Friday, February 15, 2013

பிப்ரவரி 17, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


பிப்ரவரி 17, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் முதல் ஞாயிறு

Deut 26:4-10
Ps 91:1-2, 10-15
Rom 10:8-13
Luke 4:1-13

லூக்கா நற்செய்தி

இயேசு சோதிக்கப்படுதல்
(மத் 4:1 - 11; மாற் 1:12 - 13)
1 இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.2 அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார்.3 அப்பொழுது அலகை அவரிடம், ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும் ' என்றது.4 அதனிடம் இயேசு மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார்.5 பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி,6 அவரிடம், ' இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன்.7 நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும் ' என்றது.8 இயேசு அதனிடம் மறுமொழியாக, ″ உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக ″ என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார்.9 பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ' நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்;10 ' உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் ' என்றும்11 ' உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றது.12 இயேசு அதனிடம் மறுமொழியாக, ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் ″ என்றும் சொல்லியுள்ளதே ' என்றார்.13 அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.
(thanks to www.arulvakku.com)

நாம் நமது விசுவாசத்தில், மனப்பூர்வமாக இருந்தால்,  இயேசுவின் வாழ்வு தான் நம் வாழ்வாக இருக்கும், இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பெற்று கொண்டும், நாம் அவரோடு இனைகிறோம். நற்செய்தி வாசகம் மூலம், அவரை பார்த்து, அவரோடு மோட்சத்திற்கு செல்கிறோம்.

இந்த தவக்காலத்தில், திருச்சபை ஒவ்வொரு திருப்பலியிலும் கொடுக்கும் நற்செய்தி வாசகங்கள், நமது பயணத்தை செம்மை படுத்த உதவுகிறது. அதனை முழு மனதோடு கேட்டு, அதனை நம் வாழ்வோடு ஏற்று கொண்டால், நாம் கிறிஸ்துவோடு இனைகிறோம்.

இன்றைய நற்செய்தியில்,  நாம் இயேசுவோடு பாலைவனத்திற்கு செல்கிறோம். சோதனைக்குள்ளான உங்கள் ப்ரச்சினைகளை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பாவங்கள் உங்களை வாழ்வை எப்படி பாலைவனமாக்கியது என்று நினைத்து பாருங்கள்.

இயேசுவோடு நாம் இனைந்து நடக்கும்போது, அவரின் சாத்தானின் போராட்டத்தோடு,  துன்பத்தோடு நம்மை இனைத்து கொண்டு, சாத்தானை வெற்றி கொள்கிறோம். நமது சோதனைகள், தவறு செய்ய தூண்டும் உணர்வுகள், இயேசுவினுடையதாகிறது. மேலும் அவரோடு இனைந்து நாம் இருப்பதால், நமது சோதனைகள் அவருடையதாகவும் ஆகிறது. அவரோடு இனைந்து, நாம் சாத்தானை ஒதுக்கி, பரிசுத்த வாழ்வில் இருக்கிறோம். சுய கட்டுபாடுடனும் இருக்கவும், சுய நலத்தை விரட்டி அடிக்கவும், திருச்சபை இந்த தவக்காலத்தில் நமக்கு உதவுகிறது: விரதமிருத்தல், மற்றவர்களுக்கு உதவுவது, மனம் திரும்புதல், விசுவாச முனைப்பு,  பாவங்களை தவிர்த்து வாழ்தல், நற்செய்தி வாசகங்களை வாசித்தல், இன்னும் பல.

ஒவ்வொரு முறை நாம் உணவை தவிர்த்து, ஒவ்வொரு பாவத்தை நாம் பாவ சங்கீர்த்தனத்தில், கூறி மனம் திரும்புவதும், ஒவ்வொரு தியாகமும், அதிகரிக்கும் ஜெபங்களும், நற்செய்தி வாசகங்களும், நாம் அனுதின வாழ்வை சுய கட்டுபாடுடனும், அழைத்து சென்று இயேசுவோடு இந்த பாலைவனத்தில் நம்மை இனைக்கிறது.

சாத்தானோடு உண்டான சோதனையில் ,இயேசு உணவை தவிர்த்தார், உடல் அசதியின்றி ஜெபத்தில் ஈடுபட்டார். அதன் மூலம், இந்த தவக்காலத்தின் பின்பு வந்த இறைசேவையில், திடத்துடன் அவரால் ஈடுபட முடிந்தது. இதே போல தான் நமக்கும் இந்த தவக்காலம் இருக்க வேண்டும்.
சாத்தானை பார்த்து நாம் பயம் கொள்ள வேண்டியதில்லை. இயேசு ஏற்கனவே அவர்களை  நமக்காக தோற்கடித்துவிட்டார். முதலில் பாலைவனத்திலும், பிறகு சிலுவையிலும் சாத்தானை தோற்கடித்து விட்டார்.  நமது போராட்டமோ, நம்மை தவறு செய்ய தூண்டும். உணர்வுகளுடனும், நமது பலவீனங்களுடனும், பாவத்தில் விழாமல் இருப்பதற்கும் நாம் போராட வேண்டியுள்ளது  

எப்பொழுதுமே நாம் இயேசுவை பின் செல்ல விரும்புவதில்லை. இதனை தான் இயேசுவிடம் இந்த தவக்காலத்தில் அர்ப்பனித்து விட வேண்டும். அப்பொழுதுதான் இந்த ஈஸ்டர், நமக்கு அத்தமுள்ளதாய் இருக்கும். இந்த தவக்காலத்திலிருந்து நாம் ஆற்றலுடனும், உறுதியுடனும் நம் விசுவாசத்தோடு வருவோம்.
© 2013 by Terry A. Modica

No comments: