ஜூன் 16, 2013 ஞாயிறு
நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 11ம் ஞாயிறு
2 Sam 12:7-10, 13
Ps 32:1-2, 5, 7, 11
Gal 2:16, 19-21
Luke 7:36–8:3
Ps 32:1-2, 5, 7, 11
Gal 2:16, 19-21
Luke 7:36–8:3
லூக்கா நற்செய்தி
பாவியான ஒரு பெண் நறுமணத் தைலம் பூசுதல்
(மத் 26:6 - 13; மாற் 14:3 - 9; யோவா 12:1 - 8)
(மத் 26:6 - 13; மாற் 14:3 - 9; யோவா 12:1 - 8)
36 பரிசேயருள்
ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப்
போய்ப் பந்தியில் அமர்ந்தார்.37 அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார்.
இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத்
தெரியவந்தது. உடனே நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார்.38 இயேசுவுக்குப்
பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம்
கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில்
நறுமணத் தைலம் பூசினார்.39 அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, ' இவர் ஓர்
இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று
அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே ' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.40 இயேசு
அவரைப் பார்த்து, ' சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும் ' என்றார்.
அதற்கு அவர், ' போதகரே, சொல்லும் ' என்றார்.41 அப்பொழுது அவர், 'கடன்
கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக
இருவர் கடன்பட்டிருந்தனர்.
42 கடனைத்
தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார்.
இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்? ' என்று கேட்டார்.43 சீமோன்
மறுமொழியாக, ' அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன் '
என்றார். இயேசு அவரிடம், ' நீர் சொன்னது சரியே ' என்றார்.44 பின்பு
அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், ' இவரைப் பார்த்தீரா? நான்
உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை;
இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார்.45 நீர்
எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல்
முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார்.46 நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை;
இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.47ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்;
இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு
கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்
' என்றார்.48பின்பு அப்பெண்ணைப் பார்த்து, ' உம் பாவங்கள்
மன்னிக்கப்பட்டன 'என்றார்.49 ' பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்? ' என்று
அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.50இயேசு
அப்பெண்ணை நோக்கி, ' உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க ' என்றார்.
இயேசுவின் பெண் சீடர்கள்
1 அதற்குப்பின்
இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி
வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர்.2 பொல்லாத ஆவிகளினின்றும்
நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா
மரியாவும்3 ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும்
சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக்
கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
(thanks to www.arulvakku.com)
நீங்கள் எப்போதாவது உங்கள்
பாவங்கள் எப்படி மன்னிக்கபடுகின்றன? என்று நினைத்து பார்த்தது உண்டா? நாம் எப்படி
பாவ நிலையிலிருந்து , நியாய வாழ்வில்
எப்படி மாறுகிறோம். நியாய வாழ்வு என்பது “ஓரளவிற்கு, நியாயமாகவும்” என்று அர்த்தம்
கொள்ளலாம். ஏனெனில், சில நேரங்களில் நாம் தவறாக நடந்து விடுகிறோம். இயேசு மிகவும்
பரிசுத்தமானவர், மிகவும் சரியான ஒருத்தர், நம் பாவங்களை சிலுவையில் எடுத்து
சென்றார். அநியாயங்கள் எல்லாம், அங்கேயே இறந்துவிட்டன.
நீதி என்பது ஒரு சட்டத்தின் வார்த்தை
ஆகும். இன்றைய நற்செய்தியோ, ‘சட்டத்தினால், பாவங்களை மன்னிக்க முடியாது; நம்
பாவங்கள் இயேசுவின் மீது நம்பிக்கையினால் மட்டுமே மன்னிப்பு
பெற முடியும் “ என்று கூறுகிறது. ஒருவேளை சட்டத்தினால் மட்டுமே மன்னிப்பென்றால்,
இயேசு எதற்காக சிலுவையில் இறந்தார்.
இன்றைய நற்செய்தியில், இயேசு
இதனை விளக்கி சொல்கிறார். பாவப்பட்ட பெண், அவளுடைய கண்ணீரால் இயேசுவின் பாதங்களை
கழுவினார். அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. அவரின் மிகுந்த அன்பினால், அவரின்
பாவங்கள் மன்னிக்கபட்டன. பாவங்களின் சக்தியிலிருந்து, மீள அன்பினால் மட்டுமே
முடியும். அன்பினால் மட்டுமே நியாயமாக வாழ முடியும்.
நாம் எப்பொழுதும் அன்புடன்
இருக்க தான் ஆசைபடுகிறோம், ஆனால் பாவத்தில் விழுந்து விடுகிறோம். சில நேரங்களில்,
மற்றவர்களை காயபடுத்துகிறோம், என்று நாம்
அறியாமலே பாவத்திற்கு விழுகிறோம்.
நாம் இயேசுவின் மேல் பார்வையை
எடுத்து விடும் நேரத்தில், நாம் பாவம் செய்கிறோம். நம்முடைய கடந்த காலத்திலும்,
இப்பொழுதும் உள்ள எழுச்சியும், ஊக்கத்தாலும், நாம் உடனே எதிர்ப்பாக
செயல்படுகிறோம். ஆனால், இயேசுவிடம் ஜெபம் செய்ய அதிக காலம் எடுத்து கொண்டால்,
அவரோடு இனைய முயற்சி எடுக்காமல் இருந்தால், நாம் நம்மையே கன்ட்ரோல் செய்கிறோம்.
ஆனால் நாமே, அன்பு செய்ய முயற்சிக்கலாம்.
நாம் அன்பை
மட்டுமே நம்முடைய முதல் ப்ரதானமாக ஆக்க முயலும்பொழுது, நம் பாவம் செய்ய தூண்டும்
ஆர்வம் குறைந்து விடும். மற்றவர்கள் மேல் அக்கறை கொள்வதால், நம் பாவ தூண்டல்கள்
கொஞ்சம் குறையும். நம் பாவத்தின் மூலமாக மற்றவர்களை காயப்படுத்திவிட்டோமோ என்று
நாம் நினைத்துவிட்டால், அல்லது கண்டுபிடித்து விட்டால், அன்பினால், நாம் அதனை அந்த
காயத்தை குறைக்க முடியும். அதன் மூலம்,
கடவுளின் நீதி தீர்ப்புக்குள் நம்மால்
நுழைய முடியும்.
இயேசுவை
போலவே நாம் மற்றவர்களை அன்பு செய்தால், நமது விசுவாசம், நம் மீட்பாக மாறுகிறது.
இன்றைய நற்செய்தியில் வரும் பெண்ணிற்கு சொன்னது போல, “' உமது நம்பிக்கை உம்மை
மீட்டது; அமைதியுடன் செல்க” என்று யேசு நம்மிடமும் சொல்கிறார்
© 2013 by Terry A. Modica
No comments:
Post a Comment