ஜூலை 28, 2013 ஞாயிறு
நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 17ம் ஞாயிறு
Gen 18:20-32
Ps 138:1-3, 6-8
Col 2:12-14
Luke 11:1-13
Ps 138:1-3, 6-8
Col 2:12-14
Luke 11:1-13
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 11:1-13
இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தல்
(மத் 6:9 - 15; 7:7 - 11)
(மத் 6:9 - 15; 7:7 - 11)
1 இயேசு
ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள்
ஒருவர் அவரை நோக்கி, ' ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்
கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும் ' என்றார்.2 அவர்
அவர்களிடம், ' நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்;
தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக!3 எங்கள் அன்றாட
உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.4 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர்
அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச்
சோதனைக்கு உட்படுத்தாதேயும். (தீயோனிடமிருந்து எங்களை
விடுவித்தருளும்)' என்று கற்பித்தார்.
5மேலும் அவர் அவர்களை
நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ' உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில்
சென்று, ' நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு.6 என்னுடைய நண்பர்
ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க
என்னிடம் ஒன்றுமில்லை ' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.7 உள்ளே இருப்பவர்,
' எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும்
என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது '
என்பார்.8 எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால்
அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின்
பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச்
சொல்கிறேன்.9 ' மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள்,
உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள்
உங்களுக்குத் திறக்கப்படும்.10ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்;
தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.11 பிள்ளை மீனைக்
கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா?
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இயேசு,
விசுவாசத்துடன் ஜெயிப்பது எப்படி என்று நமக்கு சொல்லி கொடுக்கிறார். அவர் சொல்வதை
கவனமாக கேட்டால், நாம் கேட்பதையெல்லாம், நாம் பெறமுடியும் என்று அவர் சொல்லவில்லை.
எல்லாமே நமக்கு நல்லதில்லைல் “ப்ரெட்” அதனை கொண்டு தான் இந்த நற்செய்தி பரிசுத்த
வாழ்வை பற்று கூறுகிறது, இயேசு தான் வாழ்வின் உணவு. பரிசுத்த ஆவியின் அன்பளிப்பு,
வாழ்க்கை கொடுத்தவர், பரிசுத்த வாழ்வை கொடுத்தவர், இயேசு தான். இந்த உவமையில்,
வரும் நன்பன் கூட, புதியவர் அல்ல, பக்கத்து விட்டு காரர் தான். அவரின் நண்பனோடு
உணவை பகிரிந்து கொள்ள விரும்பினார். ஞாணஸ நானம் பெற்ற கிறிஸ்தவர்கள் கடவுளின்
நட்பை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும். (“மூன்று ப்ரெட் துண்டுகள்” –
திரித்துவ கடவுள்) ஆனால், அவரோ, அவளோ பகிர்ந்து கொள்ள முழுமையான தகுதியுடன் இல்லை.
நமது குறைகளுக்காக, கடவுளின்
இதயத்தை தொட்டால், அவரின் உதவியை கேட்டால், தந்தை கடவுள் நாம் முழுமையாக இருக்க
உதவி செய்வார். பரிசுத்த ஆவியை நமக்கு தருகிறார். அது மட்டுமில்லை, நாம் ஜெபிக்கும் போதெல்லாம், பரிசுத்த ஆவி
நம்மை தந்தை கடவுளோடும், இயேசுவோடும், நம்மை இனைக்கிறார். அதனால், ஒவ்வொரு
ஜெபமும், நம்மை இன்னும்
பரிசுத்தமாக்குகிறது. நம்மை இன்னும் கடவுளிடம் நெருங்கி வர செய்கிறது, இயேசுவை போல
வாழ நமக்கு ஆற்றல் வழங்குகிறது. பரிசுத்த வாழ்வு அவ்வளவு சுலபமானதில்லை. மேலும்
உடனே வந்து விடுவதில்லை. இடைவிடாது நமது ஜெப வாழ்வில் தொடர்ந்து ஈடுபட்டால்
தான், நம்மால் பரிசுத்த வாழ்வில் வாழ
முடியும். கடவுளின் பரிசுத்த ஆவியை நம்பி, நமது சோதனைகளை தாண்டி , விசுவாசத்தில்
வளர வேண்டும்.
நாம் கடவுளிடம் எது கேட்டாலும்,
இவ்வுலக பொருட்களை கேட்டாலும், கடவுள் அதன் மூலம், நமது ஆண்மாவை வளர்க்க உதவ அந்த
வேண்டுதலை உபயோகிக்கிறார். நம்முடைய ஜெபத்தில், “எங்கள் அனுதின உணவை எங்களுக்கு
இன்று அளித்தருளூம்” என்று வேண்டுகிறோம்.
இடைவிடாது, ஜெபியுங்கள். ஒரே ராத்திரியில்,கடவுளின் ப்ரெட் நமக்கு கிடைத்துவிடாது,
(நாம் மிகவும் மெதுவாக கற்று கொள்கிறோம்)
நாம் கேட்பதையெல்லாம் உடனே
கிடைத்துவிடும் என்று நம்முள் ஆசையை விதைப்பது சாத்தானில் வேலையாகும். இந்த கால
முறைகள், விரைவு உணவகம் போன்றது. அந்த உணவில் உடலுக்கு ஒவ்வாத விசயங்கள் பல
இருக்கும். பரிசுத்த ஆவியின் மூலம் தான் நாம் பரிசுத்த வாழ்வில் வளர முடியும்.
பரிசுத்த வாழ்வில் வளர்ந்திட அதிகம் கடினப்பட வேண்டியிருப்பதால், பலர் சுல்பமான
வழிக்கு செல்கின்றனர்.
தெய்வீகமான, போதுமான பரிசுத்த
ஆவியின் கொடை நம்மிடம் இருக்கிறது. ஏனெனில், நாம் ஞாணஸ்நாணத்தில் பரிசுத்த ஆவியை
பெற்றுள்ளோம். எனினும், கடவுளின் தெய்வீகத்தில், அதன் ஆற்றலில், வாழ, நாம்
இடைவிடாது, ஜெபித்து, நமது பாவங்களை கண்டுணர்ந்து, மணப்பூர்வமாக மணம் மாறி , நமது
சுய நலத்திற்கான காரண காரியங்களை அகற்றி,
, பரிசுத்த ஆவியின் தூய நிலைக்கு, நம்மை ஏற்று கொள்ள வேண்டும்.
© 2013 by Terry A. Modica