ஜூலை 14, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 15ம் ஞாயிறு
Deut 30:10-14
Ps 69:14, 17, 30-31, 33-34, 36-37 or Ps 19:8-11
Col 1:15-20
Luke 10:25-37
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 10:25-37
நல்ல சமாரியர்
25 திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச்
சோதிக்கும் நோக்குடன், ' போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
' என்று கேட்டார்.26 அதற்கு இயேசு, ' திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது?
அதில் நீர் என்ன வாசிக்கிறீர்? ' என்று அவரிடம் கேட்டார்.27 அவர் மறுமொழியாக,
' உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன்
கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர்
மீதும் அன்பு கூர்வாயாக ' என்று எழுதியுள்ளது ' என்றார்.28இயேசு, ' சரியாய்ச்
சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர் 'என்றார்.29 அவர், தம்மை நேர்மையாளர்
எனக் காட்ட விரும்பி, ' எனக்கு அடுத்திருப்பவர் யார்? ' என்று இயேசுவிடம் கேட்டார்.30 அதற்கு
அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: ' ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது
கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக்
குற்றுயிராக விட்டுப் போனார்கள்.31 குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார்.
அவர் அவரைக் கண்டதும் மறு பக்கம் விலகிச் சென்றார்.32 அவ்வாறே லேவியர் ஒருவரும்
அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.33 ஆனால்
அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது
பரிவு கொண்டார்.34அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து,
அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய்
அவரைக் கவனித்துக் கொண்டார்.35 மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம்
கொடுத்து, 'இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது
உமக்குத் தருவேன்' என்றார்.36 கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர்
என உமக்குத் தோன்றுகிறது? ' என்று இயேசு கேட்டார்.37 அதற்கு திருச்சட்ட அறிஞர்,
' அவருக்கு இரக்கம் காட்டியவரே ' என்றார். இயேசு, ' நீரும் போய் அப்படியே செய்யும்
' என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)
அன்பிற்கு எதிர்சொல் வெறுப்பது அல்ல. அக்கறையின்மை,
தேவையான பொழுது நிராகரிப்பது, சில நேரங்களில் நம்மால் செய்ய முடியும் என்றாலும், அதனை
செய்யாமலிருப்பது, அதனால், அவர்கள் வேதனையை தொடரவிடுவது ஆகும். இன்றைய நற்செய்தியில்,
இயேசு நல்ல சமாரியனினின் கதையை சொல்லி, முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன்
கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. என்று கூறுகிறார்.
இயல்பாகவே, நாம் மற்றவர்கள் மேல் அக்கறை கொள்கிறோம், நமக்கு தெரியாதவர்களிடம் கூட,
நாம் கனிவுடன் நடந்து கொள்கிறோம். நாம் யாருக்கும் அன்பு செய்ய கூடாதவர்களிடம் கூட
நாம் அன்பு செய்கிறோம்.
இன்றைய உலகின் நடக்கும் பல்வேறு
ப்ரச்சினைகளுக்கும், கிறிஸ்தவர்களாகிய நாம் தான் – கிறிஸ்துவின் மூலமாக நாம்
இவ்வுலகை மாற்ற ஆற்றல் பெற்றிருக்கிறோம் – நாம் நமது நேரத்தை தியாகம் செய்து, நமது
உள்ள ஆசைகளுக்கு தூர எறிந்து, இவ்வுலகில் மாற்றலாம். நாம் கடவுளை முழுமையாக நம்பி,
மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டு, நாம்
ப்ரச்சினைகளுக்கு தலையிட்டால், நம்
குடும்பத்தில் உள்ள ப்ரச்சினைகளும், வேலையிடத்தில் உள்ள துன்பங்களும், பங்கில்
உள்ள குழப்பங்களும் முடிவிற்கு வரும்.
கடவுளை நீங்கள் எவ்வளவு அன்பு
செய்கிறீர்கள்? இதற்கு பதில், மற்றவர்களை அன்பு செய்ய, எவ்வளவு தியாகம் நீங்கள்
செய்கீறீர்கள் என்பதில் இருக்கிறது. இதையே தான் கிறிஸ்து இன்றைய கதையில் நமக்கு
விளக்குகிறார்.
நம்மில் எல்லோருமே இன்னும் முழுமையாக கடவுளை அன்பு
செய்வதில்லை. உத்தரிக்கிற ஸ்தலத்தில், நாம் அன்பு செய்யாமல் இருந்த்ததற்கு மனம் வருந்துவோம்.மேலும்,
நம்மை சுற்றியுள்ளவர்கள் அனைவர் மேலும், இன்னும் முழுமையாக அன்பு செய்வோம். அதுவரைக்கும்,
நமக்கு தினமும் நம்மை இன்னும் தூய்மைபடுத்தி கொள்ள வரும் வாய்ப்புகளை உபயோகித்து, நம்மை
இந்னும் பரிசுத்தமாக்கி கொள்வோம். தினமும், அன்பு செய்ய பல வாய்ப்புகள் நமக்கு கிடைக்கின்றன, அதன் மூலம் நம்மால் அன்பு
செய்வதை முன்னேற்றுவோம்.
அதனால் தினமும், பரிசுத்த
ஆவியிடம்(நம் போதகர், நமக்கு ஆற்றல் கொடுப்பவர்,
நம்மை பரிசுத்தமாக்குபவர்) ஜெபம் செய்து, கிறிஸ்துவை போல மாற அவரிடம்
வேண்டுவோம். கிறிஸ்து மற்றவர்களை அன்பு செய்தது போல, நாமும் அன்பு செய்ய நமக்கு பரிசுத்த ஆவியானவர்
துனை புரிய வேண்டுவோம்.
இந்த பயிற்சியை தொடர்ந்து
செய்கிறபொழுது, நமக்கு புதிய சந்தோசமும், மற்றவர்களோடு, இனைந்து பழக நாம் புதிய உத்வேகத்துடன் செயல்படுவோம்.
அப்போது, கடவுளின் அன்பை முழுமையாக நம்மால் உணர முடியும், மேலும், அவருடன்
நெருக்கமாக இனைந்து செயல்பட முடியும்.
© 2013 by Terry A. Modica
No comments:
Post a Comment