Friday, April 27, 2012

ஏப்ரல் 29, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஏப்ரல் 29, 2012  ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் 4ம் ஞாயிறு
Acts 4:8-12
Ps 118:1, 8-9, 21-23, 26, 28-29
1 John 3:1-2
John 10:11-18
நற்செய்தி வாசகம்
நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18
அக்காலத்தில் இயேசு கூறியது: "நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்லஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல. ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக் கொண்டுபோய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றிக் கவலை இல்லை. நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக்கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டுஅதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்'' என்றார்.

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், இயேசு தன்னை நல்லாயன் என்று சொல்கிறார். ஆடுகளாகிய நமக்காக அவர் உயிறை துறந்தார். அவரின் எல்லா விருப்பங்களையும் நமக்காக ஒதுக்கி வைத்தார். - மனிதனாக அவருக்கு இருந்த ஆசைகள், ஆவல்கள், அவரின் இருப்பிடமான , பாதுகாப்பான மோட்சத்தை விட்டு, இப்பூமிக்கு வந்தார். அவருடைய நேரத்தை நமக்காக செலவழித்தார். அவருடைய தூக்கத்தை விட்டு கொடுத்தார், மற்றவர்களிடம் கேலிக்கும் , கிண்டலுக்கும் ஆட்பட்டு , அவரின் கொடுமைகளை தாங்கி கொண்டு நமக்காக இறந்தார்.

நாம் ஆடுகளாக இருந்து ஆயனின் குரலை கேட்டு , நல்ல மேய்ச்சல் நிலத்திற்கு அவரை பின் செல்வோம். நமக்கு அவர் நல்லாயனாக இருக்க வேண்டும் , நமக்கு அவரின் பாதுகாப்பும், வழிகாட்டுதலும், அன்பும் தேவை.


எனினும், சில நேரங்களில் இயேசுவின் குரலை கேட்பதை மறந்து விடுகிறோம். நமது வாழ்வு திட்டமிட்டபடி நடக்க வில்லையென்றால், அடிக்கடி நாம் இயேசுவை குரலை கேட்க மறக்கிறோம். நாம் செயல் குழந்து போகும்போதே, பயத்தில் இருக்கும்போதே, இயேசு ஆட்டின் மந்தையை விட்டு வெளியே சென்று விட்டதாக,னாம் அனுமானித்து கொள்கிறோம்அவர் நம்மை விட்டு விட்டுஅவர் காணாமற் போன ஆட்டை தேடி சென்று விட்டார், என்று நினைத்து விடுகிறோம். ஓநாய்கள் தாக்கும் போது அவர் அங்கே இருப்பதில்லை. ! ஏன் அவருக்கு இது தெரியவில்லையா??  நம் மேல் உண்மையான அக்கறை உள்ள அவர், நாம் தாக்கப்படும்போது, எங்கே சென்றார்? கானமற் போன ஆட்டின் மேல் அவ்வளவு அக்கறை கொண்டார்? நாம் நல்ல ஆடாக இருந்து நம்மை விட்டு ஏன் போனார்?

எனினும், இயேசு எவ்வளவு வேலையில் இருந்தாலும், கானாமற் போன ஆட்டை கண்டு பிடிக்க எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்றாலும், , அவர் நம்முடனும் இருப்பார். நமது வாழ்வின் பாதை சாவின் இறுதிக்கு சென்றாலும், மலையின் உச்சிக்கு சென்றாலும், இயேசு நம்மை கைவிட்டதால் அல்ல. நல்லாயனின் ஊழியர்கள் நம்மை வேறு திசைக்கு அழைத்து செல்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை.
மற்ற திசைக்கும் நாம் செல்ல விரும்பவில்லை. நாம் ஏற்கனவே சென்ற மேய்ச்சல் நிலத்தில் தான் இருக்க ஆசைபடுகிறோம். ஆடு மேய்ப்பவர்கள், டக் டக்  என்று அவர்கள் தட்டும்போது நமக்கு பிடிப்பதில்லை. இந்த கட்டுபாடுகள் நமக்கு பிடிக்காமல் , இதனை ஆசிர்வாதமாக எடுத்து கொள்வதில்லை. ஆனால், நாம் நம்பிக்கையுடன் இயேசுவை நாம் பார்த்தும் , அவரின் சொல்லை கேட்டும் இருந்தால், நமக்கு இதெல்லாம் புரியும். சில நேரங்களில், முதல் தடவை கூட இயேசு சொல்வதை நமக்கு பிடிப்பதில்லை.
© 2012 by Terry A. Modica

Friday, April 20, 2012

ஏப்ரல் 22 , 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 22 , 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
 பாஸ்கா காலத்தின் 3ம் ஞாயிறு
 Acts 3:13-15, 17-19 Ps 4:2, 4, 7-9 1 John 2:1-5a Luke 24:35-48
 லூக்கா நற்செய்தி
 அதிகாரம் 24
 .35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இயேசு சீடருக்குத் தோன்றுதல் (மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; யோவா 20:19 - 23; திப 1:6 - 8) 36 சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று அவர்களை வாழ்த்தினார்.37 அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.38அதற்கு அவர், ' நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்?39 என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே ' என்று அவர்களிடம் கூறினார்;40 இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.41 அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், ' உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா? ' என்று கேட்டார்.42அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள்.43 அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.44 பின்பு அவர் அவர்களைப் பார்த்து, ' மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே ' என்றார்;45 அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்.46அவர் அவர்களிடம், ' மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,47 ″ பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் ″ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது.48 இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.49 இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள் 'என்றார்.
 (thanks to www.arulvakku.com)
 இப்பொழுது, நாம் புதுபிக்கபட்ட மக்கள் - ஈஸ்டர் மக்கள்- இன்றைய வாசகங்கள், மீட்பின் வாழ்வை வாழ்வதற்கும், பாவத்துடன் வாழ்வதற்கும் நிறைய வித்தியாசங்களை நமக்கு எடுத்து காட்டுகிறது. "எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம் மாறி அவரிடம் திரும்புங்கள்." என்று முதல் வாசகம் கூறுகிறது. இரண்டாவது வாசகம்: " ``அவரை எனக்குத் தெரியும்'' எனச் சொல்லிக்கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது." என்று கூறுகிறது. மேலும் நற்செய்தி வாசகமோ: "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,47 ″ பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் ″ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் " என்று கூறுகிறது. நாமெல்லாம் தினமும் ஏதோ ஒரு வகையில் பொய் சொல்லி கொண்டிருக்கிறோம். விசுவாச ப்ரமானத்தை வாயில் சொல்லி கொண்டு , தமது வாழ்வில் கடைபிடிப்பதில்லை. கிறிஸ்துவின் அன்பை உண்மையாக நம்பும் நாம் நமது வாழ்வில் நடப்பவை அதனை ப்ரதிபலிப்பதில்லை. கடவுள் நம்மை ஒவ்வொரு தருணத்திலும், ப்ரச்னையில் அக்கறை காட்டுவதில்லை என்பதை நமது கவலையின் மூலம் , நாம் கடவுள் மேல் நம்பிக்கையின்றி இருக்கிறோம் என்பதை காட்டுகிறது. இயேசு நம் எதிரியையும் அன்பு செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் பொழுது, நாம் அவர் என்ன சொன்னாரோ அதனை நாம் நம்பவில்லை. நமக்கு கெடுதல் செய்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சொன்ன பொழுது நம்மை விட புத்திசாலியாக இயேசு தெரியவில்லை. உங்கள் செயல்கள் எவ்வளவு அதிகமாக அழுத்தமாக இயேசுவை பற்றி உண்மையை எடுத்துரைக்கிறது? இயேசு நமக்கு என்ன செய்தோரோ அதை நம்மில் பலர் மிகவும் குறைந்து மதிப்பிடுகிறோம். அவரது மரணமும், மீட்பும் நாம் மோட்சத்திற்கு போக போதுமானதாக இல்லை. என நாம் நினைக்கிறோம். தினமும் நாம் மீட்படைய வேண்டும் என்று நினைத்து நம்மையே அதற்கு தயார் செய்வதில்லை. கடவுள் இவ்வுலகில் மிகவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை, மாறாக, கிறிஸ்துவை போல இன்னும் இன்னும் மாற வேண்டும் என்ற நமது ஆவலை எதிர்பார்க்கிறார். நமது வாழ்வை ஒவ்வொரு முறையும் சுய பரிசோதனை செய்து, நம்மையே இன்னும் முன்னேற வேன்டும். நம்மில் மாற்றத்தை ஏற்படுத்த தேவையான முயற்சிகளை செய்ய வேண்டும். கடவுள் நம் மேல் மிகவும் அன்பு கூர்வார்.
 © 2012 by Terry A. Modica

Friday, April 13, 2012

ஏப்ரல் 15, 2012 ஞாயிறு நற்செய்தி

ஏப்ரல் 15, 2012 ஞாயிறு நற்செய்தி
பாஸ்கா 2ம் ஞாயிறு
Acts 4:32-35
Ps 118:2-4, 13-15, 22-24
1 John 5:1-6
John 20:19-31

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20

இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.

இயேசு தோமாவுக்குத் தோன்றுதல்
24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.25 மற்றச் சீடர்கள் அவரிடம், ' ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், ' அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார்.26 எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.27 பின்னர் அவர் தோமாவிடம், ' இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ' என்றார்.28 தோமா அவரைப் பார்த்து, ' நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார்.29 இயேசு அவரிடம், ' நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் 'என்றார்.

முடிவுரை: நூலின் நோக்கம்
30 வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.31 இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.
(www.arulvakku.com)

நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' தோமா இன்றைய நற்செய்தியில் சொன்னதை போல, நாமும் திருப்பலியில் திவ்ய நற்கருணையை உயர்த்தும் போது சொல்ல வேண்டும்.இந்த பழக்க வழக்கத்தை சில வருடங்களாக கத்தோலிக்கர்கள் மறந்து விட்டோம். இப்பழக்கத்தை மீண்டும் புதுபித்து கொண்டால் நல்லது. இது ஒரு பயபக்தியுடன் கூடிய , கிறிஸ்துவின் தலைமையை , நற்கருணையில் அவர் இருக்கிறார் என்பதையும் நாம் தாழ்மையுடன் ஏற்றுகொள்வதே ஆகும்.

போப் இரண்டாம் ஜான் பால் , திவ்ய நற்கருணையை பற்றிய அவரது நூலில்: "கிறிஸ்து எங்கெல்லாம் அவரை வெளிபடுத்துகிறாரோ, அதையெல்லாம் நாம் அங்கீகரிக்க வேண்டும், ஆனால் அதற்கு மேலாக, திவ்ய நற்கருணையில் இருக்கும் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் நாம் ஏற்று கொண்டு அதனை ஆராதிக்க வேண்டும். " என்று மிகவும் அற்புதமாக எழுதியுள்ளார்.

இயேசு எப்படி அவரது சீடர்களுக்கு அவரது உடலை காட்டி நிருபீத்தார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். சீடர்கள் அவரை ஆவியென்று நினைத்தார்கள். அல்லது எப்படி அவரை எடுத்து கொள்வது என்றே அவர்களால் நினைக்க முடியவில்லை. உயிர்த்தெழுதலை, மீட்பை அவர்களால் இன்னும் நம்ப முடியாமல் இருந்தார்கள்.
இயேசு அவரது காயத்தின் மூலமாக இந்த ஆச்சரியத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அதையே தான் ஒவ்வொரு திருப்பலியிலும் நமக்கும் இயேசு செய்கிறார்.
நமது பொது அறிவு , புத்தி கூர்மையை பயன்படுத்தி, சாதாரண ரொட்டி துண்டையும், திராட்சை ரசத்தையும் , உண்மையான கிறிஸ்துவின் உடலும், இரத்தமும் என்று எண்ணி பார்ப்பது கொஞசம் கஸ்டமான காரியம் தான். அது அப்படியே 2000 வருடத்திற்கும் முன்பு இரத்தமும் சதையுமான உடல் தான் திவ்ய நற்கருணை. மேலும், உயிர்த்த இயேசுவும் அங்கே இருக்கிறார் என்பதை நாம் கிரகித்து கொள்ள இன்னும் கஷ்டம்.

வாழ்வும் கிறிஸ்துவின் மூலம் பயனைடைய , ஒவ்வொரு திருப்பலிக்கும் செல்கிறோம். பெரிய வெள்ளியன்று அவர் செய்த தியாகங்கள் நாம் ஒவ்வொருவருக்கும் தேவை என்று நாம் அறியும்போது, அவரின் காயங்களை பார்க்கிறோம். அதன் பிறகு, திவ்ய நற்கருணையின் உண்மையை நாம் அறிய ஆரம்பிக்கிறோம்.
கிறிஸ்துவின் இறப்பு நம்மை நம் பாவங்களிலிருந்து மீட்க தேவை என்று நாம் நினைக்கும்போது, நற்கருணையின் ஆச்சரியத்தை நாம் நம்ப தயாராகிறோம். மேலும் அவரின் உயிர்த்தெழுதலும், மீட்பும் நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்லும். அடுத்த முயற்சியாக, இயேசு நம்மை ஆக்கிரமித்து , அவரின் இருப்பை நம்மில் ஏற்க வேண்டும். அவர் நம்மில் எவ்விதத்திலாவது வந்து நம்மை அவரை போல மாற்ற் வேண்டும்.
இந்த ஆவலோடு நாம் இயேசுவை திவய நற்கருணையில் பார்க்கும்போது " நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்று சொல்வோம்.

© 2012 by Terry A. Modica

Friday, April 6, 2012

ஏப்ரல் 8, 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 8, 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் ஞாயிறு
Acts 10:34a, 37-43
Ps 118:1-2, 16-17, 22-23
Col 3:1-4 or 1 Cor 5:6b-8
John 20:1-9

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20

இயேசு உயிர்த் தெழுதல்
(மத் 28:1 - 10; மாற் 16:1 - 8; லூக் 24:1 - 12)
1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.2 எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ' ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ' என்றார்.3 இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.4இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.5 அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை.6 அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,7 இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.8 பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.9 இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.10பின்பு சீடர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றார்கள்.
(thanks to www.arulvakku.com)

கொண்டாடுங்கள்! எதிர்பாராத ஆச்சரியத்தின் நிகழ்வான இயேசுவின் உயிர்த்தெழுதலின் நினைவு நாள். முதல் சீடர்கள் காலியாய் இருந்த கல்லறையை பார்த்து ஆச்சர்யபட்டதை போல் உங்களுக்காகவும், கடவுள் சில் ஆச்சரியங்களை வைத்துள்ளார். இன்றைய நற்செய்தியில், நிறைய விசயங்கள் திகைப்பும், வியப்படைய செய்யும் செய்தியும் இருந்தது, ஆனால் யாரும் அதனை புரிந்து கொள்ளவில்லை. இயேசு அவர்களுக்கு முன்னரே சொல்லியிருந்தார், இறப்பிற்கு பிறகு நாம் உயிர்த்தெழுவேன் என்று சொல்லியிருக்கிறார். இருந்தும், கடவுளின் திட்டங்கள் அவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தன. உயிர்த்தெழுதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மெசியாவின் இறைபனியில் உயிர்த்தெழுதல் முக்கிய பங்கு என்பதை அவர்கள் புரிந்திருக்கவில்லை.

கடவுளின் திட்டங்கள் நமக்கு பல நேரங்களில் ஆச்ச்சரியமாகவே இருக்கிறது. நமது வாழ்வின் பல தருணங்களில், கஸ்டமான நேரங்களில் , அது முடிந்து பெரும் அழகான வெற்றியை கொடுக்க போகிறது என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம். நம் வாழ்வில் உள்ள காலியான கல்லறைகள் (நமது இழப்பை நினைத்து வருந்துவது) புது வாழ்விற்கான ஆரம்பம் என்பதை நாம் புரியாமல் விட்டு விடுகிறோம். யேசு நமது கஷ்டமான நேரங்களை வாழ்வை மிக பெரிய ஆசிர்வாதமாக மாற்ற போகிறார் என்பதை நாம் நினைப்பதில்லை.


துயரமான நேரங்களில், நாம் துன்பப்படுகிறோம், நமது சிலுவைகளிலிருந்து விலகி எப்போ வெளியே வருவோம் என்று காத்திருக்கிறோம். அதற்கிடையே இயேசு சிலுவையினால், உண்டான ஈஸ்டர் வெற்றியை உங்களுக்கு தருகிறார். நாம் துயரமான நேரத்தில் இருக்கும்போது, கடவுளின் புகழொளியை நாம் எப்படி அறிந்து கொள்வது, நாம் நமது சிலுவையை நினைத்து மணம் உருகும் போது, அதன் வெற்றியை நாம் எப்படி அறிந்து கொள்வது. அது ஒன்றும் சாத்தியமில்லை.

ஈஸ்டர் மக்களாகிய நாம், சிலுவையின் வெற்றியை நாம் எப்படி பார்ப்பது , அறிந்து கொள்வது என்பதை நாம் கற்று கொள்ள வேண்டும். இயேசு எப்போதும் இருக்கிறார் என்பதை நாம் நம்ப வேண்டும். தியதை விலக்கி நல்லதாக மாற்ற இயேசு இருக்கிறார். கடவுளின் ஆச்சரியங்களை ஏற்று கொள்ள நாம் மாறவேண்டும்.

© 2012 by Terry A. Modica