ஏப்ரல்
29, 2012 ஞாயிறு
நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர்
4ம் ஞாயிறு
Acts 4:8-12
Ps 118:1, 8-9, 21-23, 26, 28-29
1 John 3:1-2
John 10:11-18
Ps 118:1, 8-9, 21-23, 26, 28-29
1 John 3:1-2
John 10:11-18
நற்செய்தி வாசகம்
நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18
அக்காலத்தில் இயேசு கூறியது: "நல்ல ஆயன் நானே. நல்ல
ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக்
கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல. ஓநாய் ஆடுகளைப்
பற்றி இழுத்துக் கொண்டுபோய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு
ஆடுகளைப்பற்றிக் கவலை இல்லை. நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என்
ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை
அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா
வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும்
எனது குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை
ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக்
கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே
கொடுக்கிறேன். என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக்கொள்வதில்லை. நானாகவே
அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு. என்
தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்'' என்றார்.
இன்றைய
ஞாயிறின் நற்செய்தியில், இயேசு தன்னை நல்லாயன்
என்று சொல்கிறார். ஆடுகளாகிய நமக்காக அவர் உயிறை
துறந்தார். அவரின் எல்லா விருப்பங்களையும்
நமக்காக ஒதுக்கி வைத்தார். - மனிதனாக
அவருக்கு இருந்த ஆசைகள், ஆவல்கள்,
அவரின் இருப்பிடமான , பாதுகாப்பான மோட்சத்தை விட்டு, இப்பூமிக்கு வந்தார்.
அவருடைய நேரத்தை நமக்காக செலவழித்தார்.
அவருடைய தூக்கத்தை விட்டு கொடுத்தார், மற்றவர்களிடம்
கேலிக்கும் , கிண்டலுக்கும் ஆட்பட்டு , அவரின் கொடுமைகளை தாங்கி
கொண்டு நமக்காக இறந்தார்.
நாம் ஆடுகளாக இருந்து ஆயனின்
குரலை கேட்டு , நல்ல மேய்ச்சல் நிலத்திற்கு
அவரை பின் செல்வோம். நமக்கு
அவர் நல்லாயனாக இருக்க வேண்டும் , நமக்கு
அவரின் பாதுகாப்பும், வழிகாட்டுதலும், அன்பும் தேவை.
எனினும்,
சில நேரங்களில் இயேசுவின் குரலை கேட்பதை மறந்து
விடுகிறோம். நமது வாழ்வு திட்டமிட்டபடி
நடக்க வில்லையென்றால், அடிக்கடி நாம் இயேசுவை குரலை
கேட்க மறக்கிறோம். நாம் செயல் குழந்து
போகும்போதே, பயத்தில் இருக்கும்போதே, இயேசு ஆட்டின் மந்தையை
விட்டு வெளியே சென்று விட்டதாக,னாம் அனுமானித்து கொள்கிறோம். அவர்
நம்மை விட்டு விட்டு , அவர் காணாமற் போன
ஆட்டை தேடி சென்று விட்டார்,
என்று நினைத்து விடுகிறோம். ஓநாய்கள் தாக்கும் போது அவர் அங்கே
இருப்பதில்லை. ! ஏன் அவருக்கு இது
தெரியவில்லையா?? நம்
மேல் உண்மையான அக்கறை உள்ள அவர்,
நாம் தாக்கப்படும்போது, எங்கே சென்றார்? கானமற்
போன ஆட்டின் மேல் அவ்வளவு
அக்கறை கொண்டார்? நாம் நல்ல ஆடாக
இருந்து நம்மை விட்டு ஏன்
போனார்?
எனினும்,
இயேசு எவ்வளவு வேலையில் இருந்தாலும்,
கானாமற் போன ஆட்டை கண்டு
பிடிக்க எவ்வளவு தூரம் செல்ல
வேண்டும் என்றாலும், , அவர் நம்முடனும் இருப்பார்.
நமது வாழ்வின் பாதை சாவின் இறுதிக்கு
சென்றாலும், மலையின் உச்சிக்கு சென்றாலும்,
இயேசு நம்மை கைவிட்டதால் அல்ல.
நல்லாயனின் ஊழியர்கள் நம்மை வேறு திசைக்கு
அழைத்து செல்கிறார்கள் என்பதை நாம் புரிந்து
கொள்வதில்லை.
மற்ற திசைக்கும் நாம் செல்ல விரும்பவில்லை.
நாம் ஏற்கனவே சென்ற மேய்ச்சல்
நிலத்தில் தான் இருக்க ஆசைபடுகிறோம்.
ஆடு மேய்ப்பவர்கள், டக் டக் என்று அவர்கள் தட்டும்போது
நமக்கு பிடிப்பதில்லை. இந்த கட்டுபாடுகள் நமக்கு
பிடிக்காமல் , இதனை ஆசிர்வாதமாக எடுத்து
கொள்வதில்லை. ஆனால், நாம் நம்பிக்கையுடன்
இயேசுவை நாம் பார்த்தும் , அவரின்
சொல்லை கேட்டும் இருந்தால், நமக்கு இதெல்லாம் புரியும்.
சில நேரங்களில், முதல் தடவை கூட
இயேசு சொல்வதை நமக்கு பிடிப்பதில்லை.
© 2012 by Terry A. Modica
No comments:
Post a Comment