Friday, April 20, 2012

ஏப்ரல் 22 , 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 22 , 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
 பாஸ்கா காலத்தின் 3ம் ஞாயிறு
 Acts 3:13-15, 17-19 Ps 4:2, 4, 7-9 1 John 2:1-5a Luke 24:35-48
 லூக்கா நற்செய்தி
 அதிகாரம் 24
 .35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இயேசு சீடருக்குத் தோன்றுதல் (மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; யோவா 20:19 - 23; திப 1:6 - 8) 36 சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று அவர்களை வாழ்த்தினார்.37 அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.38அதற்கு அவர், ' நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்?39 என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே ' என்று அவர்களிடம் கூறினார்;40 இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.41 அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், ' உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா? ' என்று கேட்டார்.42அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள்.43 அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.44 பின்பு அவர் அவர்களைப் பார்த்து, ' மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே ' என்றார்;45 அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்.46அவர் அவர்களிடம், ' மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,47 ″ பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் ″ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது.48 இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.49 இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள் 'என்றார்.
 (thanks to www.arulvakku.com)
 இப்பொழுது, நாம் புதுபிக்கபட்ட மக்கள் - ஈஸ்டர் மக்கள்- இன்றைய வாசகங்கள், மீட்பின் வாழ்வை வாழ்வதற்கும், பாவத்துடன் வாழ்வதற்கும் நிறைய வித்தியாசங்களை நமக்கு எடுத்து காட்டுகிறது. "எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம் மாறி அவரிடம் திரும்புங்கள்." என்று முதல் வாசகம் கூறுகிறது. இரண்டாவது வாசகம்: " ``அவரை எனக்குத் தெரியும்'' எனச் சொல்லிக்கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது." என்று கூறுகிறது. மேலும் நற்செய்தி வாசகமோ: "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,47 ″ பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் ″ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் " என்று கூறுகிறது. நாமெல்லாம் தினமும் ஏதோ ஒரு வகையில் பொய் சொல்லி கொண்டிருக்கிறோம். விசுவாச ப்ரமானத்தை வாயில் சொல்லி கொண்டு , தமது வாழ்வில் கடைபிடிப்பதில்லை. கிறிஸ்துவின் அன்பை உண்மையாக நம்பும் நாம் நமது வாழ்வில் நடப்பவை அதனை ப்ரதிபலிப்பதில்லை. கடவுள் நம்மை ஒவ்வொரு தருணத்திலும், ப்ரச்னையில் அக்கறை காட்டுவதில்லை என்பதை நமது கவலையின் மூலம் , நாம் கடவுள் மேல் நம்பிக்கையின்றி இருக்கிறோம் என்பதை காட்டுகிறது. இயேசு நம் எதிரியையும் அன்பு செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் பொழுது, நாம் அவர் என்ன சொன்னாரோ அதனை நாம் நம்பவில்லை. நமக்கு கெடுதல் செய்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சொன்ன பொழுது நம்மை விட புத்திசாலியாக இயேசு தெரியவில்லை. உங்கள் செயல்கள் எவ்வளவு அதிகமாக அழுத்தமாக இயேசுவை பற்றி உண்மையை எடுத்துரைக்கிறது? இயேசு நமக்கு என்ன செய்தோரோ அதை நம்மில் பலர் மிகவும் குறைந்து மதிப்பிடுகிறோம். அவரது மரணமும், மீட்பும் நாம் மோட்சத்திற்கு போக போதுமானதாக இல்லை. என நாம் நினைக்கிறோம். தினமும் நாம் மீட்படைய வேண்டும் என்று நினைத்து நம்மையே அதற்கு தயார் செய்வதில்லை. கடவுள் இவ்வுலகில் மிகவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை, மாறாக, கிறிஸ்துவை போல இன்னும் இன்னும் மாற வேண்டும் என்ற நமது ஆவலை எதிர்பார்க்கிறார். நமது வாழ்வை ஒவ்வொரு முறையும் சுய பரிசோதனை செய்து, நம்மையே இன்னும் முன்னேற வேன்டும். நம்மில் மாற்றத்தை ஏற்படுத்த தேவையான முயற்சிகளை செய்ய வேண்டும். கடவுள் நம் மேல் மிகவும் அன்பு கூர்வார்.
 © 2012 by Terry A. Modica

No comments: