Saturday, June 29, 2013

ஜூன் 30, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜூன் 30, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 13ம் ஞாயிறு

1 Kings 19:16b, 19-21
Ps 16:1-2, 5, 7-11
Gal 5:1, 13-18
Luke 9:51-62

லூக்கா நற்செய்தி
அதிகாரம் 9: 51-62
5. எருசலேம் நோக்கிப் பயணம்
இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த சமாரியர்
51 இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,52 தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.53 அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.54அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, ' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? ' என்று கேட்டார்கள்.55 அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.56 பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.

இயேசுவைப் பின்பற்ற விரும்பியவர்கள்
(மத் 8:19 - 22)
57 அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, ' நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் ' என்றார்.58 இயேசு அவரிடம்,' நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை ' என்றார்.59இயேசு மற்றொருவரை நோக்கி, ' என்னைப் பின்பற்றிவாரும் ' என்றார். அவர், ' முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும் ' என்றார்.60 இயேசு அவரைப் பார்த்து, ' இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும் ' என்றார்.61 வேறொருவரும், ' ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும் ' என்றார்.62 இயேசு அவரை நோக்கி, ' கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல ' என்றார்.
(Thanks to www.arulvakku.com)

உங்களை யாராவது  நிராகரீக்கும்  பொழுது, அதனை எப்படி கையாள்வீர்கள்? இன்றைய ஞாயிறின் நற்செய்தி, சீடர்கள் எப்படி அவர்களுக்கு ஏற்படும் மறுத்தலை எதிர்கொள்கிறார்கள் என்று பார்க்கிறோம். இயேசுவிற்கு முன் சமாரியர்களின் ஊருக்கு செல்கிறார்கள். ஏனெனில், இயேசு அவர்களிடம் கூறி மக்களை சந்திப்பதற்கு ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய சொல்கிறார். ஆனால் சமாரியர்களோ, இயேசு எருசலேம் செல்லவிருப்பதை தெரிந்து கொண்டு, இயேசுவை வரவேற்க அவர்கள் தயாராகவில்லை. இயேசு அங்கேயே தங்கினாலும் தங்குவார் என்ற எண்ணத்திற்கு அவர்கள் இதயத்தில் விதைக்காமல் மூடிவிட்டார்கள். அதனால் மெசியாவுடன் அருகில் இருக்கும் வாய்ப்பை அவர்கள் தவறவிட்டனர்.

உங்களுக்கு மிகவும் நெருங்கிய ஒருவர், இயேசுவை அவர்களுக்கு கொண்டு வர செய்யும் எல்லா முயற்சிகளுக்கும் நிராகரிப்பை கொடுத்தால், நீங்கள் என்ன நினைப்பீர்கள்?   நீங்கள் சொல்வதை யாரும் காது கொடுக்க கேட்கவில்லையென்றால், உங்கள் எண்ணம் எண்ணவாக இருக்கும்.? அல்லது திருச்சபையின் போதனையை நீங்கள் விளக்கி சொல்ல முற்படும்பொழுது, அவர்கள் அதற்கு புரிந்து கொள்ளவில்லையென்றால்?


நம்மை போலவே, இயேசுவுடன் சென்ற சீடர்களும்,  நிராகரிப்புகளை விரும்பவில்லை. இயேசுவின் நெருங்கிய சீடர்கள் ஜேம்ஸும், ஜானும், இயேசுவிற்கு உதவி செய்வது போல, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? ' என்று கேட்டார்கள். இயேசு அவர்களீடம் ஏற்கனவே, யாராவது உங்களை நிராகரித்தால், உங்கள் காலனிகளில உள்ள தூசை தட்டிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். இயேசு என்ன சொன்னாரோ, அதனை தன் வாழ்வில் கடைபிடித்தார். அந்த சமாரியர்களிடமிருந்து, ஒதுங்கி வேறு இடத்திற்கு  சென்றார்.  இயேசுவின் நம்பிக்கைகளை, அந்த கிராமத்தினரிடம் தினிக்க விரும்பவில்லை. அவர்களுக்கு தேவையான  நீதிகளை இயேசுவால் போதித்திருக்க முடியும்.  ஆனால் இயேசு அதனை செய்யவில்லை.

இயேசுவின் பின் செல்ல நாம் அதிகம் விட்டு கொடுக்க வேண்டும். நம்மை நிராகரிப்பவர்களின் மேல், உள்ள கோபத்தையும், விட்டு விட வேண்டும்.  நம் எண்ணத்திற்கு, நாம் ஏன் கட்டுபாடுகளை கொண்டு வர வேண்டும்.? நம் காலணிகளில் உள்ள தூசை தட்டிவிடுவது என்றால், நமது மகிழ்ச்சியை, குலைக்கும் எதையும்  நாம் தூர எறிந்துவிட வேண்டும்.


இந்த நற்செய்தியின், முடிவில், இயேசு, அவரை பின் செல்வது என்பது முன்னோக்கி தான் பார்க்கவேண்டும், திரும்பி பார்க்க கூடாது. என்று கூறுகிறார். நாம் எப்பொழுதுமே, ஏதாவது ஒரு இடத்தில் இருந்து ஒதுங்கி , நிராகரிப்பிலிருந்திலிருந்து, அன்பில்லாதவர்களிடமிருந்தும், தனது இதயத்தை மூடியே வைத்திருப்பவர்களிடமிருந்தும். விலகியே செல்ல விரும்புகிறோம். அங்கிருந்து விலகி கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்க செல்கிறோம்.

முன்னோக்கி செல்ல, பரிசுத்த ஆவிதான் நமது இதயத்தை தயார் செய்து, இயேசுவை நம்மில் வரவேற்க ஆயத்துபடுத்துவார் என்பதை நினைவில் கொள்வோம். நாம் சிலருக்கு இயேசுவை கொண்டு வர, முயற்சி செய்து, அதில் தோற்றால், உண்மையிலேயே, நாம் தோற்கவில்லை, இப்பொழுது தான் நாம் விதையை விதைக்கிறோம், பரிசுத்த ஆவியானவர், அறுவடை செய்யும் வேலையை செய்யட்டும், நாம் அடுத்த வயலுக்கு செல்வோம்.

© 2013 by Terry A. Modica


Friday, June 21, 2013

ஜுன் 23, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுன் 23, 2013 ஞாயிறு  நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 12ம் ஞாயிறு
Zec 12:10-11; 13:1
Ps 63:2-6, 8-9
Gal 3:26-29
Luke 9:18-24

லூக்கா நற்செய்தி
அதிகாரம் 9:18-24
இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை
(மத் 16:13 - 19; மாற் 8:27 - 29)
18 இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' என்று அவர் கேட்டார்.19 அவர்கள் மறுமொழியாக, ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர் ' என்றார்கள்.20 ' ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்? ' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ' நீர் கடவுளின் மெசியா ' என்று உரைத்தார்.21 இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல்
(மத் 16:20 - 28; மத் 8:30; 9:1)
22 மேலும் இயேசு, ' மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் ' என்று சொன்னார்.23 பின்பு அவர் அனைவரையும் நோக்கி, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.24 ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.

(thanks to www.arulvakku.com)

“நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?”  இந்த கேள்வியை தான் இன்றைய ஞாயிறின் நற்செய்தியில் நம்மை நோக்கியும் எழுப்படுகிறது: உங்கள் வாழ்க்கை, இயேசு தான் கடவுள், மெசியா, மீட்பர் என்று உரத்து சொல்கிறதா? அவர் தான் அன்பின் வடிவம், போதகர், மேய்ப்பர் என்று உங்கள் வாழ்க்கை மூலமாக காட்டுகிறீர்களா? ஒவ்வொரு தருணத்திலும் இது நடக்கிறதா?

உங்கள் வாழ்வு நன்றாக இருக்கும்பொழுது, இயேசு தான், இவ்வாழ்க்கையை ஆசிர்வதித்து கொடுத்துள்ளார் என எல்லோரிடமும் சொல்கிறீர்களா? நீங்கள் மற்றவரால் காயப்படும்பொழுது, இயேசு உங்கள் மன வேதனையை, வலியை எடுத்து கொண்டார் , காயப்படுத்தியவரின் பாவத்தை இயேசு சிலுவைக்கு எடுத்து சென்றார் என்று எல்லோருக்கும் தெரியும்படி நடந்து கொள்கிறீர்களா?

வாயால் இயேசு தான் நமது கடவுள் என்று சொன்னாலும், நமது வாழ்வு அதற்கு எதிர்மாறாக நடந்து கொள்கிறோம். நமது நடத்தையின் மூலம், நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை முறையாக கவனத்துடன் நடந்து காமிக்க வேண்டும். தெளிவுடனும், வெளிப்படையாகவும், நமது செயல்களும், வாழ்வும் நடந்திட வேண்டும். எங்கே  நாம் தவறி விடுகிறோம் என்பதை கவனமாக பார்க்க வேண்டும். நம் உள்ளே உள்ள மன வலியாலும், பயத்தினாலும், ஆறாத வடுக்கலாலும் தான் நாம் பாவம் செய்கிறோம். அதனால் ஏற்படும் எதிர்வினையால் தான் நாம் பாவம் செய்கிறோம். நமது நடத்தையில் உள்ள குறியீடுகளை, துப்புகளை உற்று நோக்கி, அதனை பரிசோதித்து, நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம், இயேசு உண்மையிலேயே யார் என்பதனை அறிந்து, அவர் கொடுக்கும் அன்பை அனுபவித்து, நமது குறைகளை நீக்கும் வாய்ப்பிற்காக நாம் உபயோகிப்போம்.


“என் வாழ்வு உண்மையாகவே இயேசுவை உலகிற்கு காட்டுகிறதா? இந்த கேள்வியை நாம் தினமும் நாம் கேட்டு கொள்ள வேண்டும். அதன் பதில், நாம் எந்த விசயத்தில், அதிகம் கவனம் கொள்ள வேண்டும். என்பதை தெரியபடுத்தும். இதன் மூலம் நாம் ஏன் இன்னும் முழுமையாக மனம் திரும்பவில்லை என்பதையும் தெரியபடுத்தும். நமது வாழ்வு ஒன்றாகவும் வார்த்தை வேறாகவும் இருக்கும் பொழுது, நமது வார்த்தைகளை மக்கள் நம்புவதில்லை.

இயேசு யார்? உங்களை அவருக்கு மிகவும் நெருங்கிய உறவினர் போன்றும், உங்களை முழுதும் அக்கறை கொண்டவருமாக இருக்கிறார். உங்களுக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ, உங்களை முழுதும் அன்பு செய்கிறார். மேலும் எப்பொழுதுமே உங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். அதனை நீங்கள் கண்டு அறியாமல் இருக்கும்பொழுதும், உங்களுக்கு உதவி செய்கிறார். உங்களை எப்பொழுதுமே ஒதுக்கியதில்லை.
இதனை நாம் ஓரளவிற்கு நம்பினாலும், எவ்வளவு கஷ்டமான சூழ் நிலை இருந்தாலும், அவரோடு இருக்கும்போது, நாம் பாதுகாப்பாக உணர்கிறோம். அவரின் உண்மையான அன்பை அறிந்து கொண்டு, அவரோடு நெருக்கத்துடன் இருக்கும் வாய்ப்பை உருவாக்கி கொண்டு, நமது அனுதின சிலுவையை சுமந்து கொண்டு, மற்றவர்களை அன்பு செய்து, அவர் பின் செல்வோம் .
© 2013 by Terry A. Modica


Saturday, June 15, 2013

ஜூன் 16, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 16, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 11ம் ஞாயிறு
2 Sam 12:7-10, 13
Ps 32:1-2, 5, 7, 11
Gal 2:16, 19-21
Luke 7:36–8:3
லூக்கா நற்செய்தி
பாவியான ஒரு பெண் நறுமணத் தைலம் பூசுதல்
(மத் 26:6 - 13; மாற் 14:3 - 9; யோவா 12:1 - 8)
36 பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.37 அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார்.38 இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.39 அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, ' இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே ' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.40 இயேசு அவரைப் பார்த்து, ' சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும் ' என்றார். அதற்கு அவர், ' போதகரே, சொல்லும் ' என்றார்.41 அப்பொழுது அவர், 'கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். 42 கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்? ' என்று கேட்டார்.43 சீமோன் மறுமொழியாக, ' அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன் ' என்றார். இயேசு அவரிடம், ' நீர் சொன்னது சரியே ' என்றார்.44 பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், ' இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார்.45 நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார்.46 நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.47ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்; இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர் ' என்றார்.48பின்பு அப்பெண்ணைப் பார்த்து, ' உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன 'என்றார்.49 ' பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்? ' என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.50இயேசு அப்பெண்ணை நோக்கி, ' உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க ' என்றார்.

இயேசுவின் பெண் சீடர்கள்
1 அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர்.2 பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்3 ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
(thanks to www.arulvakku.com)

நீங்கள் எப்போதாவது உங்கள் பாவங்கள் எப்படி மன்னிக்கபடுகின்றன? என்று நினைத்து பார்த்தது உண்டா? நாம் எப்படி பாவ நிலையிலிருந்து ,  நியாய வாழ்வில் எப்படி மாறுகிறோம். நியாய வாழ்வு என்பது “ஓரளவிற்கு, நியாயமாகவும்” என்று அர்த்தம் கொள்ளலாம். ஏனெனில், சில நேரங்களில் நாம் தவறாக நடந்து விடுகிறோம். இயேசு மிகவும் பரிசுத்தமானவர், மிகவும் சரியான ஒருத்தர், நம் பாவங்களை சிலுவையில் எடுத்து சென்றார். அநியாயங்கள் எல்லாம், அங்கேயே இறந்துவிட்டன.
நீதி என்பது ஒரு சட்டத்தின் வார்த்தை ஆகும். இன்றைய நற்செய்தியோ, ‘சட்டத்தினால், பாவங்களை மன்னிக்க முடியாது; நம் பாவங்கள்   இயேசுவின் மீது நம்பிக்கையினால் மட்டுமே மன்னிப்பு பெற முடியும் “ என்று கூறுகிறது. ஒருவேளை சட்டத்தினால் மட்டுமே மன்னிப்பென்றால், இயேசு எதற்காக சிலுவையில் இறந்தார்.
இன்றைய நற்செய்தியில், இயேசு இதனை விளக்கி சொல்கிறார். பாவப்பட்ட பெண், அவளுடைய கண்ணீரால் இயேசுவின் பாதங்களை கழுவினார். அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. அவரின் மிகுந்த அன்பினால், அவரின் பாவங்கள் மன்னிக்கபட்டன. பாவங்களின் சக்தியிலிருந்து, மீள அன்பினால் மட்டுமே முடியும். அன்பினால் மட்டுமே நியாயமாக வாழ முடியும்.
நாம் எப்பொழுதும் அன்புடன் இருக்க தான் ஆசைபடுகிறோம், ஆனால் பாவத்தில் விழுந்து விடுகிறோம். சில நேரங்களில், மற்றவர்களை காயபடுத்துகிறோம், என்று  நாம் அறியாமலே பாவத்திற்கு விழுகிறோம்.
நாம் இயேசுவின் மேல் பார்வையை எடுத்து விடும் நேரத்தில், நாம் பாவம் செய்கிறோம். நம்முடைய கடந்த காலத்திலும், இப்பொழுதும் உள்ள எழுச்சியும், ஊக்கத்தாலும், நாம் உடனே எதிர்ப்பாக செயல்படுகிறோம். ஆனால், இயேசுவிடம் ஜெபம் செய்ய அதிக காலம் எடுத்து கொண்டால், அவரோடு இனைய முயற்சி எடுக்காமல் இருந்தால், நாம் நம்மையே கன்ட்ரோல் செய்கிறோம். ஆனால் நாமே, அன்பு செய்ய முயற்சிக்கலாம்.
நாம் அன்பை மட்டுமே நம்முடைய முதல் ப்ரதானமாக ஆக்க முயலும்பொழுது, நம் பாவம் செய்ய தூண்டும் ஆர்வம் குறைந்து விடும். மற்றவர்கள் மேல் அக்கறை கொள்வதால், நம் பாவ தூண்டல்கள் கொஞ்சம் குறையும். நம் பாவத்தின் மூலமாக மற்றவர்களை காயப்படுத்திவிட்டோமோ என்று நாம் நினைத்துவிட்டால், அல்லது கண்டுபிடித்து விட்டால், அன்பினால், நாம் அதனை அந்த காயத்தை குறைக்க முடியும்.  அதன் மூலம், கடவுளின்  நீதி தீர்ப்புக்குள் நம்மால் நுழைய முடியும்.
இயேசுவை போலவே நாம் மற்றவர்களை அன்பு செய்தால், நமது விசுவாசம், நம் மீட்பாக மாறுகிறது. இன்றைய நற்செய்தியில் வரும் பெண்ணிற்கு சொன்னது போல, “' உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க” என்று யேசு நம்மிடமும் சொல்கிறார்

© 2013 by Terry A. Modica