ஜூலை 21 2013 ஞாயிறு
நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 16ம் ஞாயிறு
Gen 18:1-10a
Ps 15:1-5
Col 1:24-28
Luke 10:38-42
Ps 15:1-5
Col 1:24-28
Luke 10:38-42
லூக்கா நற்செய்தி
மார்த்தா மரியாவைச் சந்தித்தல்
38 அவர்கள்
தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண்
ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா.39 அவருக்கு
மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து
அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.40 ஆனால் மார்த்தா பற்பல பணிகள்
புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ' ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி
என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி
அவளிடம் சொல்லும் ' என்றார்.41 ஆண்டவர் அவரைப் பார்த்து, ' மார்த்தா,
மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.42 ஆனால்
தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது
அவளிடமிருந்து எடுக்கப்படாது 'என்றார்.
(Thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில்,
இயேசு நம்முடைய கவலைகளையும்,
கலக்கங்களையும் பற்றி பேசுகிறார். அவைகள்
நம்மை வேறு பாதைக்கு அழைத்து செல்கின்றன. அவைகள் நம்மை கட்டுபடுத்த ஆரம்பித்தால்,
அவைகள் நம் வாழ்வை பாதிக்க கூடியவை, ஏனெனில், நம் கண்களை ஆண்டவரை நோக்கி அல்லாமல்,
வேறு பக்கம் திருப்பிவிடும். அதனால், எந்த தவறு நடக்க போகிறது, அதனால் இன்னும்
துன்பம் இன்னும் மிகுதியாகும் என்ற கவலைக்கு உள்ளாகிறோம்.
மரியா நல்ல ப்ங்கை
தேர்ந்துகொண்டாள். இயேசுவின் உண்மையான சீடராக எதுவும் அவரை தொந்தரவு செய்யாமல்,
இயேசுவிடமிருந்து அவரின் போதனைகளை கற்று கொண்டார். நமது வாழ்வின் முக்கிய
அலுவல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அமைதியாக அமர்ந்து, இயேசுவிடமிருந்து கற்று
கொள்வோம். அதன் மூலம், நமது கவலைகள் பற்றி உண்மையாக நாம் அக்கறை கொள்ள
வேண்டியதில்லை என்பதனை நம்மால் அறிய முடியும்.
இயேசுவின் காலடியில் அமர்ந்து,
அமைதியாக அவரிடம் கற்று தேர்ந்தால் தான், நமது கலக்கத்தையும் போக்கி, நமது சோதனைகளின் மூலம் ஞானத்தையும் பெறுவோம்.
சின்ன சின்ன கவலைகள் கூட, மார்த்தாவை போல, சமையல் செய்ய முடியவில்லையே என்று
கவலைபடுவது, பாவமாகும், ஏனெனில், அது நம்மை இயேசுவின் பார்வையிலிருந்து விலகி
வைக்கிறது. இயேசுவை விட்டு விலக வைக்க எந்த தொந்தரவும், நமக்கு நல்லதல்ல.
இயேசுவை நாம் பார்த்து,
அவரிடமிருந்து பரிசுத்த வாழ்வது எப்படி என்று தெரிந்து கொள்ளாவிட்டால், நாம்
பரிசுத்த வாழ்வில் வாழமுடியாது. நாம் அமைதியாக ஜெப வாழ்வில் நிலைத்து,
இயேசுவோடு நேரம் செலவிட்டால் தான், இயேசு
அன்பு செய்தது போல, நாமும் அன்பு செய்ய முடியும். அவர் போதனைகளை உள்வாங்கி , அவர்
வாழ்வை நாம் அரவனைத்து செல்ல முடியும். கோவிலிலும், மற்ற சில நேரங்களிலும் ஜெபம்
செய்வது மட்டும் போதாது, கவலைகளும், கலக்கமும் பயத்தை கண்டிப்பாக கொண்டு
வந்துவிடும். ஏதாவது, பெரிய துன்பம் வந்துவிடும் என்று பயந்து விடுகிறோம். உண்மையான காரணமாக
இருந்தாலும், , இந்த பயம், நமது பார்வை யேசுவின் மேல் இல்லாமல் செய்துவிடும்.
இதனால், நாம் இயேசுவை விட்டு விலக ஒரு வாய்ப்பாகும். இந்த பயம் ஒரு சிக்னல் ஆக
நமக்கு இருக்கிறது. அதனால், அமைதியாக கலக்கம் எதுவும் இன்றி, இயேசுவோடு அமர்ந்து,
அவரோடு பேசி, நமது ப்ரச்சினைகளை சொல்ல வேண்டும். அவரிடம் அதற்கான பதில் இருக்கிறது.
உற்சாகமாக அதனை கொடுத்து, அமைதி கண்டிப்பாக வரும் என்ற உறுதியையும் கொடுப்பார்.
© 2013 by Terry A. Modica
No comments:
Post a Comment