Saturday, January 5, 2013

ஜனவரி 6, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜனவரி  6, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருகாட்சி திருவிழா
Isaiah 60:1-6
Ps 72:1-2, 7-8, 10-13
Ephesians 3:2-3, 5-6
Matthew 2:1-12

மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 2
ஞானிகள் வருகை
1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் ' என்றார்கள்.3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.5 அவர்கள் அவனிடம், ' யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.6 ஏனெனில், யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் ' என்றார்கள்.7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டு போய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.8 மேலும் அவர்களிடம், ' நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் ' என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
(thanks to www.arulvakku.com)
கிறிஸ்துமஸ் கால கட்டம், ஞாணிகள், குழந்தை யேசுவை காணச் சென்றதோடு முடிவிற்கு வருகிறது. கிரேக்கத்தில் “ஞாணிகள்” என்பதற்கு கீழ்திசை அறிவியலாளர்கள் என்று அர்த்தம். இதே வார்த்தையை “ஜோசியர்கள்” என்று சிலர் கூறுவதுண்டு, ஆனால், குழந்தை யேசுவின் குடிலில் அவர்கள் வந்து நின்றதை பார்க்கும்பொழுது, அவர்கள் “ஜோசியர்கள்” இல்லை என்பது தெரியும். மத்தேயு அவர்களை நற்செய்தியில் காட்டுவதன் நோக்கம், இயேசு யூதர்களையும் மற்றும் யூதர்கள் அல்லாதவர்களுக்கும் மீட்பை வழங்கவே வந்தார் என்பதை நமக்கு சுட்டி காட்டுகிறார்.

திருச்சபை, இந்த ஆண்டவரின் திருகாட்சி விழாவில், இதனை கொண்டாடும்  நேரத்தில், இயேசுவின் முன், அவரின் இறை ப்ரசன்னத்தோடும், மனித உருவோடும், அவரை தாழ்பணிந்து ஏற்று கொள்வபவர்களுக்கு, இறையரசில் கண்டிப்பாக இடமுண்டு என்று சொல்கிறது. கிறிஸ்துவே வழி, உண்மையும் வாழ்வும் ஆவார். அவரில்லாமல், யாருக்கும் விண்ணக வாழ்வு இல்லை. எல்லோரும் அதற்கு அழைக்கபடுகின்றனர்.

மிக பிரபலமானவர்கள் இருந்த அந்த காலத்தில், ஞாணிகள் ஒன்றும் அரசர்களில்லை. ஆனால், சில பைபிள் வசணங்களில், அவர்களை அரசர்கள் என்று குறிப்பிடபட்டுள்ளது. ஏனெனில், அவர்கள் அரசர்கள் கொடுக்கும் அன்பளிப்புகளை கொண்டு வந்தார்கள். அவர்களுடைய அரச குணத்தை அங்கே காட்டவில்லை, ஆனால் இயேசு அரசன் என்பது அந்த அன்பளிப்புகளால் காட்டினார்கள். தீர்க்க தரிசனமாக இயேசு இறையரசர், நமக்காக அவர் இறப்பார் என்பதை சாட்சியமாக இருந்தார்கள்.

திருக்காட்சி” என்ற வார்த்தைக்கு அர்த்தம், “தெரியப்படுத்தும் தருணம்” ஆகும்.  இது இரகசியம் வெளிபடுத்தபட்டு, நமது வாழ்வை மாற்றும் தருணம் ஆகும். அந்த ஞாணிகள் குழந்தை யேசு தான் இவ்வுலகின் மீட்பர் என்று அறிந்து கொண்டார்களா? அந்த காலத்தில், அரசர்கள் எல்லாம் தெய்வீக இடத்தில் வைத்து பார்க்கபட்டனர்.  “அவர்கள் கடவுளாக இறக்கும் வரையில் நம்மில் வாழ்கிறார்கள்” என்று அந்த காலத்தில் ஒரு எண்ணம் இருந்து வந்தது. அந்த ஞாணிகளுக்கு இயேசு தான்  நிரந்தர அரசர் என்று அவர்களுக்கு தெரிய வந்ததா?

இந்த யாத்திரைக்கு பிறகு, இயேசுவை பற்றி அவர்கள் என்றுமே மறந்ததில்லை, ஜெருசலேத்திலிருந்து அவரை பற்றி ஏதாவது செய்தி வராதா? என்று அவர்கள் காதை தீட்டி வைத்திருந்தனர். யூதர்களின் அரசன் சிலுவையை அறையபட்டார் என்பதை அறிந்தனர். நாம் இதனை அறிவோம். ஏனெனில், ஒரு நேரத்தில், அவர்கள் புனித கிறிஸ்தவர்களாக மாறினர். அவர்களின் உடல் இன்னும் இருக்கிறது, அவைகள் புனிதபடுத்தப்பட்டுள்ளன.

© 2012 by Terry A. Modica

No comments: