Friday, March 16, 2012

மார்ச் 18, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 18, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 4ம் ஞாயிறு
2 Chron 36:14-16, 19-23
Ps 137:1-6
Eph 2:4-10
John 3:14-21

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 3

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.19 ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது.20 தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.21 உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.
(thanks to www.arulvakku.com)

ஏன் நாம் இருளில் ஒளிந்து கொள்கிறோம்? நம் பாவங்களை ஏன் நமக்குள்ளே வைத்து கொண்டு இருக்கிறோம்? அதற்கு பதிலாக பாவசங்கீர்த்தனம் செய்து, அந்த பாவங்களை எடுத்து சொல்லி, அதனை கழுவினால் என்ன?
பாவசங்கீர்த்தனத்தில், இயேசுதான் நம்மை சந்திக்கிறார். குருவின் வழியாக நம்மை சந்திக்கிறார். குருக்கள் அனைவரும், இரகசியத்தை காப்பாற்றா வேண்டும் உறுதி மொழி எடுத்து உள்ளனர். இன்றைய நற்செய்தியில், இயேசு , தம் வருகை 'தண்டனை தீர்ப்பளிக்க அல்ல, மாறாக மீட்கவே' என்பதனை வலியுறுத்துகிறார். ஒளியின் பாதையில் வந்து நம் பாவங்களை வெளி கொண்டு வரவேண்டும்.

எனினும், நாம் பாவசங்கீர்த்தனம் செய்ய விரும்புவதில்லை, நமது குற்ற உணர்வு நம்மை குறைவாக மதிப்பிட வைத்து, நம்மை தூர ஓட வைக்கிறது. நம்மை யாரும் அன்பும், சினேகமும் கொள்ள மாட்டார்கள் என்று பய்ப்படுகிறோம் மேலும், நம்மையே நாம் மன்னிப்பதுமில்லை.
குற்ற உணர்வு, நம்மை மணம் மாறுவதற்கு , மாற்றத்திற்கும் தூண்டுகிறது. ஆனால், அதே குற்ற் உணர்வு, நம் நம்மையே குறைவான மதிப்பீட்டுடன், நாம் மன்னிப்பிற்கு தகுதியில்லாதவன் என நீனைக்கிறோம். அவமானமாக உணர்கிறோம் , அதனால், நம் குற்றத்தை வெளிக்கொணர, அவமானம் தடுக்கிறது.

எனினும், பாவசங்கீர்த்தனத்தில், நாம் பாவ மன்னிப்பு பெற்றபின், நமது மகிழ்ச்சிக்கும், மணம் மாறியபின்பும், நமக்கு என்ன ஆகும் என்ற பயம் நமக்கு இருக்கிறது. எது உங்களை தூரத்திலேயே வைத்த்ருக்கிறது? உங்கள் மண மாற்றத்தின் பயணத்தின், முதல் அடியாக, உங்களுக்கு ஒரு ஆண்மீக ஆலோசகர் வழி நடத்த வேண்டும், அல்லது, ஒரு குருவானவர், உங்களை அந்த பாதையில் அழைத்து செல்லலாம். எந்த ஒரு வாய்ப்பு அமைந்தாலும், அங்கு தான் உங்கள் மணமாற்றம் ஆரம்பிக்கிறது.
உங்கள் ஆண்மாவை மன்னிப்பின் மூலம் இயேசு குணப்படுத்துகிறார். இரக்கத்தின் மூலமும், நிபந்தனையற்ற அன்பின் மூலமும், பாவ மன்னிப்பின் மூலமும், குருவின் வழியாக உங்களை குணப்படுத்துகிறார்.

இன்றைய நற்செய்தியில், உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும். என்று இயேசு சொல்கிறார். நாம் நமது பாவங்களை சொல்லி, கிறிஸ்துவின் ப்ரசன்னமான குருவிடம் மனம் விட்டு சொன்னால், இயேசு நம்மை காப்பார். மேலும், அதே பாவங்களை மீண்டும் செய்யாமல் இருக்க நாம் இயேசுவிடமிருந்து மண உறுதி பெறுகிறோம்.
ஏன் இன்னும் வேதனை அனுபவித்து கொண்டு இருக்கிறீர்கள், பயத்திலும், இருளிலும், குறைவாக மதிப்பீட்டுடனும் இருக்கிறீர்கள்? இயேசு உங்களை காக்க வந்திருக்கிறார்!
© 2012 by Terry A. Modica

No comments: