Friday, November 15, 2013

நவம்பர் 17 2013 ஞாயிறு நற்செய்தி மறையுரை

நவம்பர் 17 2013 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு

Malachi 3:19-20a
Psalm 98:5-9
2 Thessalonians 3:7-12
Luke 21:5-19

லூக்கா நற்செய்தி

எருசலேம் கோவிலின் அழிவு பற்றி முன்னறிவித்தல்
(
மத் 24:1 - 2; மாற் 13:1 - 2)
கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.6இயேசு, ' இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் என்றார்.

வரப்போகும் கேடு பற்றி அறிவித்தல்
(
மத் 24:3 - 14; மாற் 13:3 - 13)
அவர்கள் இயேசுவிடம், ' போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? ' என்று கேட்டார்கள்.அதற்கு அவர், ' நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ' நானே அவர் ' என்றும், ' காலம் நெருங்கி வந்துவிட்டது ' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள்.ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது என்றார்.10 மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ' நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.11 பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.12 இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்.13 எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.14 அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.15 ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.16 ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள்.17 என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.18 இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.19 நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.
 (thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு, ' இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் என்றார். இவ்வுலகில் உள்ள அனைத்துமே நிரந்தமற்றவை என்பதை நமக்கு இயேசு எடுத்து உரைக்கிறார் .


இவ்வுலகில் நீங்கள் எதையெல்லாம் சந்தோசமாக அனுபவிக்கிறீர்கள் என்று பாருங்கள். இவை அனைத்துமே தற்காலிகமானது. உங்களுக்கு துக்கம் , துன்பம் தருவது எது, அதுவும் தர்காமானது தான். இவ்வுலகில் எந்த விசயங்களை , பொருளை நீங்கள் சார்ந்து இருக்கிறீர்கள். அதுவும் நிரந்தரமானது இல்லை. எதனை பார்த்து ஆச்சரியபடுகிரஈர்கள்?  எதற்காக நீங்கள் அதிக நேரம் செலவழித்து, உழைத்து பலன் பெறுகிறீர்கள்? அதுவும் தற்காலிகமானதே , இறையரசிர்காக இவை அனைத்தும் செய்யும்பொழுது, அவை  நிரந்தரமானது. பலன் தர கூடியது.

கடவுளை நோக்கியே நாம் எப்பொழுதும் இருக்க வேண்டும், என்று நமக்கு தெரியும். நித்திய வாழ்விற்கு தேவையானதையே நாம் செய்ய வேண்டும் என்றும் தெரியும். ஆனால், அதனை செய்வதில் நாம் அவ்வளவு விருப்பத்துடன் இருபதில்லை. கண்மூடி தனமான விசுவாசம் நம்மிடம் இருப்பதில்லை. கடவுள் அநியாயத்திற்கு எதிரான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும், இவ்வுலகில் தவறு செய்பவர்கள் துன்ப பட வேண்டும் என்று சீடர்கள் சிலர் கருதுவது போல நாம் இருக்கிறோம். போர்களும், கடும் நோய்களும், துன்பமும், தற்காலிக உலகில் நடப்பவை. இயேசு மீண்டும் இரண்டாம் முறை வந்து, இவ்வுலகில் உள்ள துன்பத்தையும், கடினமானதையும் போக்க வேண்டும். என நாம் ஆசைபடுகிறோம்.

நம் அனுதின நிகழ்வில், கடவுளின் உதவியை நாம் வேண்டுகிறோம். நாம் நம் விசுவாசத்தின் அடிப்படையில், கண்டிப்பாக நமக்கு உறுதியான பலன் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். எதிர்காலம் பற்றி அறிய நாம் ஆசைபடுகிறோம். கடவுள் என்ன நமக்கான என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்ற அறிய நாம் ஆவல் படுகிறோம். அதனை தெரியாமல் நாம் பாதுகாப்பற்ற நிலையில் இருக்க விரும்புபவதில்லை. நாம் நம் கண் முன்னே என்ன தெரியுதோ அதனை தான் நாம் சார்ந்து இருக்கிறோம். கடவுளை நம்புபவதை விட , அவர் கொடுப்பதை நம் கண் முன்னே நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

எனினும், கடவுளோடு இணைந்து நடப்பதற்கு முதலில் ஒரு அடியை எடுத்து வைக்க வேண்டும். அடுத்த அடியை எடுத்து வைக்க தயாராக இருக்க வேண்டும். அந்த கால் காற்றில் இருக்கும்பொழுதே , கடவுளே, எனது காலை எங்கே வைக்க வேண்டும். என்று நாம் கேட்க வேண்டும்.
இதற்கு நாம் நிதானமாக இருக்க வேண்டும்: கடவுளே சுற்றியே நம் எண்ணங்கள் இருக்க வேண்டும். சில நேரங்களில் குழம்பி நாம் விழுந்து விடுகிறோம். ஆனால் கடவுள் உடனே உங்களுக்கு பதில் கொடுக்க வில்லை என்றால். நாம் கிழே விழ வேண்டும், அல்லது கடவுளின் கைகளில் விழ வேண்டும். கடவுளின் கைகள் நிரந்தரமானது, அவர் கைகள் உங்களுக்க பாதுகாப்பை கொடுக்கும். அந்த பாதுகாப்பு முடிவில்லாதது, சக்துயுள்ளது, முழு அன்பு நிறைந்தது. அவரின் அன்பு, பாதுகாப்பும், என்றுமே தோற்றதில்லை.
© 2013 by Terry A. Modica



No comments: