ஜனவரி 20,
2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் இரண்டாவது
ஞாயிறு
Isaiah 62:1-5
Ps 96:1-3, 7-10
1 Cor 12:4-11
John 2:1-11
Ps 96:1-3, 7-10
1 Cor 12:4-11
John 2:1-11
யோவான் (அருளப்பர்)
நற்செய்தி,
(thanks to
www.arulvakku.com)
இன்றைய
நற்செய்தியில், ப்ரச்சினையுள்ள நேரத்தில் பாவத்தில் விழாமல், எப்படி அதனை
கையாள்வது என்று நமக்கு எடுத்து காட்டாய் விளக்குகிறது. அங்கே ஒரு தேவை இருக்கிறது
என்பதை அறிந்து அன்னை மரியாள், இயேசு அதற்காக ஏதாவது செய்ய வேண்டுமமென
விரும்பினார். தெய்வீக அனுமதியில்லாமல், அங்கே ஒரு அருஞ்செயல் நடக்காது என்பது
அன்னை மரியாள் முழுதும் அறிந்திருந்தாள். தெய்வத்தால் தான் அந்த அதிசய நிகழ்வு
நடக்கும் என்பதை அறிந்து, இயேசுவிடம் கேட்கிறார். முதலில் இயேசுவின் மனிதத்தன்மை
தான் பதில் கூறியது. இயேசு அவருடைய தெய்வீக தன்மையை அப்போது காட்ட விரும்பவில்லை. இயேசு ஆண்மாவின்
புண்களை ஆற்றதான் ஆர்வமாக இருந்தார், காலியான ஜாடியில் திராட்சை இரத்தை நிரப்ப
அல்ல.
இயேசு
அவரிடம், 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும்
வரவில்லையே' என்றார். இது எப்படி இருக்கிறதென்றால், “நான் உங்கள் கோரிக்கையை
ஏற்று கொள்கிறேன், ஆனால், இப்படி ஒரு அதிசய நிகழ்வு இங்கே நடந்த்தால், மீட்பை
கொடுக்க வேண்டிய இறைசேவையை செய்யவே விரும்புகிறேன், ஆனால், இங்குள்ள மக்களோ
விருந்திற்காக மட்டுமே என்னிடம் வரும்படி இந்த அதிசய நிகழ்வு செய்து விடும்” என்று
இயேசு கூறுவது போல் உள்ளது.
அன்னை
மரியாள் நமக்கு உதவி செய்பவர் என்று கத்தோலிக்கர்கள் அனைவரும் இந்த திருவசனங்கள்
மூலம் நம்புகிறோம். ஒரு தாயாக நமக்கு வேண்டியதை, இயேசுவிடமிருந்து நமக்கு பெற்று
தருவார் என பார்க்கிறோம். ஏனெனில் இயேசுவின் மனதை அன்னை மரியாள் மாற்றி விடுவார்.
இயேசு முடியாது என்று சொல்லிவிட்டார், ஆனால் இந்த குழப்பம், அன்னை மரியாளின்
வழிக்கே வந்தது, அவரே இறுதியில் வெற்றி பெற்றார். யேசு இந்த குழப்பத்தில் தோற்றே
போனார்.
குழப்பமான
நிலையில், இப்படி தான் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒருவர் வெற்றி
பெற்றவராகவும், இன்னொருவர் தோற்றவராகவும் ஆன பின்புதான், குழப்பமோ, இழுபறியோ
முடிவடைந்ததாகும். அதனால், கடவுளிடம் நாம் வேண்டுகோள் வைக்கும்பொழுது நாம் என்ன
கேட்டோமோ, அதனை கொடுப்பதில்லை. நாம் தான் தோற்றுவிட்டோம் என நாம் நினைக்கிறோம். அதனால், இன்னும் கடுமையாக
முயற்சி செய்து, இன்னும் அவரிடம் வேண்டுகிறோம். கடவுளை தோற்றவராக முயற்சி
செய்கிறோம். மேலும் இது நடைபெறாமல்
போகும்பொழுது, நாம் அன்னை மரியிடம் சென்று, நமக்காக அவரின் மகனிடம் சிபாரிசு செய்ய
சொல்கிறோம்.
ஆனால்,
ஆரம்பத்திலிருந்தே, கடவுள் நம்மை தான் வெற்றியாளராக்க விரும்புகிறார்.
நமக்கு
எது நல்லதோ அதுவே நமக்கு கிடைக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். இதனையே
அன்னை மரியாளுக்கு தெரிந்து, அந்த வேலையாட்களிடம் “என் மகன் சொல்வதை நீங்கள்
செய்யுங்கள்” என்று கூறினார்.
குழப்பங்கள்
ஒன்று தப்பானதல்லை. நம்மிடையே குழப்பம்
உண்டாகும் பொழுது, நமக்கு கிடைத்த புனித வாய்ப்பாக, நாம் கடவுளை நம்புவது நமக்கு நல்ல பலன்களை கொடுக்கும். அந்த கல்யாண
விருந்தில், உள்ள அனைவர் மேலும் இயேசுவுக்கு அக்கறை உண்டு என்று அன்னை மரியாளுக்கு
தெரியும், அதனை நம்பிதான் இயேசுவிடம் அதிசய நிகழ்வு செய்ய சொன்னர். இயேசு கடவுளை
நம்பினார், மேலும், கடவுள் அந்த மக்களையும், இயேசுவின் மீட்பு பணியையும் காப்பார்
என இயேசு நம்பினார். இது இரண்டு பேருக்கும் வெற்றி தரும் நிகழ்வாகும்.
©
2013 by Terry A. Modica
No comments:
Post a Comment