எது கொடுக்க விரும்பினாலும், நமக்காக எதனை செய்தாலும், நம்மை எது வேண்டுமானாலும் செய்ய சொன்னாலும் அதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்கிறது; அவரிடம் ஒரு தெய்வீக நோக்கம் இருக்கிறது, அதன் மூலம் நாமெல்லாம் உண்மையான அர்த்தமுள்ள கடவுளின் குழந்தைகளாக , இவ்வுலகை மீட்ட கிறிஸ்துவோடு இருப்போம்.
நாம் கிறிஸ்துவோடு இனைந்தால் தான், நமது இயல்பான ஆற்றலுக்கான கடமையை முழுதும் நல்வழிக்கும், பரிசுத்த பாதைக்கும் நாம் நிறைவேற்ற முடியும்.
நாம் சரியான பாதையில் தான் இருக்கிறோம் என்பது நமக்கு எப்படி தெரிவது? அந்த பயனத்தின் கணிகளை , அதன் பலன்களை கொண்டு நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பது நாம் அறியலாம். பரிசுத்த வழிகள் எப்பொழுதுமே நல்ல கனிகளை தான் கொடுக்கும்.
கிறிஸ்துவின் வருகை காலம் நமக்கு கிறிஸ்துமஸ்ஸுக்கு தயாராகும் காலமாகும். மேலும், கடவுளை நாம் மீண்டும் புதிதாக சந்திக்கும் நேரமாகும். நமது பாவங்களை கழுவ நமக்கு இது நல்ல சமயாமாகும், கடவுளோடும் மீண்டும் இணைந்து , யேசுவை பின் சென்று பரிசுத்த பாதையில் செல்லுங்கள். இந்த வாய்ப்பை நாம் தவறவிட்டால், கிறிஸ்துமஸ் ஒரு சாதாரண விடுமுறையாக தான் இருக்கும். நமது வாழ்வில் பயிர் செய்ய முடியாத நிலமாக இருந்து கிறிஸ்துவை மற்றவர்களுக்கு கொடுக்க முடியாமல் இருக்கும். நம்மிடம் ஒன்றும் இல்லாதது போல நாம் நினைப்போம், அடுத்த வருடம் நம்மிடம் ஒன்றும் இல்லை என்று நினைப்போம்.


கடவுளின் பாதையை செம்மையாக்குங்கள்! அவர் உங்களுக்கு கொடுப்பதற்காக அதிகமான அன்பை வைத்திருக்கிறார்! உங்கள் காயங்களை குணப்படுத்தவும், அதிக சந்தோசம் கொடுக்கவும் , உங்கள் தரிசான நிலத்தை கடவுளுக்காக விரைவு சாலையாகவும் மாற்றா கடவுள் தயாராய் வருகிறார்!. நற்கருணை அருட்சாதனத்திற்கு சென்று பாவ மன்னிப்பு கேட்டு , இயேசு உங்கள் இதயத்தில் சுலபமாக செல்ல பாதையை அகலமாக்குங்கள். அதன் மூலம், மிக விரைவாகவும், மகிமையுடன் உங்களிடத்தில் வருவார். எல்லா மனிதர்களும், புல்லை போல வலிமையற்றவர்கள் தான், மேலும், நமது புகழ், பூக்கள் மலர்ந்து வாடுவது போல ஆகிவிடும். கடவுளின் மகிமை மட்டும் தான் எப்பொழுதும் புகழோடும், கீர்த்தியோடும், புகழொளியோடும் இருக்கும்.

இந்த கிறிஸ்து வருகை காலத்தில், உங்களின் போரட்டங்களும், ப்ரச்னைகளும் என்ன? அதற்கு தான் இயேசு இறைசேவை செய்ய விரும்புகிறர், இந்த ப்ரச்னைகளில் தான், உங்களை பாவங்கள் தாக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது.
உங்கள் வாழ்க்கையில் எது வெல்லாம் நன்றாக போய் கொண்டு இருக்கிறது? எந்த செயல்கள், நல்ல பலன்களை கொடுக்கிறது? பஞ்ச நாட்களில் ஓடி போய் விட கூடிய செயல்களாக இருக்கிறது? இன்றிலிருந்து இன்னும் 100 வருடங்களுக்கு அந்த செயல்கள் ப்ரதி பலனை கொடுக்குமா?
கடவுள் உங்களுக்கு சில திறமைகளை கொடுத்து, அந்த திறமைகளை கொண்டு நீங்கள் சில முக்கியமான வேலைகளை செய்ய சொல்கிறார். கண்டிப்பாக, நீங்கள் பல பலன்களை கொடுக்க கூடிய முழுமையான வாழ்வு வாழ உங்களை அழைக்கிறார். அதன் மூலம், என்றென்றும் ஒரு வேறுபாட்டை காட்ட முடியும். நாம் அன்னை மேரியை போல கிறிஸ்துவை இவ்வுலகிற்கு கொடுக்க நாம் அழைக்க பட்டிருக்கிறோம். இயேசு நம் வாழ்வில் மிக பெரிய வித்தியாசத்தை கொண்டு வர நம்மிடம் நேராக வர ஆசைபடுகிறார்.

உங்கள் நேரத்தை வீணாக்கி கொண்டு இருக்கிறீர்களா? அப்படி என்றால், நற்கருணை அருட்சாதனத்திற்கு சென்று , மனந்திருந்தி, கடவுளின் பாதையை ஆயத்தமாக்குங்கள். உங்கள் மூலம் மிகப்பெரிய நித்திய வாழ்வில் மிக பெரிய வேறுபாட்டை காட்ட இயேசு ஆசைபடுகிறார்.

© 2011 by Terry A. Modica

No comments: