பிப்ரவரி 24,
2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின்
இரண்டாம் ஞாயிறு
Gen 15:5-12, 17-18
Ps 27:1, 7-9, 13-14
Phil 3:17–4:1
Luke 9:28b-36
Ps 27:1, 7-9, 13-14
Phil 3:17–4:1
Luke 9:28b-36
இயேசு தோற்றம் மாறுதல்
(மத் 17:1 - 8; மாற் 9:2 - 8)
(மத் 17:1 - 8; மாற் 9:2 - 8)
28 இவற்றையெல்லாம்
சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும்
யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்.29 அவர்
வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய்
மின்னியது.30 மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.31 மாட்சியுடன்
தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக்
கொண்டிருந்தார்கள்.32 பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய்
இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற
இருவரையும் கண்டார்கள்.33 அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது,
பேதுரு இயேசுவை நோக்கி, ' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும்
மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்று தாம்
சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.34 இவற்றை அவர்
சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம்
அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.35 அந்த மேகத்தினின்று, இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே.
இவருக்குச் செவிசாயுங்கள் என்று ஒரு குரல்
ஒலித்தது.36 அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில்
எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.
(Thanks to www.arulvakku.com)
இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து
கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள் என்று கடவுள் கூறியதையும், இயேசு ,
அவரின் உண்மையான கடவுள் என்பதையும் இன்றைய நற்செய்தியில் நமக்கு
காண்பிக்கபடுகிறது.
உண்மையான கிறிஸ்துவை ஒவ்வொரு
முறை அவரின் நற்செய்தியை கேட்கும்பொழுதும், பரிசுத்த ஆவியானவர் நம்மை வழி நடத்த
அனுமதிக்கும் போதும், நாம் அறிந்து கொள்கிறோம்.
இதுவரையிலும் பார்க்காத ஒளியை
கொண்டு, நம்மிடம் இன்னும் இருக்கும் தீயவற்றை முழுதுமாக எடுத்து கொள்ள, நாம்
இயேசுவின் நற்செய்தியை கேட்க வேண்டும். அதன் மூலம் நம்மில் உள்ள தீயவற்றை அழிக்க
நாம் அவருக்கு அனுமதி கொடுக்க வேண்டும். அதன் பிறகு, நம்மை சுற்றியுள்ளவர்கள்,
இயேசுவை நம்மிடமிருந்து அனுபவிப்பார்கள். ஏனெனில் இயேசுவை நம்மில் கான்பார்கள்.
நமது செயலிலும், இரக்கத்திலும், மன்னிப்பிலும் கான்பார்கள். இதன் மூலம் நாம்
இயேசுவை இவ்வுலகிற்கு காட்டுகிறோம்.
தவக்காலத்தில், கிறிஸ்து நம்
மேல் ஒளியை நிரப்பி நம் தீயவைகளை அழிக்க அதிகம் நாம் கிறிஸ்துவை நோக்கி
ஜெபிக்கவேண்டும். நம்மில் அவர் ஒளி பட்டால் தான் நாம் மனம் திருந்த முடியும்.
மன்னிப்பை கேட்டு பெற்று, பரிசுத்த ஆவியின் ஆற்றலால், நாம் மனம் திரும்ப முடியும். அதே போல்
கிறிஸ்துவை போல மாற முடியும். கிறிஸ்துவோடு இனைந்து நாம் இன்னும் ஒளிருவோம்.
இவ்வுலகை மீட்கும் இயேசுவின் இறைசேவையில் முழுதுமாக இனைவோம். இந்த இறைசேவையில்
கஷ்டம் இருந்தாலும், பெரிய வெள்ளியின் வலிக்கு பிறகு, ஈஸ்டர் அன்று வெற்றி
பெறுவோம் என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கிறது.
இந்த தியாகத்திலும், சோதனையிலும்
– நமது சிலுவையும் – இவ்வுலகை பரிசுத்தமாக்குகிறது. கல்வாரி வரைக்கும் இயேசுவோடு செல்ல தைரியாமக
இருக்கிறீர்களா? ஈஸ்டருக்கு செல்ல அது ஒன்று தான் வழி.! நமது சோதனைகளில்,
கிறிஸ்துவின் இரத்தம் மீண்டும் சிந்துகிறது. நமது வலியெல்லாம், கிறிஸ்துவின்
வலியாகும். இயேசுவோடு நாம் ஏற்கனவே சிலுவையில் இருக்கிறோம்!. ஏன் இதனை அப்படியே
முழுமனதுடன் நம்மை ஏமாற்றியவர்களுக்கும்,
துன்பபடுத்தியவர்களுக்காகவும் ஏற்று கொண்டால் என்ன.?
நம்மை அன்பு செய்யாதவர்களை நாம்
அன்பு செய்வதாலும், நம்மை மதிக்காதவர்களை மன்னித்தும், சாத்தானை விரட்டி இறையரசை
கொண்டுவர கடின உழைப்பு கொடுத்தும், இருளில் உள்ளவர்களுக்கு நாம் கிறிஸ்துவை
வெளிப்படுத்துகிறோம்.
© 2013 by Terry A. Modica