Friday, March 9, 2012

மார்ச் 11, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 11, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 3ம் ஞாயிறு
Ex 20:1-17
Ps 19:8-11
1 Cor 1:22-25
John 2:13-25

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 2
கோவிலைத் தூய்மைப்படுத்துதல்
(மத் 21:12 - 17; மாற் 11:15 - 17; லூக் 19:45 - 46)
13 யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்;14 கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;15 அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.16 அவர் புறா விற்பவர்களிடம், ' இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள் 'என்று கூறினார்.17 அப்போது அவருடைய சீடர்கள். ' உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.18 யூதர்கள் அவரைப் பார்த்து, ' இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? ' என்று கேட்டார்கள்.19 இயேசு மறுமொழியாக அவர்களிடம், ' இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன் ' என்றார்.20அப்போது யூதர்கள், ' இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ? ' என்று கேட்டார்கள்.21 ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.22 அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.

இயேசு அனைவரையும் அறிபவர்
23 பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர்.24 ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும்.25 மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியின் கடைசி பாரா நமக்கு ஒரு விசயத்தை நன்றாகவே வெளிப்படுத்துகிறது: நாம் அடையாளங்களையும், குணப்படுதலையும், தெய்வீக காரியங்களையும் நேராக பார்த்த பிறகு தான் இயேசுவை நம்புகிறோம். இயேசு இது மாதிரி ஆட்களை , அவர்களுடய இவ்வுலக இயல்பை வைத்து கொண்டு , அவர்கள் இயேசுவிற்காக சாட்சியம் சொல்ல வேண்டும் என்பதை அவர் விரும்பவில்லை.

வெறும் அடையாளத்தையும், சாட்சிகளையும் கொண்டு விசுவாசிப்பது மனிதனின் இயல்பு: நாம் பார்ப்பதையும், தொட்டு பார்ப்பதையும், காதால் கேட்பதையும், நம்மால் நம்ப முடியும். ஆனால் மறைந்திருக்கும் கடவுளை, அவரது குரலையும் நம்மால் நம்ப முடிவதில்லை. இந்த நம்பிக்கையினால், நாம் இயற்கை நியதிகளை மீறிய, தெய்வீகமான கடவுளை நாம் அறிந்து கொள்ள முடியும்.

கடவுளிடம் வேண்டி, ப்ரார்த்தித்து, மீண்டும் ஜெபித்து நீங்கள் கேட்ட கோரிக்கைக்கு ஒரு பதிலும் கிடைக்காவிட்டால், உங்கள் விசுவாசம் என்னாகும்? இதன் பதில், நம் விசுவாசம் மனிதத்தனமானதா? அல்லது தெய்வீகமானதா என தெரியும்.
இயேசு, அவர் இவ்வுலகில் இருப்பது எல்லோருக்கும் பெரிய சாட்சியாகவும், அடையாளமாகவு இருக்கும் என்பது அவருக்கு தெரியும். ஆனால் விரைவில் அவர் விண்ணகம் சென்று விடுவார். சில நேரங்களில் இயேசு நம் முன்னே தோன்றி , நாம் கேட்கும்படியாக பேசினால், ஒருவேளை நம் விசுவாசம் இன்னும் அதிகம் ஆகுமோ?


குறிகளும் , அடையாளங்களும் வைத்து தான் நாம் விசுவசிக்கிறோம்: நாம் கேட்ட வேண்டுதலுக்கு கிடைத்த பின்பும், அன்பின் சாட்சியங்களை வைத்தும், நம் உள்ளத்தில் உள்ள மன அமைதியை வைத்தும் நாம் விசுவாசம் கொள்கிறோம். ஆனால், நம் வாழ்வு மன் இறுக்கத்தையும், தோல்விகளையும் நோக்கும்பொழுது,அவரிடமிருந்து எந்த ஒரு அறிகுறியும் காணவில்லை என்றால், நாம் கடவுளை இன்னும் நம்பி கொண்டு இருக்கிறோமோ?
உண்மையான விசுவாசம், எந்த அளவிற்கு கடவுள் நம்மை காக்கிறார் என்பதை வைத்தே நாம் விசுவாசத்தை கடைபிடிக்க வேண்டும். மாறாக என்ன அறிகுறியும், பதிலும், நமக்கு கிடைக்கிறதோ அதை வைத்து அல்ல.
இதனை வெற்றி கொள்ள, நமக்கு தெய்வீக விசுவாசம் வேண்டும். கிறிஸ்துவின் தெய்வீகத்தோடு நாம் இனைந்து, நாம் அவரின் விசுவாசத்தில் சேர்வோம். பின்பு, எவ்வித அறிகுறி இன்றியும், நாம் விசுவாசம் கொள்வோம்.
அடுத்த முறை நீங்கள் நற்கருணை வாங்கும்பொழுது இதனை நினைவில் வைத்து கொள்ளுங்கள். கிறிஸ்துவின் உடலை மட்டும் நாம் வாங்குவதில்லை, அவரது தெய்வீகத்தோடு நம்மையும் இனைத்து கொள்கிறோம், அவரும் நம்மில் இனைகிறார்!, இதனை நீங்கள் நம்பினீர்கள் என்றால், நிச்சயம் அற்புதம் நடக்கும். ஆனால் அது தான் கடவுள் கொடுக்கும் மிகப்பெரிய அன்பளிப்பு இல்லை, அவரையே முழுதுமாக உங்களுக்கு கொடுப்பது தான் மிகப்பெரிய அன்பளிப்பு ஆகும்.
© 2012 by Terry A. Modica

No comments: