Friday, April 13, 2012

ஏப்ரல் 15, 2012 ஞாயிறு நற்செய்தி

ஏப்ரல் 15, 2012 ஞாயிறு நற்செய்தி
பாஸ்கா 2ம் ஞாயிறு
Acts 4:32-35
Ps 118:2-4, 13-15, 22-24
1 John 5:1-6
John 20:19-31

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20

இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.

இயேசு தோமாவுக்குத் தோன்றுதல்
24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.25 மற்றச் சீடர்கள் அவரிடம், ' ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், ' அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார்.26 எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.27 பின்னர் அவர் தோமாவிடம், ' இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ' என்றார்.28 தோமா அவரைப் பார்த்து, ' நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார்.29 இயேசு அவரிடம், ' நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் 'என்றார்.

முடிவுரை: நூலின் நோக்கம்
30 வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.31 இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.
(www.arulvakku.com)

நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' தோமா இன்றைய நற்செய்தியில் சொன்னதை போல, நாமும் திருப்பலியில் திவ்ய நற்கருணையை உயர்த்தும் போது சொல்ல வேண்டும்.இந்த பழக்க வழக்கத்தை சில வருடங்களாக கத்தோலிக்கர்கள் மறந்து விட்டோம். இப்பழக்கத்தை மீண்டும் புதுபித்து கொண்டால் நல்லது. இது ஒரு பயபக்தியுடன் கூடிய , கிறிஸ்துவின் தலைமையை , நற்கருணையில் அவர் இருக்கிறார் என்பதையும் நாம் தாழ்மையுடன் ஏற்றுகொள்வதே ஆகும்.

போப் இரண்டாம் ஜான் பால் , திவ்ய நற்கருணையை பற்றிய அவரது நூலில்: "கிறிஸ்து எங்கெல்லாம் அவரை வெளிபடுத்துகிறாரோ, அதையெல்லாம் நாம் அங்கீகரிக்க வேண்டும், ஆனால் அதற்கு மேலாக, திவ்ய நற்கருணையில் இருக்கும் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் நாம் ஏற்று கொண்டு அதனை ஆராதிக்க வேண்டும். " என்று மிகவும் அற்புதமாக எழுதியுள்ளார்.

இயேசு எப்படி அவரது சீடர்களுக்கு அவரது உடலை காட்டி நிருபீத்தார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். சீடர்கள் அவரை ஆவியென்று நினைத்தார்கள். அல்லது எப்படி அவரை எடுத்து கொள்வது என்றே அவர்களால் நினைக்க முடியவில்லை. உயிர்த்தெழுதலை, மீட்பை அவர்களால் இன்னும் நம்ப முடியாமல் இருந்தார்கள்.
இயேசு அவரது காயத்தின் மூலமாக இந்த ஆச்சரியத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அதையே தான் ஒவ்வொரு திருப்பலியிலும் நமக்கும் இயேசு செய்கிறார்.
நமது பொது அறிவு , புத்தி கூர்மையை பயன்படுத்தி, சாதாரண ரொட்டி துண்டையும், திராட்சை ரசத்தையும் , உண்மையான கிறிஸ்துவின் உடலும், இரத்தமும் என்று எண்ணி பார்ப்பது கொஞசம் கஸ்டமான காரியம் தான். அது அப்படியே 2000 வருடத்திற்கும் முன்பு இரத்தமும் சதையுமான உடல் தான் திவ்ய நற்கருணை. மேலும், உயிர்த்த இயேசுவும் அங்கே இருக்கிறார் என்பதை நாம் கிரகித்து கொள்ள இன்னும் கஷ்டம்.

வாழ்வும் கிறிஸ்துவின் மூலம் பயனைடைய , ஒவ்வொரு திருப்பலிக்கும் செல்கிறோம். பெரிய வெள்ளியன்று அவர் செய்த தியாகங்கள் நாம் ஒவ்வொருவருக்கும் தேவை என்று நாம் அறியும்போது, அவரின் காயங்களை பார்க்கிறோம். அதன் பிறகு, திவ்ய நற்கருணையின் உண்மையை நாம் அறிய ஆரம்பிக்கிறோம்.
கிறிஸ்துவின் இறப்பு நம்மை நம் பாவங்களிலிருந்து மீட்க தேவை என்று நாம் நினைக்கும்போது, நற்கருணையின் ஆச்சரியத்தை நாம் நம்ப தயாராகிறோம். மேலும் அவரின் உயிர்த்தெழுதலும், மீட்பும் நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்லும். அடுத்த முயற்சியாக, இயேசு நம்மை ஆக்கிரமித்து , அவரின் இருப்பை நம்மில் ஏற்க வேண்டும். அவர் நம்மில் எவ்விதத்திலாவது வந்து நம்மை அவரை போல மாற்ற் வேண்டும்.
இந்த ஆவலோடு நாம் இயேசுவை திவய நற்கருணையில் பார்க்கும்போது " நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்று சொல்வோம்.

© 2012 by Terry A. Modica

No comments: