Friday, June 21, 2013

ஜுன் 23, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுன் 23, 2013 ஞாயிறு  நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 12ம் ஞாயிறு
Zec 12:10-11; 13:1
Ps 63:2-6, 8-9
Gal 3:26-29
Luke 9:18-24

லூக்கா நற்செய்தி
அதிகாரம் 9:18-24
இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை
(மத் 16:13 - 19; மாற் 8:27 - 29)
18 இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' என்று அவர் கேட்டார்.19 அவர்கள் மறுமொழியாக, ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர் ' என்றார்கள்.20 ' ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்? ' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ' நீர் கடவுளின் மெசியா ' என்று உரைத்தார்.21 இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல்
(மத் 16:20 - 28; மத் 8:30; 9:1)
22 மேலும் இயேசு, ' மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் ' என்று சொன்னார்.23 பின்பு அவர் அனைவரையும் நோக்கி, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.24 ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.

(thanks to www.arulvakku.com)

“நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?”  இந்த கேள்வியை தான் இன்றைய ஞாயிறின் நற்செய்தியில் நம்மை நோக்கியும் எழுப்படுகிறது: உங்கள் வாழ்க்கை, இயேசு தான் கடவுள், மெசியா, மீட்பர் என்று உரத்து சொல்கிறதா? அவர் தான் அன்பின் வடிவம், போதகர், மேய்ப்பர் என்று உங்கள் வாழ்க்கை மூலமாக காட்டுகிறீர்களா? ஒவ்வொரு தருணத்திலும் இது நடக்கிறதா?

உங்கள் வாழ்வு நன்றாக இருக்கும்பொழுது, இயேசு தான், இவ்வாழ்க்கையை ஆசிர்வதித்து கொடுத்துள்ளார் என எல்லோரிடமும் சொல்கிறீர்களா? நீங்கள் மற்றவரால் காயப்படும்பொழுது, இயேசு உங்கள் மன வேதனையை, வலியை எடுத்து கொண்டார் , காயப்படுத்தியவரின் பாவத்தை இயேசு சிலுவைக்கு எடுத்து சென்றார் என்று எல்லோருக்கும் தெரியும்படி நடந்து கொள்கிறீர்களா?

வாயால் இயேசு தான் நமது கடவுள் என்று சொன்னாலும், நமது வாழ்வு அதற்கு எதிர்மாறாக நடந்து கொள்கிறோம். நமது நடத்தையின் மூலம், நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை முறையாக கவனத்துடன் நடந்து காமிக்க வேண்டும். தெளிவுடனும், வெளிப்படையாகவும், நமது செயல்களும், வாழ்வும் நடந்திட வேண்டும். எங்கே  நாம் தவறி விடுகிறோம் என்பதை கவனமாக பார்க்க வேண்டும். நம் உள்ளே உள்ள மன வலியாலும், பயத்தினாலும், ஆறாத வடுக்கலாலும் தான் நாம் பாவம் செய்கிறோம். அதனால் ஏற்படும் எதிர்வினையால் தான் நாம் பாவம் செய்கிறோம். நமது நடத்தையில் உள்ள குறியீடுகளை, துப்புகளை உற்று நோக்கி, அதனை பரிசோதித்து, நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம், இயேசு உண்மையிலேயே யார் என்பதனை அறிந்து, அவர் கொடுக்கும் அன்பை அனுபவித்து, நமது குறைகளை நீக்கும் வாய்ப்பிற்காக நாம் உபயோகிப்போம்.


“என் வாழ்வு உண்மையாகவே இயேசுவை உலகிற்கு காட்டுகிறதா? இந்த கேள்வியை நாம் தினமும் நாம் கேட்டு கொள்ள வேண்டும். அதன் பதில், நாம் எந்த விசயத்தில், அதிகம் கவனம் கொள்ள வேண்டும். என்பதை தெரியபடுத்தும். இதன் மூலம் நாம் ஏன் இன்னும் முழுமையாக மனம் திரும்பவில்லை என்பதையும் தெரியபடுத்தும். நமது வாழ்வு ஒன்றாகவும் வார்த்தை வேறாகவும் இருக்கும் பொழுது, நமது வார்த்தைகளை மக்கள் நம்புவதில்லை.

இயேசு யார்? உங்களை அவருக்கு மிகவும் நெருங்கிய உறவினர் போன்றும், உங்களை முழுதும் அக்கறை கொண்டவருமாக இருக்கிறார். உங்களுக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ, உங்களை முழுதும் அன்பு செய்கிறார். மேலும் எப்பொழுதுமே உங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். அதனை நீங்கள் கண்டு அறியாமல் இருக்கும்பொழுதும், உங்களுக்கு உதவி செய்கிறார். உங்களை எப்பொழுதுமே ஒதுக்கியதில்லை.
இதனை நாம் ஓரளவிற்கு நம்பினாலும், எவ்வளவு கஷ்டமான சூழ் நிலை இருந்தாலும், அவரோடு இருக்கும்போது, நாம் பாதுகாப்பாக உணர்கிறோம். அவரின் உண்மையான அன்பை அறிந்து கொண்டு, அவரோடு நெருக்கத்துடன் இருக்கும் வாய்ப்பை உருவாக்கி கொண்டு, நமது அனுதின சிலுவையை சுமந்து கொண்டு, மற்றவர்களை அன்பு செய்து, அவர் பின் செல்வோம் .
© 2013 by Terry A. Modica


No comments: