பிப்ரவரி 9,
2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 5ம் ஞாயிறு
Isaiah 58:7-10
Ps 112:4-9
1 Cor 2:1-5
Matthew 5:13-16
Ps 112:4-9
1 Cor 2:1-5
Matthew 5:13-16
மத்தேயு
நற்செய்தி (5:13-16)
13 ' நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக்
கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில்
கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.14 நீங்கள்
உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர்
மறைவாயிருக்க முடியாது.15 எவரும் விளக்கை ஏற்றி
மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள
அனைவருக்கும் ஒளி தரும்.16இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க
அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக்
கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
இன்றைய நற்செய்தியில், இயேசு “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்” என்று நம்மிடம் சொல்கிறார். உப்பாக இருப்பதன் அர்த்தம் என்ன? உப்பு என்ன செய்கிறது என்று யோசித்து பாருங்கள். உப்பு உணவிற்கு சுவையை கூட்டுகிறது.
உப்பின்
உவர்ப்பு போய்விட்டால் என்ன ஆகும் என்ற கேள்வியையும் இயேசு எழுப்புகிறார். அதனை
மீண்டும் பெறுவது எப்படி? அதற்கு பதில்: கடவுள் நம்மை மீண்டும் உப்பாக கடவுள்
மாற்ற நாம் அனுமதிக்க வேண்டும்
உங்கள்
ஞானஸ்நாணத்தில், நீங்கள் உப்பு சுவை உள்ளவராக மாற்றப்படுகிறிர்கள், கடவுளின்
உயிரான அன்புடனும், அமைதியுடனும், மகிழ்வுடனும் கலக்கிறீர்கள் . பயனுள்ள
கிறிஸ்தவர்கள், அவர்கள் மத, மன மாற்றத்தின் போது, கடவுளின் வாழ்க்கையுடன் –
கடவுளின் அன்பு, அமைதி, மகிழ்ச்சி மற்றும் பல -
அனைத்தும் அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும் அதநை பகிர்ந்து கொள்வர்.
ஆனால், அதிகமாக
முயற்சி செய்வது பற்றி கவனத்துடன் இருங்கள்!, உப்பு அதிகமான உணவை என்ன
செய்வீர்கள்? சுவை அவ்வளவு நன்றாக இருக்காது. நம் எவ்வளவு நல்ல எண்ணத்துடன்
இருந்தாலும், அதிகமாக முயற்சி செய்தால், அது நல்லது செய்வதை விட கெட்டதாக தான்
முடியும்
இயேசுவின்
அன்பை நம்மிடமிருந்து பெறுபவர்கள், அவர்களை நாம் நடத்தும் விதத்தில்,இயேசுவின்
அவரின் அமைதியை அவர்களிடம் நாம் கொடுக்கும் பொழுது, அவரின் சந்தோசத்தை நம்
வாழ்வின் மூலம் உடனடியாக இயேசுவின் பக்கம்
திரும்புவர். அவர்கள் எப்படி இருந்தாலும், அவர்களை இயேசு அன்பு செய்ய தயாராக
இருக்கிறார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இயேசு மிகவும் மென்மையானவர்,
பரிசுத்த வாழ்வில் வளர உண்மையாக இயேசு உதவுகிறார். பிரச்சினைகளை , கஸ்டங்களை
ஆசிர்வாதமாகவும், சந்தோசமாகவும் மாற்றக்கூடியவர் இயேசு என்று அவர்கள் அறிதல்
வேண்டும்
இயேசு நம்மை
ஒளியாக இருக்கவும் அழைக்கிறார். அதனை மற்றவர்களுக்கு தெரியும்படி இருக்க வேண்டும்
என்று கூறுகிறார். – ஆனால், மற்றவர்களின் கண்களை மூடும் அளவிற்கு அந்த ஒளி இருக்க
கூடாது. மற்றவர்களின் வாழ்வில் இயேசுவின்
பிரசன்னத்தை கொண்டுவர, நாம் இயேசுவின் ஒளியை நம்மில் ஒளிர விட வேண்டும். கிறிஸ்து
நம்மில் ஒளிர நாம் அனுமதித்து, அதனை மற்றவர்கள் கவனிக்க செய்தல் வேண்டும்.
கூடுதலாக,
இயேசு நாம் அனைவரும், ‘நகர்’ ஆக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். நாம் தனியாக
இருந்தால், நம்மால் மன மாற்றம் செய்ய முடியாது. ‘நகர்’ என்றால், கிறிஸ்தவர்களின்
குழு: ஒரு பங்கு, குடும்பம், கோவில் குழு.
கிறிஸ்தவர்களாக இருப்பது என்பது, கிறிஸ்தவ குழுவோடு இருத்தல் ஆகும். நம் ஒளி
மற்றவர்களின் ஒளியோடு இணையும் பொழுது, எல்லா ஒளியும் இணைந்து உலகிற்கு கிறிஸ்துவை
இன்னும் பெரிதாக காட்ட முடியும். என்? ஏனெனில், கிறிஸ்துவை நம்பாதவர்கள், இதனை
பார்த்து இவ்வளவு பேர், கிறிஸ்துவின் அன்புடன் கலந்து, ஒருவருக்கொருவர் அன்போடு
இருக்கிறார்களே: எவ்வித நிபந்தனையுமின்றி, தாராள குணத்துடன், ஒரு பணியாளின்
குணத்தோடு அன்புடன் இருப்பதை அவர்கள் பார்க்க முடியும்
நம்
ஒருவருக்கொருவர் கிறிஸ்துவின் ஒளியாக மற்றவர்களுக்கு இருக்கிறோம். ஒருவருக்கொருவர்
உப்பாக சுவை ஊதடுக்கிறோம். மற்றவர்களின் துணை இல்லாமல், நமது ஒளி சற்று மங்கி தான்
காணப்படும். நமது உப்பு சுவை உவர்ப்பாக காண்பிக்கும். மேலும், கடவுளின் இறையரசில்
நாம் உதவாதவனாகி விடுவோம்.
© 2014 by Terry A. Modica
No comments:
Post a Comment