Friday, November 22, 2013

நவம்பர் 24 2013 ஞாயிறு நற்செய்தி மறையுரை

நவம்பர் 24 2013 ஞாயிறு  நற்செய்தி மறையுரை
கிறிஸ்து அரசரின் பெருவிழா

2 Samuel 5:1-3
Psalm 122:1-5
Colossians 1:12-20
Luke 23:35-43


லூக்கா நற்செய்தி


35 மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், ' பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும் ' என்று கேலிசெய்தார்கள்.36 படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து,37 ' நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள் ' என்று எள்ளி நகையாடினர்.38 ' இவன் யூதரின் அரசன் ' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.39சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், ' நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று ' என்று அவரைப் பழித்துரைத்தான்.40 ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, ' கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய்.41 நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே! ' என்று பதிலுரைத்தான்.42 பின்பு அவன், ' இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் ' என்றான்.43 அதற்கு இயேசு அவனிடம், ' நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசுவோடு மற்ற சிலுவைகளில் தொங்கி கொண்டிருந்த குற்றவாளிகளில் ஒருவனை போல நாமும் இருக்கிறோம். இயேசுவின் இறையரசில், கிறிஸ்து அரசரோடு நித்தியா வாழ்வில் இணைந்து வாழவே விரும்புகிறோம்.  இந்த மனப்பான்மையோடு இருந்தோமானால், நிச்சயம், நாம் இறந்த பிறகு, பரலோக ராஜ்ஜியத்தில் இருப்போம்.



விண்ணகத்தின் ராஜாவான இயேசு, விண்ணரசிறகு யார் வரலாம், யார வர கூடாது என்று முடிவு செய்வதில் அவருக்கு அதிகாரம் உள்ளது. பெரிய வெள்ளியன்று சிலுவை மரணமடைந்த குற்றவாளிகளை ஒருவன் இதனை நமக்கு உணர்த்துகிறான். அவனிடம் இயேசு, “' நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்” என்று அவரிடம் சொல்லி, அவருக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதை நமக்கு எல்லாம் காட்டுகிறார்.

இயேசுவின் அதிகாரம் என்ன என்று பார்ப்போம். கடைசி இரா உணவின் பொழுது, சீடர்களின் பாதங்களை கழுவியபோழுது, விண்ணக அரசர், தனது அதிகாரத்தை, இறையரசின் சார்ந்தவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நமக்கு காண்பிக்கிறார்.


அதற்கு மறுநாள், தங்கத்தினால் ஆனால் கிரீடம்  சுட்டி கொள்ளாமல், முள்ளினால் ஆன கிரிடம் சுட்டி கொண்டார். ஏனெனில், கிறிஸ்துவின் அரசின் புகழ் , இவ்வுலக ஆபரணங்களால், ஆனது அல்ல, மாறாக அன்பினால், மற்றவர்கலுக்காக நாம் செய்யும் தியாகம் பெரியது. அந்த தியாகத்திற்கு , அவர்கள் தகுதியானவர்கள் இல்லையென்றால் கூட , அவர்களுக்காக தியாகம் செய்வது, இறையரசின் கருணையாகும்.

அவர் உயிர்த்து எழுந்த பின்பு, மரணத்தின் அழிவிழுருந்து,, அவரது காயங்கள் ஆறிவிட்டாலும், அவரின்  ஐந்து காயங்கள் ஆறவில்லை. இன்று வரை , அவர் அதனை தனது உடலில் இருக்கிறது. இதன் முலம் நாம் அறிவது என்ன என்றால், அவர் அதிகாரத்தை , அவருக்காக உபயோகித்து கொள்ளவில்லை மாறாக, நமக்காக எல்லாம் செய்தார். இந்த உலக அரசர்கள், விலை மதிப்பு மிக்க மோதிரத்தை அணிந்திருக்கிராற்கள். நமது மோட்சத்தின் அரசரோ, அவரின் தியாக அடையாளங்களை அணிந்து இருக்கிறார்.


நாம் அனைவரும், கடவுளரசின் பிள்ளைகள் ஆவோம்.எப்பொழுது?  கிறிஸ்துவோடு இணைந்து, அன்போடு, நாம் மற்றவர்களுக்கு சேவை செய்யும்பொழுது, தாராளமாக மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுதும், நமது அன்பிற்கு தகுதியில்லாதவர்களுக்கும, அன்பு செய்வதால் நாம் கடவுளரசின் பிள்ளைகள் ஆகிறோம்.

நமது துன்பங்களை, இயேசுவிடம் அர்ப்பனித்து, , அதற்கு கண்டிப்பாக மதிப்பு இருக்கிறது என்று நாம் அறிந்து, அவரிடம் அதனை சமர்ப்பிக்கிறோம். இயேசு ஐந்து காயங்களையும் நமது ஆன்மாவில் சுமப்போம். கண்டிப்பாக ஏசுவோடு அவரது பேரரசில் இணைவோம். இப்பொழுதே நாம் அவரோடு இணைந்து விட்டோம்.


© 2013 by Terry A. Modica

No comments: