Friday, February 28, 2014

மார்ச் 2, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மார்ச் 2, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 8ம் ஞாயிறு
Isaiah 49:14-15
Psalm 62:2-3,6-9
1 Corinthians 4:1-5
Matthew 6:24-34

மத்தேயு நற்செய்தி
கடவுளா? செல்வமா?
(
லூக் 16:13)
24 ' எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.

கவலை வேண்டாம்
(
லூக் 12:22 - 34)
25 ' ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? ' 26 வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!27 கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?http://www.arulvakku.com/images/footnote.jpg28 உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.29 ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.30 நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?31 ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்.32 ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.33 ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். http://www.arulvakku.com/images/footnote.jpg34ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும. அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இயேசு மலையில் செய்த பிரசங்கங்களின் ஒரு பகுதியாக நாம் காண்கிறோம். நாம் எப்படி வாழ வேண்டும் என்ற படிப்பினையை நமக்கு அவரின் போதனையின் மூலமும், அவரின் வாழ்வின் மூலமும் கொடுக்கிறார். இதே வழிகாட்டுதலை தான் ‘பரலோகத்தின் இருக்கிற’ ஜெபத்திலும், இயேசு சொல்கிறார். ‘எங்கள் அனுதின உணவை எங்களுக்கு அளித்தருளும்’ என்று ஆரம்பிக்கிறது. இந்த மலை பிரசங்கத்திலும், அவர் நமக்கு கொடுத்த ஜெபத்திலும், நமது அனுதின தேவைகளை கடவுளிடம் நம்பி அவரிடம் விட்டு விட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு சோதனையிலும், ஒவ்வொரு சவால்களிலும், ஒவ்வொரு கஷ்டத்திலும், நாம் கடவுளை நம்பி அதனை கையாள்வோம், அல்லது, இந்த உலக வழியில், நமக்கிருக்கும் குறைவான புரிதலோடு, நாம் அதனை அணுகுவோம். இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. இருந்தாலும், நாம் நம்மையே ஏமாற்றி கொண்டு, ஒரு காலை மோட்சத்தை நோக்கியும், ஒரு காலை இந்த உலக வழியிலும் வைத்து நம் பிரச்சினைகளை அணுகுகிறோம்.

“செல்வம்” என்ற வார்த்தைக்கு, அராமிய வார்த்தையில், “சொத்து”, அல்லது “நிலம்” என்று பொருள். நம்மிடையே சிலர் இப்படி சொல்வதுண்டு, ஒருவன் “எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்” என்று கடவுளிடம் ஜெபித்தான். அதற்கு கடவுள் “உன்னிடம் ஏற்கனவே அதிகம் இருக்கிறது, மற்ற மக்களின் உணவும் உன்னிடத்தில் இருக்கிறது “ என்று பதிலுரைத்தார். மற்றவர்களின் தேவையை போக்குவதற்கு உங்களிடம் என்ன இருக்கிறது? நாம் நமது எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கிறோம், ஆனால் சிலர் கொஞ்சம் கூட இல்லாமல், அதனை அடைவதற்கு போராடி வருகின்றனர் . நம்மிடம் அதிகம் உள்ளதை அவர்களுக்கு கொடுக்க நமக்கு பயமாக இருக்கிறது.  வருங்காலத்தில் அது நமக்கு தேவையாக இருக்கும் என நினைக்கிறோம். (அதிக கத்தோலிக்கர்கள், கோவிலுக்கு அல்லது பொது அன்பளிப்புகள் கொடுப்பதற்கு இந்த காரணத்தினால் தான் பயப்பட்டு கொடுப்பதில்லை)
நம் நினைப்பும், அப்படி தான் என்றால், நாம் நம்மை கடவுள் முழுதுமாக காத்து கொள்வார் என்று நம்பவில்லை. நாம் மற்றவர்களுக்கு காட்டும் தாராள குணத்தை, கடவுள் நமக்கு காட்ட மாட்டார் என்ற அனுமானத்தோடு இருக்கிறோம்.
அதனால் தான், இயேசு “நீங்கள் மிகவும் கவலைபடுகிறீர்கள்” என்று சொல்கிறார். நாம் நம் கவலைகளை விட்டு விட்டு, கடவுளை நோக்கி நமது கவனம் இருக்க வேண்டும்.

இயேசு சொல்கிறார்: “ கடவுள் உங்களை அதிகம் அன்பு செய்கிறார், அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.”


இயேசுவை விட்டு நமது கண்களை எடுத்து விடும் கவலை ஒரு பாவமாகும். இயேசு நம் வழியாக மற்றவர்களுக்கு கொடுக்க ஆசிப்பதை,  குணத்தை நமது கவலைகள் தடுத்து விடுவதால் அது பாவமாகும்.
© 2014 by Terry A. Modica 
Facebook

Friday, February 21, 2014

பிப்ரவரி 23, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 23, 2௦14  ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 7ம் ஞாயிறு
மத்தேயு நற்செய்தி
Leviticus 19:1-2, 17-18
Psalm 103:1-4,8,10,12-13
1 Corinthians 3:16-23
Matthew 5:38-48

38 ' கண்ணுக்குக் கண் , பல்லுக்குப் பல் என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.40 ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள்.41 எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.42உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.
(Thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியை புரிந்து கொள்வது, இரக்கம் தான் முக்கிய காரணியாக இருக்கும். அன்பு தான் மற்றவர்களின் இருதயத்திற்குள் நுழைய முதல் படியாக இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். அவர்கள் அதனை மூடி விட்டால், இரக்கத்தினால், பின் கதவு வழியாக நுழையலாம்.


அந்த காலங்களில், ஒருவன் மற்றொருவனின், கண்ணை காயப்படுத்தி விட்டால், காயம் பட்டவன், அவனை பிடித்து, அவன் பரம்பரையே தண்டனை கொடுப்பான். அதனால், தான், இயேசு இந்த சட்டத்தை எல்லாரையும் ஒன்றிணைக்க அன்பினால், ஆன சட்டத்தை கடவுள் கொடுக்கிறார். உங்கள் கண்ணை யாராவது காயப்படுத்திவிட்டால், அதையே நாம் அவருக்கும் செய்ய முடியும். இது அன்பில்லாத நிலையாக இருந்தாலும், நியாயமானது கூட. (உலகளவில்)
இயேசு இந்த இடத்தில் வந்த பொழுது, அவர் நம் எல்லோரின் தரத்தையும் உயர்த்தினார்: உங்களை யாராவது, காயப்படுத்தினால், அவர்களை அன்பு செய் என்று சொல்கிறார்.
மற்றவர்கள், நமக்கு எதிராக பாவம் செய்யும்பொழுது, கடவுளின் அன்பை பெற அவர்களின் இருதயத்தை மூடி விட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், நாம் அவர்களை தொடர்ந்து அன்பு செய்தால், நாம் கடவுளை அவர்களுக்கு பின் கதவு வழியாக கொடுக்கிறோம்.
அதற்காக, அந்த பாவ வழியிலேயே நாம் தொடர்ந்து இருக்க வேண்டும், என்று அவசியமில்லை. ஆனால், தொடர்ந்து, நாம் அவர்களை அன்பு செய்து கொண்டிருந்தால், -- அதிக தூரத்தில் இருந்தாலும் – நாம் கடவுளின் குணமளிக்கும் அன்பினை நாம் கொண்டு வருகிறோம்.

அநீதியாக யாராவது, உங்கள் பொருளை எடுத்து கொண்டாலோ, அல்லது, உங்களிடமிருந்து அதிகமான பொருட்களை கேட்டால், அவர்களுடைய அதீத ஆசையை நிறுத்த முடியாவிட்டாலும், அவர்கள் பாவம் செய்வதை தடுக்க முடியும். அவர்களுக்கு என்ன தேவையோ அதனை கொடுத்து விடு. தாராளமான அன்பினால், இன்னும் அதிகம் கொடு, இது பொருத்தமாக கூட இருக்காது, ஆனால், இதை தான் இயேசு சரியாக சொல்கிறார். தெய்வத்திற்கு அது தான் சரி.

ஒரு பெண் அவள் வீட்டு வேலைகளை உங்களை செய்ய சொன்னால், ஏனெனில், அவள் சோம்பேறி, அவளின் பாவத்தை, தவிர்க்க, அவள் சொல்வதை கேட்டு, அதனை செய். இன்னும் என்ன செய்ய வேண்டும் என கேள்.
இயேசுவின் திட்டங்கள், நம் மூலம் நிறைவேறுகிறது, கடவுளின் அன்பு எல்லாவற்றையும் விட மென்மையானது. அன்பு தான் சாத்தானை வெற்றி கொள்ளும்.
இப்படி தான் மிக சரியாக நம்மால் இருக்க முடியும். இது தான் பிழையற்ற வாழ்வு. பைபிளில், பிழையற்ற  , தலை சிறந்த வாழ்வு என்பது முழுமையான, எல்லையில்லாத, இரக்கத்தின் அன்பு ஆகும்.

© 2014 by Terry A. Modica

Friday, February 14, 2014

பிப்ரவரி 16, 2௦14 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை


பிப்ரவரி 16, 2௦14 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 6ம் ஞாயிறு
Sirach 15:15-20
Psalm 119:1-2,4-5,17-18,33-34
1 Cor 2:6-10
Matthew 5:17-37

மத்தேயு நற்செய்தி


திருச்சட்டம் நிறைவேறுதல்
17 ' திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.18 ' விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.19எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.20 மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.

சினங்கொள்ளுதல்
21 ' கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர் ' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்.22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ' தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ' முட்டாளே ' என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ' அறிவிலியே ' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.23 ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,24 அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.25உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்து கொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.26கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.

விபசாரம்
(
மத் 19:9; மாற் 10:11, 12; லூக் 16:18)
27 ' விபசாரம் செய்யாதே ' எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.28 ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.29 உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.30 உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.31 ' தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும் ' எனக் கூறப்பட்டிருக்கிறது.32 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.

ஆணையிடுதல்
33 ' மேலும், ″ பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர் என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்.34 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை.35 மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம்.36 உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது.37 ஆகவே நீங்கள் பேசும்போது ' ஆம் ' என்றால் ' ஆம் ' எனவும் ' இல்லை ' என்றால் ' இல்லை ' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.
(thanks to www.arulvakku.com)
இயேசுவின் காலத்தில் இருந்த யூத மத குருக்கள், கடவுளின் கட்டளையை அப்படியே பின் பற்ற வேண்டும் என்ற வழக்கத்தில் இருந்தனர். எனினும் , இயேசு, அந்த சட்டங்களின் ஆழ்ந்த அர்த்தங்களை எடுத்து கூறினார். இந்த சட்டங்களின் முக்கிய நோக்கத்தை வைத்தே அதன் விளக்கத்தை கூறினார் : அன்பு

இன்றைய நற்செய்தியில், இயேசு ஒவ்வொரு சட்டங்களையும் நாம் சரியாக கடைபிடிப்பதில்லை ஏனெனில், நமது அன்பினால் அதனை கடைபிடிப்பதில்லை  என்று நமக்கு விளக்குகிறார்.
இயேசு சட்டங்களின் உண்மையான அர்த்தத்தோடு அதனை கடைபிடித்தார். அதனால் தான், நம் கீழ்படியாமைக்காக , நமக்காக மரணித்து , அவரது எல்லையில்லா அன்பை நமக்கு கொடுத்தார் .
கிறிஸ்துவை பின்பற்றுபவர்களான நாமும், தாராளாமாக அன்பில் நிலைத்திருக்க வேண்டும். எல்லா கட்டளைகளையும் கடைப்பிடித்து, - உண்மையான கீழ்படிதல் உடன் – முழு இருதயத்தோடு, கடவுளின் அன்பை வேண்டி, எல்லா நேரங்களிலும்,  நம் மேல் நாம் அன்பு செலுத்துவது போல, மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும்.

வார்த்தைகளின் அர்த்தத்தை எப்படி அன்பின் கட்டளையாக மாற்ற முடியும் என்பதை இயேசு விளக்கி சொல்கிறார். ஒவ்வொரு மாதிரியிலும், இயேசு, மிகுந்த அன்பின் ஊடாக அந்த பிரச்சினைகளை கையாள வேண்டும் என்று சொல்கிறார். அந்த பிரச்சினைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அன்பினாலேயே அதனை கையாளவேண்டும் என்று நமக்கு விளக்குகிறார்

இயேசுவின் முதல் தலைப்பு கோபம்: கோபம் கொள்கிறவர் தன்டனைக்குள்ளானவர் என்று கூறுகிறார். அதற்கு பரிகாரத்தையும் கூறுகிறார். யாரோடு பகை உண்டோ அவர்களிடத்தில் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இதனை, கடவுளை ஆராதனை செய்வதை விட முக்கியமானது என்பதை வலியுறுத்தி கூறுகிறார். நமது கோபம் , அன்பினால் மாற்றப்பட்டவுடன் கடவுளை ஆராதிப்பது எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள்? கடவுளே அன்பானவர்?
அடுத்த விசயமாக, அதிக ஆசை கொள்தளையும், இச்சையையும் பற்றி பேசுகிறார். இது அன்பிற்கு எதிரானது. ஏனெனில், மற்றவர்ல ஒரு பொருளாகவே கையாள படுகிறார்கள். சரியான திருமணத்திலிருந்து விலகுவது என்பது , கிறிஸ்து அன்பு செய்வது போல நம்மால் அன்பு செய்ய இயலவில்லை என்பதை காட்டுகிறது. கிறிஸ்து முழுமையான அன்பை கொடுத்து, கஷ்டமான நேரங்களில், தியாகத்தையும் அன்பையும் செய்தல் வேண்டும் என்று நமக்கு படிப்பினை கொடுக்கிறார் மறு மனம் என்பது, முன்றைய திருமணத்தில் கணவனையோ மனைவியையோ நாம் அன்பு செய்யாமல் இருக்கிறோம் என்பதை குறிக்கிறது.
இந்த போதனைகளை வாழ்க்கையின் மற்ற பாகங்களுக்கும் இயேசு கொண்டு செல்கிறார். ஒரு சத்தியத்தை உடைப்பது என்பது அன்பிற்கு எதிரானது. பொய் சொல்வதும், பொறுப்புகளை தட்டி கழிப்பதும் அன்பிற்கு எதிரானது. இந்த நற்செய்தியோடு இணைந்த எல்லா மலை பிரசங்கங்களும் , எப்படி அன்பு செய்வது என்று விளக்கப்பட்டுள்ளது.
© 2014 by Terry A. Modica


Friday, February 7, 2014

பிப்ரவரி 9, 2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை


பிப்ரவரி 9, 2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 5ம் ஞாயிறு
Isaiah 58:7-10
Ps 112:4-9
1 Cor 2:1-5
Matthew 5:13-16

மத்தேயு நற்செய்தி (5:13-16)
13 ' நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.14 நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.15 எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.16இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க அப்பொழுது   அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், இயேசு “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்” என்று நம்மிடம் சொல்கிறார். உப்பாக இருப்பதன் அர்த்தம் என்ன? உப்பு என்ன செய்கிறது என்று யோசித்து பாருங்கள். உப்பு  உணவிற்கு சுவையை கூட்டுகிறது.
உப்பின் உவர்ப்பு போய்விட்டால் என்ன ஆகும் என்ற கேள்வியையும் இயேசு எழுப்புகிறார். அதனை மீண்டும் பெறுவது எப்படி? அதற்கு பதில்: கடவுள் நம்மை மீண்டும் உப்பாக கடவுள் மாற்ற நாம் அனுமதிக்க வேண்டும்
உங்கள் ஞானஸ்நாணத்தில், நீங்கள் உப்பு சுவை உள்ளவராக மாற்றப்படுகிறிர்கள், கடவுளின் உயிரான அன்புடனும், அமைதியுடனும், மகிழ்வுடனும் கலக்கிறீர்கள் . பயனுள்ள கிறிஸ்தவர்கள், அவர்கள் மத, மன மாற்றத்தின் போது, கடவுளின் வாழ்க்கையுடன் – கடவுளின் அன்பு, அமைதி, மகிழ்ச்சி மற்றும் பல -  அனைத்தும் அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும் அதநை பகிர்ந்து கொள்வர்.

ஆனால், அதிகமாக முயற்சி செய்வது பற்றி கவனத்துடன் இருங்கள்!, உப்பு அதிகமான உணவை என்ன செய்வீர்கள்? சுவை அவ்வளவு நன்றாக இருக்காது. நம் எவ்வளவு நல்ல எண்ணத்துடன் இருந்தாலும், அதிகமாக முயற்சி செய்தால், அது நல்லது செய்வதை விட கெட்டதாக தான் முடியும்
இயேசுவின் அன்பை நம்மிடமிருந்து பெறுபவர்கள், அவர்களை நாம் நடத்தும் விதத்தில்,இயேசுவின் அவரின் அமைதியை அவர்களிடம் நாம் கொடுக்கும் பொழுது, அவரின் சந்தோசத்தை நம் வாழ்வின் மூலம்  உடனடியாக இயேசுவின் பக்கம் திரும்புவர். அவர்கள் எப்படி இருந்தாலும், அவர்களை இயேசு அன்பு செய்ய தயாராக இருக்கிறார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இயேசு மிகவும் மென்மையானவர், பரிசுத்த வாழ்வில் வளர உண்மையாக இயேசு உதவுகிறார். பிரச்சினைகளை , கஸ்டங்களை ஆசிர்வாதமாகவும், சந்தோசமாகவும் மாற்றக்கூடியவர் இயேசு என்று அவர்கள் அறிதல் வேண்டும்
இயேசு நம்மை ஒளியாக இருக்கவும் அழைக்கிறார். அதனை மற்றவர்களுக்கு தெரியும்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறார். – ஆனால், மற்றவர்களின் கண்களை மூடும் அளவிற்கு அந்த ஒளி இருக்க கூடாது. மற்றவர்களின் வாழ்வில்  இயேசுவின் பிரசன்னத்தை கொண்டுவர, நாம் இயேசுவின் ஒளியை நம்மில் ஒளிர விட வேண்டும். கிறிஸ்து நம்மில் ஒளிர நாம் அனுமதித்து, அதனை மற்றவர்கள் கவனிக்க செய்தல் வேண்டும்.
கூடுதலாக, இயேசு நாம் அனைவரும், ‘நகர்’ ஆக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். நாம் தனியாக இருந்தால், நம்மால் மன மாற்றம் செய்ய முடியாது. ‘நகர்’ என்றால், கிறிஸ்தவர்களின் குழு: ஒரு பங்கு, குடும்பம், கோவில் குழு. கிறிஸ்தவர்களாக இருப்பது என்பது, கிறிஸ்தவ குழுவோடு இருத்தல் ஆகும். நம் ஒளி மற்றவர்களின் ஒளியோடு இணையும் பொழுது, எல்லா ஒளியும் இணைந்து உலகிற்கு கிறிஸ்துவை இன்னும் பெரிதாக காட்ட முடியும். என்? ஏனெனில், கிறிஸ்துவை நம்பாதவர்கள், இதனை பார்த்து இவ்வளவு பேர், கிறிஸ்துவின் அன்புடன் கலந்து, ஒருவருக்கொருவர் அன்போடு இருக்கிறார்களே: எவ்வித நிபந்தனையுமின்றி, தாராள குணத்துடன், ஒரு பணியாளின் குணத்தோடு அன்புடன் இருப்பதை அவர்கள் பார்க்க முடியும்
நம் ஒருவருக்கொருவர் கிறிஸ்துவின் ஒளியாக மற்றவர்களுக்கு இருக்கிறோம். ஒருவருக்கொருவர் உப்பாக சுவை ஊதடுக்கிறோம். மற்றவர்களின் துணை இல்லாமல், நமது ஒளி சற்று மங்கி தான் காணப்படும். நமது உப்பு சுவை உவர்ப்பாக காண்பிக்கும். மேலும், கடவுளின் இறையரசில் நாம் உதவாதவனாகி விடுவோம்.

© 2014 by Terry A. Modica

Saturday, February 1, 2014

பிப்ரவரி 2 2௦14 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 2 2௦14 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டவரின் காணிக்கை பெருவிழா
Malachi 3:1-4
Ps 24:7-10
Hebrews 2:14-18
Luke 2:22-40


இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்
22 மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.23 ஏனெனில், ' ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் ' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.24 அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.25 அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.26 ' ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை ' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,29 ' ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.30ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,31 நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை ' என்றார்.33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, ' இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் ' என்றார்.36 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்;37 அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.38 அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.

நாசரேத்துக்குத் திரும்பிச் செல்லுதல்
39 ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.40 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறில் ஆண்டவர் இயேசுவை காணிக்கையாக ஒப்பு கொடுக்கப்பட்டதை கொண்டாடுகிறோம். குழ்ந்தை இயேசு கடவுளுக்கு அர்ப்பநிக்கப்பட்டதால், அவரின் முழு வாழ்வும் , அவரது இறப்பும் கூட கடவுளுக்கு ஒப்புகொடுக்கபட்டது – நமக்காக .

உங்கள் வாழ்வை கடவுளுக்கு ஒப்பு கொடுத்துள்ளீர்களா?

உங்கள் இறப்பையும் கடவுளுக்கு அர்ப்பணித்தால் என்ன? உங்கள் கடைசி மூச்சு கூட இறைவனுக்கு சேவை செய்ய நீங்கள் கடவுளிடம் கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும். நீங்கள் இவ்வுலகை விட்டு மோட்சத்திற்கு செல்லும்பொழுது எந்த மாதிரியான தேவ சாட்சியத்தை இங்கே விட்டு செல்ல இருக்கிறீர்கள்?

உங்கள் ஞானஸ்நாணத்தில் நீங்கள் கிறிஸ்துவின் வாழ்விலும், மரணத்திலும், அவரின் இரத்சிப்பிலும் மீண்டும் பிறக்கிறீர்கள், ஆனால், முழு மனதோடு, முழு இருதயத்தோடு  நீங்கள் உங்களை அவருக்கு அற்பணித்தீர்களா? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணப்பொழுதும் இந்த  அர்ப்பணிபை நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்  ஞானஸ்நாணத்தில் மட்டுமல்ல.

இதற்கு அர்த்தம் என்ன என்றால், தொடர்ந்து நம் ஜெபித்து கொண்டே இருக்க வேண்டும், எவ்வளவு வேலை இருந்தாலும்

இதன் அர்த்தம் என்ன என்றால், ஒவ்வொரு சூழ் நிலையிலும், அதற்கு தகுந்தார் போல நாம் நடந்து கொள்ளாமல், கடவுளின் விசுவாசத்தின் மூலம் நாம் நடந்து கொள்ள வேண்டும்.

இதற்கு அர்த்தம் என்ன என்றால், முழு இருதயத்தோடு எந்நேரமும் கடவுளோடு தொடர்பில் இருக்க வேண்டும் , அப்படியில்லாமல், நாம் கடவுளோடு தொடர்பில் இருக்கிறோம் என்ற நினைப்பில் இருந்து விட்டு, நாம் நினைவுகளை வேறு இடத்தில் செலுத்தாமல் இருக்க வேண்டும்.
இதன் அர்த்தம் என்ன என்றால், இவ்வுலக ஆசைகளோடு , நாம் எப்படி ஒட்டி வாழ்கிறோம் என்பதை கண்டு பிடித்து , அதனை விட்டு விட்டால், நாம் கடவுளோடு இணைந்து வாழலாம்.

இதன் அர்த்தம் என்ன என்றால், எப்பொழுதுமே ஆவியில் விழிப்பாயிருப்பது .

இதன் அர்த்தம் என்ன என்றால், பரிசுத்த வாழ்வில் ஒவ்வொரு நாளும் வளர்வது.


இதன் அர்த்தம் என்ன என்றால் – தொடர்ந்து, நமக்குள்ளேயே, “கடவுளின் அன்பை நாம் முழுதுமாக இக்கணம் அனுபவிக்கிரோமோ? அப்படி இல்லையென்றால் , அவரின் அன்போடு இணைய நாம் என்ன செய்ய வேண்டும். “ என்ற கேள்விகளோடு, இன்னும் “அவரின் அன்பில் வாழ, மிகவும் கடினமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு நம்மிடம் உள்ளதை கொடுக்கிறோமோ? அல்லது அன்போடு வாழ என்னை நானே உட்படுத்தி கொள்கிரேனா?” என்ற கேள்விகளையும் நாம் கேட்டு நாம் திருந்தி வாழவேண்டும்.

© 2014 by Terry A. Modica